செயற்கை நுண்ணறிவு கட்டுரை

seyarkai nunnarivu in tamil katturai

அசுர வளர்ச்சி கண்டுவரும் செயற்கை நுண்ணறிவானது எல்லாத் துறைகளிலும் பெரும் பங்காற்றி வருகின்றது. இது மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.

செயற்கை நுண்ணறிவு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வகைகள்
  • வளர்ச்சி
  • நன்மைகள்
  • தீமைகள்
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகத்திலுள்ள உயிரினங்கள் தன்னிச்சையாக யோசனை செய்து செயல்படக்கூடிய தன்மையில் உள்ளன. பிற உயிரினங்களுக்கு முன்னோடியாக பல்வேறு விதங்களாக யோசனை செய்து செயல்படக்கூடிய வகையில் மனிதர்கள் உள்ளனர். மனிதனைப் போல் இயந்திரங்களும் தன்னிச்சையாக யோசனை செய்து செயல்படக்கூடிய திறனோடு உருவாக்குவதே செயற்கை நுண்ணறிவு ஆகும்.

செயற்கை நுண்ணறிவின் வகைகள்

இதனை இரண்டாகப் பிரிக்கின்றனர்.

  1. General Artificial Intelligence
  2. Narrow Artificial Intelligence

என்பனவையே அவை இரண்டுமாகும்.

General Artificial Intelligence என்பது இயந்திரங்கள் மனிதனைப் போலவே எல்லா வகையிலும் யோசித்து செயல்படக் கூடியதாகும். இது தற்காலத்தில் அதிக அளவு வளர்ச்சி பெறவில்லை என்றாலும், எதிர்காலத்தில் பன் மடங்கு வளர்ச்சி அடையக்கூடிய வாய்ப்புள்ளது.

Narrow Artificial Intelligence என்பது இயந்திரங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் மாத்திரம் யோசித்து செயல்படுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இதுவே உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இயந்திரங்கள் நாம் கொடுக்கும் தகவல்களையோ அல்லது, தானாக மேம்படுத்திக் கொள்ளும் தகவலையோ. Machine learning என்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி

மருத்துவத்துறை முதல் விண்வெளி துறை வரை அனைத்து துறைகளிலும் இதன் பங்களிப்பு அளப்பெரியதாகும்.

உலகின் முதல் தொழில் புரட்சி நீராவியைக் கண்டுபிடித்ததில் இருந்து இயந்திரங்களின் மூலமாக உற்பத்தி செய்வதில் ஆரம்பித்து, இரண்டாவது தொழிற் புரட்சி இயந்திர மயமாக்கல் மூலம் உற்பத்திப் பெருக்கம், மின்மயமாக்கம் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. மூன்றாவது புரட்சியில் டிஜிட்டல் கணிப்பொறி, இணையம், தொலைத்தொடர்பு போன்றவற்றை இணைத்தது.

வரப்போகும் நாலாவது புரட்சியுடன் முக்கிய தொழில்நுட்பமாக குறிப்பிடப்படுவது செயற்கை நுண்ணறிவாகும் இது மிகப்பெரிய வளர்ச்சி நோக்கி நம்மை கொண்டு செல்லும்.

நன்மைகள்

தவறுகளை குறைத்தல் – செயற்கை நுண்ணறிவு பிழையை குறைக்க உதவுகின்றது. அத்தோடு அதிக அளவு துல்லியத்துடன் செயல்படுகின்றதால் விண்வெளி ஆய்வு போன்ற பல ஆய்வுகளில் இது பயன்படுத்தப்படுகின்றது.

செயற்கை நுண்ணறிவினை சுரங்கம் மற்றும், பிற எரிபொருள் ஆய்வுச் செயல் முறையில் பயன்படுத்தலாம். இந்த சிக்கலான இயந்திரங்களை கடல் தள ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தலாம். இவைகளினால் மனித வரம்பைக் கடந்தும் கூட பணி புரிய முடியும். நிதி நிறுவனங்கள், வங்கிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மோசடியை கண்டுபிடிக்க உதவுகின்றது.

டிஜிட்டல் உதவியாளர்கள் – ரோபோக்கள், உணர்வு ரீதியாக சிந்திக்காமல் தர்க்க ரீதியாக சிந்தித்து முடிவு எடுப்பதால் மிகவும் மேம்பட்ட நிறுவனங்கள் தங்கள் உதவியாளர்களாக அல்லது, பயனர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய டிஜிட்டல் உதவியாளர்களாக சேர்க்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்.

தீமைகள்

முன்னேறிய செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் வருங்காலத்தில் மனிதர்களை கீழ்த்தரமாக நடத்தும் எனவும், இந்தப் பூமியில் அதிகாரம் செலுத்துமளவிற்கு மேலாதிக்க்கம் பெறும் எனவும் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

முன்னேறிய செயற்கை நுண்ணறிவு மனிதனின் தேவையைக் குறைத்து வருகின்றது. மனிதக் கண்டுபிடிப்பு இயந்திரங்கள் அவனது வேலையில் புகுந்து மனிதனை வேகமாக வெளியேற்றுகின்றது.

முடிவுரை

செயற்கை நுண்ணறிவானது வரலாற்றின் சிறந்த கண்டுபிடிப்பாகும். இது மனித வாழ்க்கையைச் சுவாரஸ்யமாகவும், எளிதாகவும் மாற்றியுள்ளது. எனினும் இதன் விஸ்வரூப வளர்ச்சியானது மனிதனின் எதிர்காலத்தை எப்படி மாற்றியமைக்கும் என்பது கேள்விக்குறியே!

You May Also Like:

அறிவுக்கு விருந்தாகும் அறிவியல் கட்டுரை

அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள் கட்டுரை