சமுதாய முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கானது அளப்பரியதாகும். ஏனெனில் ஒரு சமுதாயம் சிறந்த விளங்க முக்கிய பங்குதாரர்கள் மாணவர்களே ஆவர்.
சமுதாய முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
- சமூக பணியில் மாணவர்கள்
- இன்றைய சமூகத்தில் மாணவர்களும் போதைப்பொருள் பாவனையும்
- சமூகத்தில் மாணவர்களின் பங்கு
- முடிவுரை
முன்னுரை
சமுதாய நலனை கருத்திற்கொண்டு சமுதாய முன்னேற்றத்திற்காக அனைவரும் செயற்படுவது இன்றியமையாததாகும். அந்த வகையில் சமுதாய பணிகளில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலமாகவே ஓர் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.
மாணவர்களே சமூகத்தில் மிக முக்கியத்துமிக்கவர்களாக காணப்படுகின்றனர் என்றடிப்படையில் சமூகத்தின் பல்வேறுபட்ட விடயங்களில் பிரதான பங்குதாரர்களாக மாணவர்கள் காணப்படுவது சிறப்பிற்குரியதாகும்.
சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இன்று சமூக முன்னேற்றத்தில் பல்வேறு விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றது அதாவது சமூகமானது முன்னேற்றத்தை நோக்கிச்செல்லாது பல்வேறுபட்ட சாவல்களை ஏதிர்நோக்கி கொண்டே செல்கின்றது எனலாம்.
அந்த வகையில் சமூகம் ஏதிர்நோக்கும் பிரச்சினைகளாக வறுமை, போதைப்பொருள் பாவணை, கல்வியறிவின்மை, வேலைவாய்பின்மை என பல்வேறு பிரச்சினைகளை ஏதிர்நோக்குகின்றனர். இதன் காரணமாகவே சமூகமானது பாரிய பின்னடைவை நோக்கிச்செல்கின்றது.
சமூக பிரச்சினைகளில் பிரதானமாக போதைப்பொருள் பாவனையே காணப்படுவதோடு மட்டுமல்லாது இத்தகைய போதைப்பொருள் பாவனையில் இன்று அதிகமாக பாதிப்படைந்து வருவது மாணவர்களாகவே காணப்படுகின்றனர்.
எனவேதான் சிறந்த மாணவ சமூகத்தினாலேயே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் ஆகவே ஒவ்வோர் மாணவனும் இதனை நன்கு உணர்ந்து செயற்படுதல் கட்டாயமானதாகும்.
சமூக பணியில் மாணவர்கள்
மாணவர்களாகியவர்கள் சமூக பணியில் ஈடுபடுவதானது சிறப்பானதொன்றாகும். அந்த வகையில் பல்வேறு மாணவர் சங்கங்கள் அமைக்கப்பட்டு அதனூடாக பல்வேறு சமூக தொண்டுகள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இவ்வாறு மாணவர் சங்கங்களை ஏற்படுத்துவதினூடாக சமூகத்திற்கு தொண்டு செய்வதற்கு பயிற்றுவிக்கப்பபடுகின்றார்கள். அந்த வகையில் செஞ்சிலுவை சங்கம், மாணவர் படை என பல்வேறு சங்கங்கள் பாடசாலைகளில் காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
இன்றைய சமூகத்தில் மாணவர்களும் போதைப்பொருள் பாவனையும்
இன்றைய சமூகத்தில் மாணவர்கள் தன் கல்வியை இடைநிறுத்திவிட்டு போதைப்பொருள் பாவனையிலேயே மூழ்கி காணப்படுகின்றனர்.
அதாவது சிறுவயதிலேயே இப்பாவனையின் காரணமாக கல்வியினை இழந்து சமூக சீர்கேடுகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதாவது போதைப்பாவனையின் காரணமாக தனது எதிர்கால வாழ்வை சீரழித்து வருகின்றமையினை காணக்கூடியதாகவே உள்ளது.
சமூகத்தை கட்டியெழுப்புவதில் சிறந்த பங்கு மாணவர்களுக்கே உரித்தானது என்பதனை உணர்ந்து சமூகத்தின் வெற்றிக்காக செயற்படுதல் கட்டாயமானதாகும்.
சமூகத்தில் மாணவர்களின் பங்கு
மாணவர்களாகியவர்கள் சமூகத்திற்காக செய்யவேண்டிய பணிகள் அளப்பரியதாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் மாணவர்களாகியவர்கள் சமூகப்பணியில் ஈடுபடல், சூழலின் தூய்மையை பேணுதல், வீதிகளில் தூய்மையை பேணுதல், கல்வி ரீதியில் பின்னடைந்தவர்களை முன்னேற்றுவதற்கான வழிகளை ஏற்படுத்துதல், போதைப்பொருள் பாவணை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், மருத்துவ செயற்பாடுகளில் வழிகாட்டுதல் என பல்வேறுபட்ட வகையில் சமூக முன்னேற்றத்திற்காக செயற்படல் வேண்டும். இதனூடாக சமூகமானது ஓர் சிறந்த பாதையில் செல்வதற்கு வழியேற்படும்.
முடிவுரை
மாணவர்களின் கையிலேயேதான் ஒரு சிறந்த சமூகத்திற்கான வளர்ச்சி தங்கியுள்ளது ஏனெனில் சமூக வளர்ச்சியில் ஓர் திருப்புமனையை ஏற்படுத்த மாணவர்களாலேயே முடியும் என்றடிப்படையில் மாணவர்களாகியவர்கள் எதிர்கால சந்ததியினரை முன்னிட்டு சமூகத்திற்காக பங்காற்றுவது அவர்களது கடமையாகும்.
You May Also Like: