இளம் வயது திருமணம் கட்டுரை

Ilam Vayathu Thirumanam Katturai In Tamil

இந்த பதிவில் “இளம் வயது திருமணம் கட்டுரை” பதிவை காணலாம்.

பின்தங்கிய கிராமங்களில் இளவயது திருமணங்கள் அதிகளவு நடைபெறுவதை காண முடிகின்றது.

இளம் வயது திருமணம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிறுவயது திருமணத்திற்கான காரணங்கள்
  3. இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள்
  4. சரியான பருவத்தில் செய்யும் திருமணத்தின் நன்மைகள்
  5. சிறுவயது திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இளவயது திருமணம் என்பது இன்று சாதி, இனம் பாராது பல்வேறு மக்கள் பிரிவினர்களாலும் பின்பற்றப்படுகின்ற ஒரு முறையாக காணப்படுகின்றது.

நவீன அறிவு வளர்ச்சியின் வேகத்திற்கு சக மனிதன் தனது அறிவை விருத்தி செய்து என்னதான் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், இன்றைக்கும் பல பின்தங்கிய கிராமங்கள் தோறும் தெளிவின்மைப் போக்கு மற்றும் தொடர்பாடலற்ற தன்மையும் இருந்து கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக, பின்தங்கிய கிராமங்களில் இளவயது திருமணங்கள் அதிகளவு நடைபெறுவதை காண முடிகின்றது. இக்கட்டுரையில் இளம்வயது திருமணம் பற்றி நோக்கலாம்.

சிறுவயது திருமணத்திற்கான காரணங்கள்

குழந்தை திருமணத்திற்கான காரணங்களில் வறுமை ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது. சில சமுதாயத்தினர் வறுமையின் காரணமாக குறிப்பாக பெண் பிள்ளைகளை சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

போதிய கல்வி அறிவு இல்லாமை காரணமாகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு சமுதாயத்தில் உயர்நிலை கொடுக்கப்படாமை மற்றுமொரு முக்கிய காரணமாகின்றது.

பெண் குழந்தைகளைப் பொருளாதார சுமையாக நினைத்தல் இதனால் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

சமுதாய பழக்க வழக்கங்களும், மரபுகளும் காரணமாக அதனைப் பின்பற்றி சிறுவயதிலேயே திருமண பந்தத்தில் இணைத்து விடுகின்றனர்.

இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள்

சிறார்கள் உடல், உள ரீதியாக இல்லற வாழ்க்கைக்கு தயாராகாத நிலையில் இளம் வயது திருமணங்களால் இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கின்ற நிலைமை ஏற்படுகின்றது.

சிறு வயதிலேயே திருமண பந்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும், வீட்டில் வன்முறைக்கு உள்ளாகின்றனர். சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சிறுவயது திருமணத்தினால் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்படுகின்றது. சமுதாயத்தில் உரிய அந்தஸ்து, அதிகாரம், அறிவு முதிர்ச்சி போன்றன இல்லாமல் மழுங்கடிக்கப்படுகிறது.

சரியான பருவத்தில் செய்யும் திருமணத்தின் நன்மைகள்

  • தலைமுறை இடைவெளிகள் அதிகம் இருக்காது.
  • ஆரோக்கியமான எதிர்கால வாழ்க்கையை குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்.
  • இல்லற வாழ்க்கையினை சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும்.
  • கணவன், மனைவியிடையே பரஸ்பர புரிந்துணர்வும் ஒற்றுமையும் காணப்படும். இதனால் திருமண வாழ்க்கை சிறந்ததாக அமையும்.
  • பெண்கள் மகப்பேற்றின் உடலியல் ரீதியான பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றது. இதனால் பிரசவத்தின் போது தாய் மற்றும் சேய் நலம் பாதுகாக்கப்படும்.

சிறுவயது திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள்

கல்வி அறிவு ஒரு மனிதனை சிந்திக்க வைக்கின்றது எனவே பெண் கல்வியினை அதிகரிக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் பள்ளி கல்வியோடு நிற்காமல் கல்லூரி படிப்பையும் முடித்து தாங்களே சம்பாதித்து, பொருளாதார தன்னிறைவு பெற வேண்டும்.

இளம் வயது திருமணம் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முடிவுரை

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இன்றும் இளவயது விவாகங்கள் நடைமுறையில் உள்ளன.

சிறு வயதிலேயே பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து விடுவதால் அவர்கள் உடல் நல ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றனர்.

இன்றைய இளைஞர்களே நாட்டின் நாளைய தலைவர்களாக போகின்றவர்கள் எனவே அவர்களது இளம் வயதுப் பருவத்தை சிறப்பானதாக உருவாக்கிக்கொள்ள அரசு அதிக கவனம் செலுத்தல் வேண்டும்.

You May Also Like:
பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை
அன்புடைமை பற்றிய கட்டுரை