சுற்றுலா தலங்கள் கட்டுரை

sutrula thalangal katturai in tamil

இந்த பதிவில் “சுற்றுலா தலங்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

இந்தியாவில் எண்ணற்ற பல அழகான அற்புதமான சுற்றுலா தலங்கள் பல அமைந்திருக்கின்றன.

சுற்றுலா தலங்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இந்தியாவின் தனித்துவம்
  • இயற்கை வனப்பு நிறைந்த இடங்கள்
  • கலைசார் தலங்கள்
  • ஆன்மீக தலங்கள்
  • முடிவுரை

முன்னுரை

உலக நாடுகளின் மத்தியில் இந்தியா தனித்துவம் பெற்று விளங்க அதன் எழில் கொஞ்சும் இயற்கையும், பிரமாண்டமான வரலாற்றை உடைய நகரங்களும், கலை வெளிப்பாட்டுடன் கூடிய பிரமிக்க வைக்கும் கட்டடங்களும், வண்ணமயமான கலாச்சாரங்களும், மெய்சிலிர்க்க செய்யும் ஆன்மீக தலங்களும் ஒருங்கே கொண்டிருப்பதுவே காரணமாகும்.

வருடந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவை சுற்றி பார்க்க வருகின்றார்கள். இக்கட்டுரையில் இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலங்கள் பற்றி காண்போம்.

இந்தியாவின் தனித்துவம்

புவியியல் ரீதியாக ஒரு தீபகற்பமாக விளங்கும் இந்தியா மத்தியகோட்டை அண்டிய மிதவெப்பமான காலநிலையினை கொண்டுள்ளது.

வடக்கே இமய மலையினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும், மேற்கே அரபிக்கடலினையும், தெற்கே இலங்கை தீவையும் எல்லையாக கொண்ட இந்தியா பிரமாண்டமான மலைகள், நீண்டுவிரிந்த ஆறுகள், அழகான சமவெளிகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் நிறைந்த அழகான தேசமாகும்.

இதற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல தனித்துவமான கலை கலாச்சாரங்களை உடைய பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடாக உள்ளது.

இயற்கை வனப்பு நிறைந்த இடங்கள்

இந்தியாவில் இயற்கை அழகு நிறைந்த என்றும் பசுமையான காடுகள் மற்றும் ஏழு புண்ணிய நதிகள் இந்தியாவை வளப்படுத்துகின்றன.

காஷ்மீர், மேகலாய மலைத்தொடர்கள், இமய மலைச்சாரல், டார்ஜிலிங் போன்ற இடங்கள் இவற்றுக்கு பிரபல்யமானவை.

மற்றும் கண்ணை கவரும் அழகான மலைத்தொடர்கள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், பாதுகாக்கப்பட்ட வனங்கள் என இந்தியாவில் பல இயற்கை அழகான பிரதேசங்கள் காணப்படுகின்றன.

கலைசார் தலங்கள்

இந்தியாவின் கலைச்சிறப்பு உலகப்புகழ் பெற்றது. இந்தியாவின் பெருமையினை உலகறிய செய்யும் பல கட்டடக்கலை அதிசயங்களை நாம் இன்றும் காணமுடியும்.

உதாரணமாக ஆக்ராவின் தாஜ்மகால், மைசூரின் அரண்மனை, தங்க கோவில், அஜந்தா குகை ஒவியங்கள், மாமல்லபுரம் சிற்பங்கள், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் அரண்மனை இவை போன்ற ஏராளமான கலை வெளிப்பாடுகளுடைய இடங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

ஆன்மீக தலங்கள்

உலகத்தின் மிகவும் முக்கியமான மதங்களாக கருதப்படும் இந்து மதம் மற்றும் பௌத்த மதம் என்பன இந்தியாவில் தான் தோன்றி வளர்ந்து உலகமெங்கும் பரவின அதற்கு சான்றாக இந்தியாவில் பல மத அடையாளங்களையும் ஆலயங்களையும் எம்மால் பார்க்க முடியும்.

எடுத்துக்காட்டாக காசி வாரணாசி, திருப்பதி, தஞ்சாவூர், சிறீரங்கம் சபரிமலை, இமயமலை என பலகையான பிரபல்யமான இந்து மத ஆலயங்களும் அதனோடு இணைந்த கலாச்சாரங்களையும் நாம் இங்கே அவதானிக்க முடியும்.

இந்தியர்கள் மதங்கள் மீதும் தமது கலாச்சாரத்தின் மீதும் கொண்டிருக்கும் அதீத பற்றினை இந்த தலங்களை தரிசிக்கும் போது வெளிநாட்டவர்கள் உணர்ந்து கொள்கின்றனர்.

முடிவுரை

இவ்வாறு இந்தியாவில் எண்ணற்ற பல அழகான அற்புதமான சுற்றுலா தலங்கள் பல அமைந்திருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து பலர் இந்தியாவை காண ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் நமது நாட்டவர்கள் அதிகம் இது பற்றி அக்கறை கொள்வதில்லை நமது நாட்டின் தனித்துவமான விடயங்களை நாம் தவறாது கண்டு அதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

You May Also Like:
சுற்றுலா வளர்ச்சி கட்டுரை
உலக சுற்றுலா தினம்