கிராமம் பற்றிய கட்டுரை

kiramam katturai in tamil

கிராமம் பற்றிய கட்டுரை

இந்த பதிவில் “கிராமம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இன்று மக்களிடத்தில் நாகரீக மோகமானது குடிகொண்டு விட்டதனால் பெரும்பாலன மக்கள் நகரங்களை நோக்கி படையெடுக்க துவங்கி விட்டனர்.

கிராமம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்கையின் அரவணைப்பு
  • ஆரோக்கிய வாழ்வு
  • உறவுகள்
  • நிம்மதியான வாழ்வு
  • முடிவுரை

முன்னுரை

இன்றைய மனிதனுடைய அடிப்படையான குடியிருப்பு அலகாக கிராமங்கள் காணப்படுகின்றன.

என்னதான் நகரங்களும் நாகரீகங்களும் வளர்ந்து சென்றாலும் ஒரு நாட்டின் அடிப்படையான நிலையங்களாக கிராமங்களே காணப்படுகின்றன.

பொதுவாகவே அழகிய இயற்கை சூழலும், மாசற்ற சுற்றுசூழலையும் நாம் இன்று கிராமங்களில் தான் காணமுடியும். இதனால்தான் பல கோடி மக்கள் நகர வாழ்வை வெறுத்து கிராம வாழ்க்கையினை விரும்புகின்றார்கள்.

இயற்கையின் அரவணைப்பு

பொதுவாகவே கிராமங்கள் எனப்படுகையில் பச்சை பசேல் என்ற வயல் வெளிகளும், அதற்கு அழகு சேர்க்கும் இயற்கையான நீர் நிலைகளும், பயிர் நிலங்களும், நிரை நிரையாக கால்நடைகளும், அழகான கோயில்களும் என பார்ப்பதற்கே இரம்மியமாக இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டு இயற்கையின் அரவணைப்போடு அழகாகவும் அமைதியாகவும் காணப்படும்.

இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையானது இயற்கையோடு இணைந்ததாகவே காணப்படும்.

ஆரோக்கிய வாழ்வு

கிராமங்களில் நகரங்களை போல் அல்லாது மக்கள் நெரிசலானது மிகவும் குறைவாக காணப்படும். மக்களின் வீடுகள் நெருக்கமும் குறைவாகவே காணப்படும்.

இங்கே சுத்தமான காற்று, தெளிந்த சுத்தமான குடிநீர், பயிர்ச்செய்கை மூலமாக கிடைக்கும் இயற்கை உணவு முறைகள் இந்த மக்களின் வாழ்வினை ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்றியிருக்கிறது.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதற்கிணங்க இங்கு வாழ்கின்ற மக்களே உண்மையான செல்வந்தர்களாக வாழ்கின்றனர்.

உறவுகள்

மக்கள் மிகவும் மனதளவில் நெருக்கமாகவும் அன்னியோன்னியமாகவும் பழகுவதை நாங்கள் கிராமங்களில் காணமுடியும்.

மக்கள் அதிகம் கூட்டு குடும்பங்களாகவும் உறவினர்களாகவும் ஒற்றமையாக வாழ்வனை நாங்கள் கிராமங்களில் அவதானிக்க முடியும். அங்கே ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாயினும் துன்ப நிகழ்வானாலும் அங்குள்ள உறவுகள் உடன் நின்று உதவுவதனை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.

நிம்மதியான வாழ்வு

இன்று மக்களிடத்தில் நாகரீக மோகமானது குடிகொண்டு விட்டதனால் பெரும்பாலன மக்கள் நகரங்களை நோக்கி படையெடுக்க துவங்கி விட்டனர்.

வேலை வாய்ப்பு தேடியும், உயர் கல்விக்காகவும் பல்வேறு தேவைகளுக்காக மக்கள் நகரங்களில் வாழ்ந்தாலும் வாழ்வின் நிம்மதியான பகுதி என்பது கிராமங்களில் தான் சாத்தியமானதாக இருக்கும்.

நகரங்களில் மன அழுத்தங்களோடு வாழ முடியாமல் பலரும் இன்ற கிராமங்களை நோக்கி வருவதனை எம்மால் அவதானிக்க முடியும்.

முடிவுரை

பொதுவாகவே மேற்கத்தைய மற்றும் அபிவிருத்தி அடைந்த நாட்டினர் தமது அமைதியான வாழ்விற்காக தமது கிராமங்களையும், பாரம்பரியங்களையும் மிகவும் அழகாக பராமரித்து வருகின்றனர்.

ஆனால் எங்களுடைய சமூகமோ எமது கிராமங்களின் தனித்துவங்களை மறந்து அவற்றின் இயற்கையினை அழித்து வருவது வேதனைக்குரிய விடயமாகும். மனிதன் எந்த நிலைக்கு முன்னேறி சென்றாலும் தனது பழமையினை மறக்க கூடாது.

You May Also Like:

பெண் இல்லாத துறை உண்டோ கட்டுரை

உண்மையே உயர்வு தரும் கட்டுரை