தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை

Tamilaga Viduthalai Poratta Veerargal

இந்த பதிவில் “தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

விடுதலை போரில் வட இந்திய போராளிகளுக்கு கிடைத்த பெயர் தென்னிந்திய போராளிகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் மறைக்கப்பட்ட உண்மையாகும்.

தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வீரபாண்டிய கட்டபொம்மன்
  3. பாரதியார்
  4. கொடிகாத்த குமரன்
  5. வீரமங்கை வேலுநாச்சியார்
  6. முடிவுரை

முன்னுரை

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமானது நம் தேசத் தலைவர்கள் பல இன்னல்களைத் தாங்கிக்கொண்டு தங்கள் உயிரையும் துச்சமாக எண்ணி சுதந்திரத்திற்காய் போராடியதன் பயனாகும்.

சத்தியாகிரகம், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மாநாடுகள், கூட்டங்கள் என்று பல வழிகளில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினர். அதற்காக அவர்கள் பட்ட துன்பங்களை வார்த்தைகளால் அளவிட முடியாது.

அந்தவகையில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் பலரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர். இவர்களுள் வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வ. உ. சி, பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற பலரையும் குறிப்பிடலாம். இவர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

முதல் சுதந்திர போராட்ட வீரர் என வீரபாண்டிய கட்டபொம்மனைக் கூறலாம். இவர் பாஞ்சாலங்குறிச்சியின் சிற்றரசராவார். இவருக்கு ஊமைத்துரை, குமாரசாமி எனும் இரு சகோதரர்கள் இருந்தனர்.

அக்காலத்தில் தமிழ்நாடு ஆற்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆங்கிலேயரிடம் அதிக கடன் வாங்கியிருந்த நவாப் கடனைத் திருப்பி செலுத்த முடியாததால் சிற்றரசர்களிடம் வரி வசூலிக்க ஆங்கிலேயருக்கு அனுமதி கொடுத்தார். இதனை கட்டபொம்மன் எதிர்த்தார்.

பாரதியார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தனது தமிழ்ப் பாடல்களினாலும், எழுத்துக்களினாலும் சுதந்திரத் தீயை அனைத்து தமிழர்களுக்கும் ஊட்டியவர் ஆவார். தமிழ் மீதும், தமிழ் மண்ணின் மீதும் தீராத பற்றுக் கொண்டிருந்தவர்.

ஆங்கில படைக்கு எதிராக இவர் எழுதிய பாடல்கள் அமைந்திருந்ததால் இவரது படைப்புகள், புத்தகங்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டிருந்த பர்மாவில் தடை செய்யப்பட்டிருந்தது.

இவரது எழுத்துக்கு தமிழகத்தில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சியினர் இவரின் இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது. இவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

ஆனால் எதற்கும் அஞ்சாத அவர் தொடர்ந்து சுதந்திர உணர்வுகளை தனது படைப்புகள் மூலம் மக்களிடையே பரப்பி வந்தார்.

கொடிகாத்த குமரன்

இவர் ஒருமுறை இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது ஆங்கிலேயே பொலிஸாரின் தாக்குதலையும் தாங்கிக் கொண்டு நமது தேசியக் கொடியை கீழே விழாமல் பிடித்திருந்தார்.

இதனால்தான் இவருக்கு கொடிகாத்தகுமரன் எனப் பெயர் வந்தது. அந்த சமயத்தின் போது உயிர் பிரிந்தும் கூட மூவர்ணக் கொடியை இடைவிடாது தாங்கிப் பிடித்திருந்தது இவரது கைகள்.

வீரமங்கை வேலுநாச்சியார்

ராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கை பகுதியில் இருந்து பிரிட்டிஷ் ஸ்ரட் இந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி ஆவார்.

வேலுநாச்சியார் யாருக்கும் அஞ்சாத வீரப் பெண்ணாவார். அசைக்க முடியாத வீரப்படையுடன் ஆங்கிலேயரை எதிர்த்து சிவகங்கை மீட்ட பெருமைக்குரியவர்.

சிவகங்கையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி வேலு நாச்சியாரின் கொடி ஏற்றப்பட்ட வரலாறும் உண்டு.

முடிவுரை

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராடினர். நூற்றுக்கணக்கான தலைவர்கள் அவர்களை வழிநடத்திச் சென்றனர்.

ஆயினும் கூட தேசிய அளவில் வட இந்திய போராளிகளுக்கு கிடைத்த பெயர் தென்னிந்திய போராளிகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் மறைக்கப்பட்ட உண்மையாகும்.

எனவே இவர்களது தியாகத்தை நாம் வெளியுலகிற்கு கொண்டு வந்து என்றென்றும் போற்றுவோம்.

You May Also Like :
தாய் நாடு பற்றிய கட்டுரை
ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை