மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி என்று புகழப்படுகின்றார்.
அதுமட்டுமின்றி இவ்வணையை கட்ட உத்தரவு வழங்கியவர் ஸிடேன்லி என்பவர் அதனாலேயே இந்த அணையானது ஸ்டேன்லி நீர்த்தேக்கம் எனவும் அழைக்கப்படுகின்றது.
மேட்டூர் அணையின் அமைவிடம் | மேட்டூர், சேலம் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா |
உயரம் | 214 அடி |
அகலம் | 171 அடி |
நீர் பிடிப்பு பரப்பு | 59.25 சதுர மைல் |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | ஸ்டான்லி நீர்த்தேக்கம் |
அணை கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு | 1924 |
அணை கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு | 1934 |
மேட்டூர் அணை வரலாறு
19 நூற்றாண்டு மேட்டூர் அணை கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் மைசூர் அரசர்கள் காவிரி ஆற்றின் மீது மேட்டூர் அணையை கட்ட அனுமதி வழங்கவில்லை. இதனால் மேட்டூர் அணை கட்ட ஒரு நூற்றாண்டு காலதாமதம் ஏற்பட்டது.
காவிரி ஆற்றின் மேல் மேட்டூர் அணை கட்ட கிட்டதட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அதாவது 1801ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய சபை திட்டமிட்டது. ஆனால் அன்றைய மைசூர் அரசர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.
இதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது காவிரி ஆற்றின் பாதையில் மேட்டூர் அணை கட்டினால் தமிழர்கள் விவசாயிகள் அதனால் பயனடைவர் என எண்ணிய கிழக்கிந்திய சபை மீண்டும் மீண்டும் இவ்வணையை கட்ட முயற்சித்தது.
1835 சர் ஆர்தர் காட்டன் என்கின்ற அணை கட்டுமானப் பொறியாளர் மைசூர் அரசர்களிடம் பேச்சுவார்த்தை செய்ய அனுப்பப்பட்டார். ஆனால் மீண்டும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க பிரிடிஸ் அரசு அணை கட்டும் திட்டத்தினை கைவிட்டது.
1923 ஆம் ஆண்டு மீண்டும் மேட்டூர் அணை கட்ட கலந்தாலோசிக்கப்பட்டது. திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர், சர்.சி.பி. ராமசாமி ஐயர் முன் தஞ்சை மாவட்ட விவசாயிகள் திரண்டு சென்று மேட்டூர் அணையின் முக்கியத்துவத்தினை விளக்கி சொல்லி இதன் மூலமாகவே மைசூர் அரசரிடம் பேசி மீண்டும் ஒப்புதல் பெற முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் சர்.சி.பி.ராமசாமி ஐயாவிற்கு மைசூர் அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
அதன் பின்பு அணை இல்லாமல் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பை ஒவ்வொரு வருடமும் தஞ்சை விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், வெள்ள இழப்பு இதற்கு நஷ்ட ஈடாக மைசூர் அரசு வருடா வருடம் 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை அனுப்பினார்.
1920 களில் 1 பவுன் தங்க விலையே 30 ரூபாய்தான் அவ்வகையில் 30 லட்சம் என்பது பெரும் தொகை. இவ்வளவு பெருந்தொகையைக் கொடுப்பதற்கு பதிலாக மேட்டூர் அணையை கட்ட ஒப்புதல் வழங்கலாம் என இறுதியாக மைசூர் அரசு அணைக்கட்டுக்கு ஒப்புதல் வழங்கியது.
இவ்வாறு ஒப்புதல் வழங்க மைசூர் அரசிடம் பேசியவர் திருவாங்கூர் திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி ஆவார்.
1924 ஆம் ஆண்டு கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட மேட்டூர் அணையை கட்டிய முடிப்பதற்கு சுமார் 9 ஆண்டுகள் ஆனது.124 அடி உயரம் உள்ள மேட்டூர் அணையில் 120 அடிவரை நீரை சேமிக்க முடியும்.
மேட்டூர் அணையின் சிறப்புக்கள்
மேட்டூர் அணையில் இரண்டு நீர் மின் நிலையங்கள் தொழிற்படுகின்றன.இதன் மூலம் 240 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம், நாமக்கள், திருச்சி, ஈரோடு, நாகப்பட்டிணம் போன்ற பாசன நிலையங்களுக்கு மேட்டூர் நீர் செல்கின்றது.
19 ஏக்கர் நிலங்கள் இதனால் பாசன வசதி பெறுகின்றன.
மேட்டூர் அணையானது 4000ற்கும் மேற்பட்ட குடும்பங்களை வாழ வைக்கின்றது.
தமிழகத்தை நீர் களஞ்சியமாக்கும் எல்லோரையும் வாழ வைக்கும் மேட்டூர் அணை என்ற பிரமாண்டத்தை வடிவமைத்து கொடுத்த பெருமை W.M எல்லீசையே சாரும்.
You May Also Like : |
---|
பவானிசாகர் அணை வரலாறு |
முல்லை பெரியாறு அணை கட்டுரை |