இந்த பதிவில் தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல்வாதியான “அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனைகளை வெற்றிகரமாக அரசியல்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.
அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- பிறப்பு
- கல்வி
- சமூகப் பணி
- அண்ணாவின் பண்புகள்
- முடிவுரை
முன்னுரை
சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், இந்த சிந்தனைகளை வெற்றிகரமாக அரசியல்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் அறிஞர் அண்ணா அவர்களாவார்.
இவர் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் பேச்சாற்றலில் ஈடுஇணையற்றவராவார். அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக இருந்தார்.
அண்ணாதுரை அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார். இக்கட்டுரை அறிஞர் அண்ணா பற்றி நோக்கலாம்.
பிறப்பு
1909 செப்டம்பர் 15ம் தேதி நடராஜன் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாக காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா பிறந்தார். இவர் செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் பிறந்தவுடன் அவரை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாயாரின் இளைய சகோதரியான ராஐமணியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இளமையிலே அன்பும், அமைதியும் நிரம்பப் பெற்றவராவார்.
கல்வி
மிகுற்த நினைவாற்றல் கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிப் பச்சையப்பன் உயர்பள்ளியில் கல்வி கற்றார்.
பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும், குடும்ப சூழ்நிலை காரணமாக, காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக ஆறு மாதம் பணியாற்றிய அண்ணா, 1928-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து, பி.ஏ படித்தார். பின்பு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
சமூகப் பணி
தந்தை பெரியாருடன் இணைந்து பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பினார். அறிஞர் அண்ணா அவர்கள் தன்னை சமூக ஏற்றத்தாழ்வு ஒழிப்பு, சாதி எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, மொழிப் பாதுகாப்பு ஆகிய சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைப்பட்டார். 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். தன் எழுத்தாற்றலாலும், சொல்லாற்றலாலும் இயக்கத்தை வளர்த்தார்.
தமிழ் நாட்டிற்கு ஓர் திட்டவட்டமான வடிவத்தைக் கொடுத்தவராவார். ஆங்கிலத்தில் “மெட்ராஸ்” என்றழைக்கப்பட்டிருந்த தமிழர்கள் வாழ்ந்த நிலத்திற்கு தமிழ் உணர்வாளர்களின் நீண்ட கால போராட்டத்திற்கும் கோரிக்கைக்கும் இணங்க தமிழ்நாடு என்று பெயர் கொடுத்தார்.
அண்ணாவின் பண்புகள்
இவருக்கு ஆடம்பரம் பிடிக்காது. இவர் மிகவும் எளியவர் ஆவார். பிறரை மதிக்கும் பண்பாளராகவும், கடும் வார்த்தைகளைப் பிறரிடம் பேசாதாவருமாவார். இவரிடம் அதிக தன்னம்பிக்கை காணப்பட்டது.
நடுவுநிலை தவறாதவராகவும் எதிரிகளிடம் கூட அன்பும் மரியாதையும் செலுத்தும் வகையில் நடந்து கொள்பவராகவும் விளங்கினார்.
மிகுந்த மனிதநேயமுள்ள ஒருவராவார். அதிகம் நூல்களை விரும்பிப் படிக்கும் குணம் கொண்டவர், சிறந்த மொழியாற்றல் மிக்கவர், தேசபக்தி மிக்கவராவார்.
முடிவுரை
இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள் புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.
இதன் காரணமாக 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம்பெற்றுள்ளது.
உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் அவரது நினைவுகள் என்றும் அழியாதவையாகவே வாழும் என்பதில் ஐயமில்லை.
You May Also Like: |
---|
கவிஞர் பாரதிதாசன் கட்டுரை |
கல்வி கண் திறந்தவர் கட்டுரை |