காவலர்கள் நமது தேசத்தின் கண்கள் கட்டுரை

kavalargal thesathin kangal

இந்த பதிவில் “காவலர்கள் நமது தேசத்தின் கண்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

இந்தியா உலகின் மிக முக்கியமான கேந்திர நிலையமான இந்து சமுத்திர கடல் வழிப்பாதையில் அமைந்திருக்கின்றது.

காவலர்கள் நமது தேசத்தின் கண்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சூழ்ந்திருக்கும் சவால்கள்
  • கடுமையான சூழல்
  • அர்ப்பணிப்பும் தேசப்பற்றும்
  • நிஜ கதாநாயகர்கள்
  • முடிவுரை

முன்னுரை

இந்தியா எனப்படும் தேசம் இந்திய துணைக்கண்டத்தின் பெரிய நாடாகும். உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் விளங்குகின்றது. மற்றும் உலகின் மிக முக்கியமான கேந்திர நிலையமான இந்து சமுத்திர கடல் வழிப்பாதையில் அமைந்திருக்கின்றது.

தென்னாசிய நாடுகளின் தவிர்க்க முடியாத பலமான நாடாக இந்தியா பார்க்கப்படுகின்றது.

தீவிரவாதம் மற்றும் பலமான இராணுவ அச்சுறுத்தல்களுக்கு நடுவில் பல கோடி மக்களை பாதுகாக்கும் பொறுப்பு காவலர்களான இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சூழ்ந்திருக்கும் சவால்கள்

இந்தியாவை சூழவும் பலவகையான வல்லாதிக்கமும் சவால்களும் நிறைந்த சக்திகள் காணப்படுகின்றன. உதாரணமாக பாக்கிஸ்தான், பங்காளதேசம், நேபாளம், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் எல்லை நாடுகளாக இருந்து அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுடன் நேரடியான எல்லை சார்ந்த பிரச்சனைகள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. இதன் காரணமாக பல யுத்தங்களையும் இந்தியா சந்தித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் வட பிரதேசமான ஜம்முகாஸ்மீர் பகுதி தொடர்பான பதற்றம் இந்தியா பாக்கிஸ்தான் இடையே நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது.

கடுமையான சூழல்

கடும் பதட்டமான சூழல்களில் கடுமையான இயற்கை மற்றும் காலநிலை தன்மைகளில் இந்தியாவின் எல்லை புறங்களில் இந்திய இராணுவம் கடமை புரிந்து வருகின்றது.

உறையவைக்கும் பனிபாலைவனங்கள், மிகவும் மோசமான காடுகள் மற்றும் பாலைவனங்களில் இராணுவத்தினர் இந்தியாவிற்காக தினமும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறே காவல்துறையினர் தமது நாட்டுக்குள் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அர்ப்பணிப்பும் தேசப்பற்றும்

இந்த இராணுவம் மற்றும் காவல்துறையில் கடமை புரிகின்ற ஒவ்வொருவரும் தமது குடும்பத்தையும் சொந்த ஊர்களையும் பிரிந்து கடுமையாக போராட ஒரே காரணம் அவர்களது ஆழமான தேசப்பற்று ஒன்று தான்.

தமது நாட்டையும் மக்களையும் பாதுகாத்து அவர்கள் ஒப்பற்ற அர்ப்பணிப்புள்ள தியாகத்தை செய்கின்றனர் உலகத்தில் வேறெங்கும் பார்க்க முடியாத ஒரு மகத்தான தேச உணர்வுவை அவர்களிடம் அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆதலால் தான் இந்தியா உலகில் பலமான நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

நிஜ கதாநாயகர்கள்

இன்று இளைஞர்கள் மத்தியில் பொய்யான அரசியல் செய்து மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களும் மோசடிகள் செய்து பணம் சம்பாதிப்பவர்களும் தலைவர்களாக ஏற்று கொண்டாடப்படுகின்றனர்.

சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களும் இளைஞர்களால் கொண்டாடப்படுகின்றனர்.

ஆனால் உண்மையான கதாநாயகர்களான பாதுகாப்பு வீரர்களை கொண்டாட தவறவிடப்படுகின்றமை வேதனை தருவதாக உள்ளது. இந்த நிலையானது மாற வேண்டும்.

முடிவுரை

நாம் தினமும் நிம்மதியாக உறங்குவதற்கு காரணமாக நாட்டையும் மக்களையும் பாதுகாத்து நிற்கின்ற பாதுகாப்பு வீரர்கள் மகத்தானவர்கள் அவர்களை மதித்து அவர்களுக்கான அங்கீகாரத்தை நாம் வழங்க வேண்டும்.

அவர்களது தியாகத்தையம் அர்ப்பணிப்பையும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர்களை மதிக்க கூடிய நல்ல பிரஜைகளாக நாம் இருப்பதுவே நாம் இந்த நாட்டுக்கு செய்யும் உயர்ந்த சேவையாக இருக்கும்.

You May Also Like :
மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு
நாட்டுப்பற்று கட்டுரை