காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை

Kaatru Maasupaadu Katturai In Tamil

இந்த பதிவில் “காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை” பதிவை காணலாம்.

காற்று மாசுபாடானது உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதை தீர்ப்பதில் அனைவரது பங்களிப்பும் அவசியம்.

காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. காற்றில் முக்கியத்துவம்
  3. காற்று மாசுபடுவதற்கான காரணங்கள்
  4. விளைவுகள்
  5. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வழிகள்
  6. முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் பூமி நிலம், நீர், காற்று போன்றவற்றால் உருவானது. எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு இவை மிகவும் அவசியமானவை.

காற்றானது வளி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. எம் உயிர் வாழ்க்கைக்கு காற்றானது முக்கியமானதாக விளங்குகின்றது. இறைவனின் இயற்கைப் படைப்புகளில் அற்புதமான படைப்பு காற்றாகும்.

ஜூன் 15ம் திகதி உலக காற்று தினம் உலக மக்களால் கொண்டாடப்படுகின்றது. உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாகக் காணப்படும் காற்றானது இன்று பல வழிகளிலும் மாசடைந்து வருகின்றது. இக்கட்டுரையில் காற்று மாசுபாடு பற்றி நோக்கலாம்.

காற்றின் முக்கியத்துவம்

உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு காற்று மிகமிக அவசியமானது. அதாவது மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்கள் சுவாசிப்பதற்கு காற்று முக்கியமாகும்.

காற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மருத்துவத்திற்கும் காற்றின் பயன்பாடு கிடைக்கப் பெறுகின்றது. குறிப்பாக மூச்சுத் திணறல் ஏற்படும் போது காற்று ஒட்சிசனாகப் பயன்படுத்தப்படுகின்றது.

காற்று மாசுபடுவதற்கான காரணங்கள்

எம்மைச் சூழவுள்ள வளி பல்வேறு காரணங்களால் மாசடைகின்றது. மாசுபாடுகளில் பெரும்பாலானவை மனிதனால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் சில காற்று மாசுபாடு எரிமலை வெடிப்புகளிலிருந்து வரும் சாம்பல் போன்ற இயற்கைக் காரணங்களினாலும் நிகழ்கின்றன.

மேலும் காற்றானது தொழிற்செயன்முறைகள் காரணமாக மாசடைகின்றது. வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகையானது காற்றை மாசடையச் செய்கின்றது. திறந்த வெளிக் கழிவுகள் காற்று மாசுபாட்டிற்கு ஓர் ஆதாரமாக அமைகின்றது.

இவை மட்டுமல்லாது காட்டுத்தீ போன்றவற்றாலும் காற்று மாசுபாடு ஏற்படுகின்றது. இன்றைய நவீனமயமாதல், வாகனப் பெருக்கம், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றினாலும் வளி மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது இது காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கின்றது.

முக்கியமாக மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கின்றது அதனால் காற்று மாசு நிகழ்கின்றது.

காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள்

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் காற்று மாசுபாடு ஒரு தொடர் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையானது சுற்றுப்புறச் சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

காற்று மாசுபாடு காரணமாக ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக உலக வெப்பமயமாதல் ஏற்படுகிறது. இதனால் கால நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகின்றது.

மேலும் காற்று மாசுபடுவதால் அமில மழை போன்றவை உருவாகின்றது. மற்றும் காற்று மாசுபாடு பல்வேறு நோய்களை உருவாகின்றது.

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வழிகள்

  • தீங்கு விளைவிக்கும் வாயுக்களை காற்றில் கலப்பதை தடுத்தல். அதாவது காற்று வடிகட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • மோட்டார் வாகனங்களின் சான்றுகள், மற்றும் புகை சோதனையை செயற்படுத்துதல் வேண்டும்.
  • கார்பன் டை ஆக்சைட் உறிஞ்சுவதற்கு அதிகமான மரங்களை நாட்டல் வேண்டும்.
  • சமையலின்போது புகையைக் குறைக்க காற்றோட்டமான இடத்தில் மேம்படுத்தப்பட்ட அடுப்புக்களையும், சாண எரிவாயுக்களையும் பயன்படுத்தலாம்.
  • குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்கலாம். இதற்குப் பதிலாக விரைவில் உக்கலடையும் குப்பைகளை முடிந்தளவு மண்ணுடன் புதைப்பது நன்று.

முடிவுரை

காற்று மாசுபாடானது இன்று உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது. எனவே இந்த பிரச்சினையைத் தீர்ப்பதில் அனைவரது பங்களிப்பும் அவசியம்.

சுத்தமான காற்றைச் சுவாசிக்கத்தான் நாம் அனைவரும் விரும்புகின்றோம். எனவே இயற்கையை நாம் பாதுகாப்போம் இயற்கை எம்மைப் பாதுகாக்கும்.

You May Also Like:

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை