சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை

silappadikaram katturai

திருக்குறளுக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இது காணப்படுகிறது. பாடல் வடிவில் இவ்விலக்கியம் எழுதப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உருவான வரலாறு
  3. சிலப்பதிகாரச் சிறப்புக்கள்
  4. காப்பியத் தலைவி
  5. பல பெயர்களை கொண்ட காப்பியம்
  6. பெயர்க்காரணம்
  7. முடிவுரை

முன்னுரை

தமிழ் மொழியில் ஐந்து பெருங்காப்பியங்களும், ஐந்து சிறு காப்பியங்களும் உள்ளன. இவை தவிர வேறு சில காப்பியங்களும் உள்ளன. ஐம்பெரும் காப்பியங்களுள் முதல் பெருங்காப்பியமாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம் ஆகும்.

“நெஞ்சை அள்ளுகின்ற காப்பியம்” என்ற பெருமைக்குரியதாகும். இரட்டை காப்பியத்தில் சிலப்பதிகாரமும் ஒன்றாகும். இக்கட்டுரையில் சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.

உருவான வரலாறு

சேர நாட்டின் மன்னன் சேரன் செங்குட்டுவன் கற்பில் சிறந்த கண்ணகியினுடைய கதையினை கேள்வியுற்று அந்த மெய்சிலிர்க்கும் வரலாற்றினை ஒரு பெரும் காப்பியமாக படைக்குமாறு தனது சகோதரனான இளங்கோவடிகளை வேண்டுகிறான்.

கண்ணகி கோவலன் மீது கொண்ட உண்மையான காதல் மதுரையை எரித்து நீதியை நிலைநாட்டி விண்ணுலகம் சென்ற அந்த அற்புத கதையியினால் கண்ணகியின் மீது மரியாதை கொண்டு இந்த ஒப்பற்ற காப்பியத்தை இளங்கோவடிகள் இயற்றினார்.

சேர, சோழ, பாண்டிய நாடுகளினை அடிப்படையாக கொண்ட கதைக்களம் இக்காப்பியத்தில் அழகாக வெளிப்படுகிறது.

சிலப்பதிகாரச் சிறப்பு

ஒருவரது வாழ்க்கையை முழுமையாக பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் காட்டி, மனித சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் முதல் இலக்கிய முயற்சியாக, மற்றும் பெருங்காப்பியமாகப் அடைந்தது சிலப்பதிகாரம் ஆகும். தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரமாகும்.

கண்ணகி கோவலன் கதை கூறும் படைப்பாக மட்டுமல்லாது தமிழர்களின் கலை, இலக்கிய போன்றவற்றை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இது காணப்படுகிறது. பாடல் வடிவில் இவ்விலக்கியம் எழுதப்பட்டுள்ளது.

பண்டைய வாழ்வியலின் நெறிமுறைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் அமைந்துள்ளது.

காப்பியத் தலைவி

காப்பிய இலக்கணப்படி பெருங்காப்பியம் தன்னிகரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் சிலம்பில் கண்ணகி தன்னிகரில்லா தலைவியாகப் போற்றப்படுகின்றாள் என்பது காப்பியத்திற்குரிய சிறப்பாகும்.

பல பெயர்கள் கொண்ட காப்பியம்

தமிழின் முதல் காப்பியம், உரையிடையிட்டபாட்டைச் செய்யுள், முத்தமிழ்க்காப்பியம், முதன்மை காப்பியம், பத்தினிக் காப்பியம், நாடகப் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புதுமைக்காப்பியம், பொதுமைகாப்பியம், ஒற்றுமை காப்பியம்,

ஒருமைப்பாட்டுக் காப்பியம், தமிழ் தேசியக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், போராட்டக்காப்பியம், புரட்சிக் காப்பியம், சிறப்பதிகாரம், பைந்தமிழ் காப்பியம் போன்ற பல பெயர்களினால் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெயர்க்காரணம்

சிலம்பு காரணமாக வளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது. சிலப்பதிகாரம் சிலம்பு + அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு என்கின்ற அணியே இந்த கதையை அலங்கரிக்க காரணத்தால் இப்பெயர் உண்டானது.

முடிவுரை

தமிழறிஞர்களினால் இதுவரை பல நூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. எனினும் அதிக அளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் என்ற சிறப்பை சிலப்பதிகாரம் பெறுகிறது. சிலப்பதிகாரமானது அறநீதிகளை எமக்கு உணர்த்தும் சிறந்த நூலாகும்.

அரசியலில் பிழை செய்தவனுக்கு அறமே பயன் என்றும், பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் போற்றுவார் எனவும், வாழ்வினை தொடர்ந்து வந்தே தீரும் எனவும் வெளிப்படுத்தப்படுகிறது. நாமும் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை படித்து வாழ்வில் நல்ல வண்ணம் வாழ்வோம்.

You May Also Like:

தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு

அறிவுக்கு விருந்தாகும் அறிவியல் கட்டுரை