தற்கால கல்வியில் அறிவியலின் தாக்கம் கட்டுரை

tharkala kalviyil ariviyalin thaakam

இந்த பதிவில் “தற்கால கல்வியில் அறிவியலின் தாக்கம் கட்டுரை” பதிவை காணலாம்.

தினந்தோறும் பல்வேறு துறைகளிலும் அறிவியல் தனது ஆழமான தடத்தை பதித்து வருகின்றது.

தற்கால கல்வியில் அறிவியலின் தாக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கல்வித்துறையின் வளர்ச்சி
  3. அறிவியல் வளர்ச்சி
  4. அறிவியல் கண்டுபிடிப்புக்கள்
  5. புதிய கல்விதிட்டங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய வாழ்வில் அறிவியல் இன்றியமையாத ஒரு விடயமாக காணப்படுகின்றது. தினந்தோறும் பல்வேறு துறைகளிலும் அறிவியல் தனது ஆழமான தடத்தை பதித்து வருகின்றது.

மக்களினுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுடன் பல சவால்களுக்கும் தீர்வுகளை கண்டுபிடிப்பதனால் தான் அறியியலுக்கு அதிகளவான முக்கியத்துவத்தை மனிதன் வழங்குகின்றான். இக்கட்டுரையின் மூலம் இதன் தாக்கம் தொடர்பாக நாம் இங்கே நோக்கலாம்.

கல்வி துறையின் வளர்ச்சி

மனிதன் நாகரீகமடைய துவங்கியதில் இருந்து உலகளவில் கல்வித்துறை மிக விரைவாக வளர்ச்சி கண்டது. கல்வியறிவு வீதம் அதிகரித்தமையினால் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி உயர்நிலையினை அடைந்தது.

ஆரம்பக்கல்வியில் ஆரம்பித்து உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் என கல்வித்துறையின் வளர்ச்சி உச்சம் தொட்டுவருகின்றது.

இந்த உலகத்தில் பலவகையான ஆக்கபூர்வமான வெளியீடுகள் சிறந்த கல்வியினால் சாத்தியமானது என்பது வெளிப்படை உண்மையாகும்.

அறிவியல் வளர்ச்சி

மனிதன் தனது வாழ்வில் காணப்படுகின்ற பிரச்சனைகளுக்கு நடைமுறையான தீர்வுகளை கண்டுபிடிக்க துவங்கியதில் இருந்து அறிவியல் வளர்ச்சி காண துவங்கியது.

இயந்திரங்கள், வாகனங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் என்பவற்றில் துவங்கி விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆயுத கண்டுபிடிப்பு வரை அறிவியலின் வளர்ச்சி சென்றிருக்கின்றது.

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அறிவியல் வளர்ச்சியினை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அறிவியல் கண்டுபிடிப்புக்கள்

அபரிமிதமான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைய துவங்கிய பின்னர் பல ஆயிரம் கண்டுபிடிப்புக்கள் உருவாக துவங்கின.

தொழில்துறைகள், போக்குவரத்து, வர்த்தகம், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு ஊடகங்கள் என சகல துறைகளிலும் பலவகையான புதுமையான கண்டுபிடிப்புக்கள் மனித வாழ்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல துவங்கின.

இவை தான் அடுத்த தலைமுறைக்கான புதுமையான படைப்புகள் உருவாகவும் உந்துசக்தியாகவும் விளங்குகின்றன. இதற்காக கடுமையான சவால்களை மனிதன் எதிர்கொண்டு இந்த நிலையினை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய கல்வி திட்டங்கள்

பழைய தலைமுறையினருக்கு நேர் எதிராக இன்றைய இளங்தலைமுறையினர் இளம் வயதிலேயே அறிவியிலில் அதிக ஆர்வமும் மற்றும் சிறப்பான திறன்களை கொண்டிருப்பது அவதானிக்க முடிகிறது.

இதற்கு அவர்களது கல்வி திட்டம் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையில் அதிகம் அறிவியல் தாக்கம் செலுத்துகின்றது.

இன்றைய குழந்தைகள் தொழில்நுட்ப சாதனங்களை கையாளுதல் அவற்றினை பற்றி கற்றுகொள்ளுதல் என்பவற்றை அவர்களது கல்வி திட்டத்துடனேயே உள்ளடக்கி இருப்பது கூடுதல் வளவாய்ப்பாகும்.

முடிவுரை

மனித குலத்தின் நலவாழ்வுக்கு அடிப்படையாக விளங்குவது தரமான கல்வி ஆதலால் இந்த கல்வியில் அறியவியல் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி எதிர்கால உலகை நிலைத்து நிற்க கூடிய வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதுவே பலரின் எதிர்பார்ப்பாகும்.

மாறாக அறிவியல் சூழலுக்கும் மனிதனுக்கும் நேயமற்ற பல செயல்களை ஆற்றி வருவது கண்டிக்க தக்க விடயமாக உள்ளது.

You May Also Like :
சமூக வலைத்தளங்கள் கட்டுரை
சாதனை பெண்கள் கட்டுரை