தமிழ் நாட்டின் முதலமைச்சராக காணப்பட்ட கலைஞர் கருணாநிதி அவர்கள் வித்திட்ட திட்டங்களானவை ஓர் தொலைநோக்குடனையே மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.
தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- குடிநீர்த்திட்டத்தில் கலைஞரின் தொலைநோக்கு
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய கலைஞர்
- பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த கலைஞர்
- கல்வியில் புரட்சி
- முடிவுரை
முன்னுரை
முத்தமிழறிஞர் என்று போற்றப்படும் கலைஞர் அவர்கள் தொலைநோக்கு சிந்தனை அடிப்படையிலேயே பல்வேறு திட்டங்களை உருவாக்கினார். இன்று அத்திட்டங்களினூடாக சமூகமானது பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. இக்கட்டுரையில் தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் பற்றி நோக்கலாம்.
குடிநீர்த்திட்டத்தில் கலைஞரின் தொலைநோக்கு
கலைஞர் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரியம் என்ற அமைப்பை நிறுவினார்.
இதனூடாக மேட்டு குடிநீர் திட்டம், விருது நகரில் 3 குடிநீர் திட்டம், திருவாற்றியுர், ஆலத்தூர், அம்பத்தூர், என பல இடங்களில் குடிநீர் திட்டங்களை நிறுவி குடிநீர் பிரச்சினைகளை பூர்த்தி செய்தார்.
இவ்வாறு அவர் தொலைநோக்குடன் சிந்தித்து செயற்பட்டமையின் காரணமாக இன்று மக்கள் தமிழ் நாட்டில் சிறப்புற குடிநீர் பெற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது சிறப்பிற்குரியதாகும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய கலைஞர்
இந்தியாவில் முதல் முறையாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞரே ஆவார். அந்த வகையில் 1990ம் ஆண்டு விவாயிகளுக்கு மின்சாரம் இலவசம் என அறிவித்தார்.
இதற்கான காரணம் அப்போது மின்வாரிய அதிகாரிகள் அதிக செலவாகும், மின்சாரம் இலவசமாக வழங்க இயலாது என்று கூறியமையாகும்.
இதனை மறுத்த கலைஞர் அவர்கள் விவசாயிகள் மின்சாரமின்றி பல்வேறு வகையில் கஸ்டப்படுகின்றார்கள் என்றும் இவர்களது எதிர்காலம் சிறப்புற அமைய வேண்டும் என்ற நோக்கிலும் 1996 முதல் 2001 வரை 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழகத்தில் அமைத்தார்.
இதன் மூலமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இது இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த கலைஞர்
பெண்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட காலப்பகுதிகளில் கலைஞர் அவர்கள் எதிர்காலத்தில் பெண்கள் சிறப்பாக வாழவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் அவர்களுக்காக தமிழக உள்ளாட்சி அமைப்புக்களில் பெண்களுக்கென 33சதவீத இட ஒதுக்கீட்டை 1996 ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.
இன்று பெண்கள் அரசியல் அதிகாரமுடையவர்களாக திகழ்வதற்கு கலைஞர் அவர்கள் தொலைநோக்குடன் சிந்தித்தமையே காரணமாகும்.
காவல் நிலையங்களிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களை காவலர் பணியில் ஈடுபடுத்த உறுதுணையாக நின்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே. இன்று தமிழ் நாட்டில் மகளிர் காவல் நிலையங்கள் உருவாக இவரது இச்செயலே காரணமாகும்.
கல்வியில் புரட்சி
இன்று பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க கலைஞர் ஏற்படுத்திய கல்வித்திட்டங்களே காரணமாகும். அதாவது பெண் கல்வியே நாட்டினுடைய முன்னேற்றம் என தொலைநோக்குடன் சிந்தித்த கலைஞர் அவர்கள் பெண்களின் நலனிற்காக இலவசக் கல்வி எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக பெண்பிள்ளைகளை கல்வி கற்க தூண்டினார்.
மேலும் ஏழைப்பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் உயர வேண்டும் என்ற நோக்கில் 8ம் வகுப்பு படித்திருந்தால் அவர்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குகின்ற திட்டத்தை ஏற்படுத்தினார்.
இதன் காரணமாக தற்போது பல இலட்சக்கணக்காண பெண்கள் பயனடைந்து வருகின்றனர் எனலாம். இதற்கெல்லாம் கலைஞரின் தொலைநோக்கு சிந்தனையே காரணமாகும்.
முடிவுரை
கலைஞர் மேற்கொண்ட திட்டங்கள் அனைத்தும் இன்று பல்வேறு சமூக மாற்றங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியே சென்றுள்ளது. கலைஞரின் தொலைநோக்கு சிந்தனையால் தமிழ்நாடு பல நன்மைகளை இன்று அடைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
You May Also Like: