கவிஞர் பாரதிதாசன் கட்டுரை

Bharathidasan Patri Katturai In Tamil

இந்த பதிவில் தமிழ் மீது அதீத பற்றுக்கொண்ட “கவிஞர் பாரதிதாசன் கட்டுரை” பதிவை காணலாம்.

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவரான பாரதிதாசன் அவர்கள் தனது மானசீக குருவான சுப்ரமணிய பாரதியார் மிகுந்த மீது கொண்ட மாணவனாக இருந்தார்.

கவிஞர் பாரதிதாசன் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தொடக்க வாழ்க்கை
  3. கல்வி
  4. இல்லற வாழ்க்கை
  5. பாரதியார் மீது கொண்ட பற்று
  6. முடிவுரை

முன்னுரை

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் ஆவார். “தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” இந்த தேன்சுவை சொட்டும் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் ஆவார்.

இவர் “புரட்சிக் கவிஞர்” என்றும் சிறப்பிக்கப்படுகிறார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றியவராவார். இவர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தொடக்க வாழ்க்கை

தென்னிந்தியாவிலுள்ள புதுவையில் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 1891 ஆம் ஆண்டு கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

இவரது தந்தை கனகசபை அவ்வூரின் மிகப்பெரிய வணிகர் ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். இவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை தன்னுடைய பெயரில் இணைத்து கனகசுப்புரத்தினம் என்று அழைக்கப்பட்டார்.

கல்வி

இவர் சிறு வயதிலிருந்தே தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். இருப்பினும் அக்காலப்பகுதியில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் காணப்பட்டதால் அவர் ஒரு பிரெஞ்சுப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.

தனது தொடக்கக் கல்வியை ஆசிரியர் திருப்பதி சாமி அய்யாவிடம் பயின்றார். புகழ் பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த முதலானவற்றை முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.

மேலும் தனது பதினாறாவது வயதில் புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

இல்லற வாழ்க்கை

பாரதிதாசன் அவர்கள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அடுத்த ஆண்டிலேயே அதாவது 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதியினரின் இல்லற வாழ்க்கைப் பயனாக இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தார். அதன் பின்னர் சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

பாரதியார் மீது கொண்ட பற்று

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவரான பாரதிதாசன் அவர்கள் தனது மானசீக குருவான சுப்ரமணிய பாரதியார் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார்.

அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர் பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடம் இருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரது நட்பும் பாரதிதாசனுக்குக் கிடைத்தது.

பாரதி மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

முடிவுரை

பாரதிதாசன் ஓர் எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், சிறந்த கவிஞர், அரசியல்வாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர் ஆவார்.

இத்தகைய சிறப்புமிக்க கவிஞர் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

இவர் மரித்தாலும் இவரது எண்ணற்ற படைப்புக்கள் என்றென்றும் புத்துயிர் கொண்டே இருக்கும். இவரது கவி வரிகளும் இவர் புகழும் என்றென்றும் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை.

You May Also Like:

வாணிதாசன் வாழ்க்கை வரலாறு
பாரதியார் பற்றிய கட்டுரை