இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவராக உ.வே.சாமிநாதய்யர் காணப்படுகின்றார்.
இவர் ஏட்டுச் சுவடிகளில் அழியும் நிலையில் காணப்பட்ட புராதான கால தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் தேடி சேகரித்து, அவற்றை அனைவரும் படித்து விளங்கத்தக்க வகையில் புத்தகங்களாக பதிப்பித்து வெளியிட்ட மகானாக காணப்படுகிறார்.
இவர் “தமிழ் தாத்தா“, ” தமிழ் முனிவர் ” என்றும் தமிழுலகம் பெருமையுடன் இன்று வரை அழைத்து வருகிறது.
உ.வே.சாமிநாதய்யர் வரலாறு
பிறப்பு | பெப்ரவரி 19, 1855 |
பிறந்த இடம் | சூரியமூலை, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை |
தந்தை பெயர் | வேங்கட சுப்பையர் |
தாயார் பெயர் | சரஸ்வதி அம்மாள் |
குரு | மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் |
வழங்கப்பட்ட பட்டம் | மகாமகோபாத்தியாயர், தக்ஷிண கலாநிதி, முனைவர் |
இறப்பு | ஏப்ரல் 28, 1942 (அகவை 87) |
ஆரம்ப வாழ்க்கை
இவரது தந்தை வேங்கட சுப்பையர் ஓர் இசைக்கலைஞராக காணப்பட்டார். இதனால் திண்ணைப்பள்ளியில் பாடத்தோடு இசையையும் கற்றுக் கொடுத்தார். இதன் மூலம் உ.வே.சாமிநாதய்யர் இசைப் பாடல்கள் பாடுவதிலும் சிறந்து விளங்கினார்.
17வது வயதில் திருவாடுதுறை ஆதினத்தின் கீழ் தமிழ் கற்றுவித்துக் கொடுத்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றுக் கொடுக்க கேட்க அவரும் உ.வே.சாமிநாதய்யர் தனது மாணவராக சேர்த்துக்கொண்டு தமிழின் இலக்கணம், இலக்கியம், செய்யுள்களை அறிந்துக்கொள்வது, இயற்றுவது, கவிதைகளை இயற்றுவது, பாடல் புனைவது போன்றவற்றை கற்று கொடுத்தார்.
உ.வே.சாமிநாதய்யர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழை கற்றுக்கொண்டே இருந்தார். இவரது குடும்பம் வறுமையான குடும்பம்.
அக்காலத்தில் இராமாயண சொற்பொழிவுகள் மாதக்கணக்கில் நடக்கும். சொற்பொழிவாளராக இருந்த உ.வே.சாமிநாதய்யரின் தந்தை, தொழில் செய்யும் இடத்துக்கே தன் குடும்பத்தையும் அழைத்து செல்வார். இப்படி பிழைப்புக்காக ஊர் மாறி, ஊர் மாறி தங்கினார்கள்.
உ.வே.சாமிநாதய்யர் 14 வயதாகும் போது திருமணம் நடைபெற்றது. தனது 19வது வயதில் இருந்து குடும்ப வறுமையை போக்க உ.வே.சாமிநாதய்யரும் ராமாயணம் சொற்பொழிவு நிகழ்த்த துவங்கினார். இதனால் குடும்பத்தின் வறுமை மற்றும் கடன் ஓரளவு தீர்ந்தது.
படித்து முடித்த பின் கும்பகோணத்தில் ஆதினத்தின் கீழ் செயல்பட்ட பள்ளியில் தியாகராஜசெட்டியாரின் உதவியால், 1880 முதல் 1903வரை கும்பகோணத்தில் ஆசிரியர் பணியாற்றி வந்தார்.
அதன்பின் சென்னை பல்கலைகழகத்தில் 1903ல் பணிக்கு சேர்ந்தார். 16 ஆண்டுகள் பணியாற்றியவர் 1919ல் அப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னைக்கு வந்தபின்பே அவரது வறுமை ஓரளவு நீங்கியது.
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் பயிலும்போது மீனாட்சிசுந்தரனார் இவருக்கு சாமிநாதன் என பெயர் மாற்றினார்.
அதன் பின்னர் ஊர் பெயரையும் தந்தை பெயரையும் முன்னெழுத்தாக இணைக்கும் வழக்கப்படி உ.வே.சாமிநாதன் என பெயர் மாற்றம் பெற்றார். அதனையும் சுருக்கி சிலர் உ.வே.சா என அன்புடன் அழைத்தனர்.
தழிழ் பணிகள்
அனைத்து சங்க இலக்கிய நூல்களை தேடிப்பிடித்து புதுப்பிக்க முடிவு செய்தார். “வேணுவனலிங்க விலாசச்சிறப்பு” என்கிற நூலில் எழுதப்பட்ட 86 பாடல்களில் 8 பாடல்களை உ.வே.சா அவர்கள் எழுதினார். இது அவருடைய முதல் நூலாக காணப்படுகிறது.
சீவகசிந்தாமணியை புதுப்பிக்க எண்ணி அதற்கான குறிப்புகளை தேடி சேகரித்து அதனை சரிப்பார்த்துக்கொண்டு இருந்தபோது, அதை வெளிவரவிடாமல் செய்ய பெரும் சிக்கல்களை பலர் உருவாக்கினார்கள். இருப்பினும், அவற்றையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து வெளிக்கொண்டுவந்தார்.
அதன்பின்பே சங்ககால இலக்கிய நூல்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நூல்களை கண்டறிந்து அதை புதுப்பித்து வருங்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார். மணிமேகலை நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
தமிழறிஞர்கள் பலர் இன்றும் சங்க இலக்கிய நூல்களில் சிறந்த உரை நூலாக உ.வே.சா எழுதிய மணிமேகலையை குறிப்பிடுகின்றனர். “என் சரித்திரம்” என்கிற பெயரில் தனது வரலாற்றை இரண்டு ஆண்டுகள் ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அது 1940 ஆண்டு முதல் 1942 ஆண்டு வரை வெளிவந்தது.
ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகளை தேடி சேகரித்து வைத்திருந்தார். அதனை தன் வாழ்நாள் பணியாகவே செய்தார்.
1931 மார்ச் 21ந் தேதி உ.வே.சா வின் பணியை பாராட்டி சென்னை பல்கலைக்கழகம் “மகாமகோபத்தியார்” என்கிற பட்டம் வழங்கி கௌரவித்தது.
80 ஓலைச்சுவடிகளை நூல்களாக பதிப்பித்த இவர் சங்ககால தமிழும், பிற்கால தமிழும் என்கிற தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் பேசிய பேச்சு பின்னர் நூலாக வெளிவந்தது. அந்த அளவுக்கு பேச்சுக்கலையில் சிறந்தவர், பேசுவதை நகைச்சுவை இழையோட பேசும் திறன் கொண்டவராக காணப்பட்டார்.
இவரது தமிழ்ப் பணியினை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் என்போர் பாராட்டி உள்ளனர்.
அரசினது கௌரவிப்பு
இந்திய அரசு சென்னையில் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல்நிலையம் என்னும் பெயரில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளது.
நடுவன் அரசு உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் பணிகளை பாராட்டி அஞ்சல் தலைகளை 2006 இல் வெளியிட்டது.
அரசின் ஒத்துழைப்புடன் சென்னை தொலைக்காட்சி நிலையம் தூர்தர்ஷனின் அனுசரணையுடன் உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு “தமிழ் தாத்தா” எனும் தலைப்பில் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
சென்னை பல்கலைக்கழகம் மகாமகோபாத்தியாயர், தக்ஷிண கலாநிதி, தமிழ் முனைவர், தமிழ் தாத்தா என பல விருதுகளை வழங்கி உள்ளது.
உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்த நூல்கள்
புத்தகத்தின் பெயர் | பதிப்பித்த ஆண்டு |
---|---|
நீலி இரட்டை மணிமாலை | 1874 |
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு | 1878 |
திருக்குடந்தைப் புராணம் | 1883 |
மத்தியார்ச்சுன மான்மியம் | 1885 |
சீவக சிந்தாமணி | 1887 |
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது | 1888 |
திருமயிலைத் திரிபந்தாதி | 1888 |
பத்துப் பாட்டு மூலமும் உரையும் | 1889 |
தண்டபாணி விருத்தம் | 1891 |
சிலப்பதிகாரம் | 1892 |
திருப்பெருந்துறைப் புராணம் | 1892 |
புறநானூறு | 1894 |
புறப்பொருள் வெண்பா மாலை | 1895 |
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் | 1898 |
மணிமேகலை | 1898 |
மணிமேகலைக் கதைச் சுருக்கம் | 1898 |
ஐங்குறுநூறு | 1903 |
சீகாழிக் கோவை | 1903 |
திருவாவடுதுறைக் கோவை | 1903 |
வீரவனப் புராணம் | 1903 |
சூரைமாநகர்ப் புராணம் | 1904 |
திருக்காளத்தி நாதருலா | 1904 |
திருப்பூவண நாதருலா | 1904 |
பதிற்றுப் பத்து | 1904 |
திருவாரூர்த் தியாகராச லீலை | 1905 |
திருவாரூருலா | 1905 |
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் | 1906 |
தனியூர்ப் புராணம் | 1907 |
தேவையுலா | 1907 |
மண்ணிப்படிக்கரைப் புராணம் | 1907 |
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் | 1908 |
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு | 1910 |
திருக்காளத்திப் புராணம் | 1912 |
திருத்தணிகைத் திருவிருத்தம் | 1914 |
பரிபாடல் | 1918 |
உதயணன் சரித்திரச் சுருக்கம் | 1924 |
பெருங்கதை | 1924 |
நன்னூல் சங்கர நமச்சிவாயருரை | 1925 |
நன்னூல் மயிலை நாதருரை | 1925 |
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் | 1928 |
தக்கயாகப் பரணி | 1930 |
தமிழ்விடு தூது | 1930 |
பத்துப் பாட்டு மூலம் | 1931 |
மதுரைச் சொக்கநாதர் உலா | 1931 |
கடம்பர் கோயிலுலா | 1932 |
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை | 1932 |
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் | 1932 |
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது | 1932 |
பழனி பிள்ளைத் தமிழ் | 1932 |
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை | 1932 |
வலிவல மும்மணிக் கோவை | 1932 |
சங்கரலிங்க உலா | 1933 |
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா | 1933 |
பாசவதைப் பரணி | 1933 |
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – பகுதி 1 | 1933 |
சங்கர நயினார் கோயிலந்தாதி | 1934 |
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – பகுதி 2 | 1934 |
விளத்தொட்டிப் புராணம் | 1934 |
ஆற்றூர்ப் புராணம் | 1935 |
உதயண குமார காவியம் | 1935 |
கலைசைக் கோவை | 1935 |
திரு இலஞ்சி முருகன் உலா | 1935 |
பழமலைக் கோவை | 1935 |
பழனி இரட்டைமணி மாலை | 1935 |
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை | 1936 |
கனம் கிருஷ்ணயைர் | 1936 |
கோபால கிருஷ்ண பாரதியார் | 1936 |
திருநீலகண்டனார் சரித்திரம் | 1936 |
திருமயிலை யமக அந்தாதி | 1936 |
திருவள்ளுவரும் திருக்குறளும் | 1936 |
நான் கண்டதும் கேட்டதும் | 1936 |
புதியதும் பழையதும் | 1936 |
புறநானூறு மூலம் | 1936 |
பெருங்கதை மூலம் | 1936 |
மகாவைத்தியநாதையைர் | 1936 |
மான் விடு தூது | 1936 |
குறுந்தொகை | 1937 |
சிராமலைக் கோவை | 1937 |
தமிழ்நெறி விளக்கம் | 1937 |
திருவாரூர்க் கோவை | 1937 |
நல்லுரைக் கோவை பகுதி 1 | 1937 |
நல்லுரைக் கோவை பகுதி 2 | 1937 |
நினைவு மஞ்சரி – பகுதி 1 | 1937 |
அழகர் கிள்ளை விடு தூது | 1938 |
சிவசிவ வெண்பா | 1938 |
திருக்கழுக்குன்றத்துலா | 1938 |
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை | 1938 |
திருமலையாண்டவர் குறவஞ்சி | 1938 |
நல்லுரைக் கோவை பகுதி 3 | 1938 |
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு | 1939 |
தணிகாசல புராணம் | 1939 |
நல்லுரைக் கோவை பகுதி 4 | 1939 |
புகையிலை விடு தூது | 1939 |
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை | 1939 |
கபாலீசுவரர் பஞ்சரத்தினம் | 1940 |
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா | 1940 |
வில்லைப் புராணம் | 1940 |
செவ்வைச் சூடுவார் பாகவதம் | 1941 |
நினைவு மஞ்சரி – பகுதி 2 | 1942 |
வித்துவான் தியாகராச செட்டியார் | 1942 |
You May Also Like: |
---|
உழவுத் தொழிலின் பெருமை கட்டுரை |
ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு |