தாய் நாடு பற்றிய கட்டுரை

Thaai Naadu Katturai In Tamil

ஒருவருக்கு அடையாளத்தை கொடுக்கும் “தாய் நாடு பற்றிய கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

நாம் தாயை நேசிப்பது போல தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும். தாய் நமக்கு உயிர் கொடுக்கிறாள் தாய் நாடு நமக்கு அடையாளத்தையும் வாழ்வையும் கொடுக்கிறது.

தாய் நாடு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இந்தியாவின் சிறப்புகள்
  3. தாய் நாட்டின் பெருமைகள்
  4. தேசப்பற்று
  5. தாய் நாட்டிற்காக உயிர் நீத்த தியாகிகள்
  6. முடிவுரை

முன்னுரை

தாய்க்கு இணையாக நேசிக்கக் கூடிய ஒன்று என்றால் அது தாய் நாடாக மட்டுமே இருக்க முடியும். ஒருவர் பிறந்து வளர்ந்த நாடு தான் தாய் நாடு எனக் கருதப்படுகின்றது. என் தாய் நாடு இந்தியா என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.

தாய் நாட்டின் மீது கொண்ட அன்பு ஆழமான ஒன்றாகும். இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் சுதந்திரம் அடைந்தது. நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாய் நாட்டுப்பற்று தான் இந்திய தேசத்தை அந்நியர்களிடம் இருந்து விடுதலை பெற வைத்தது.

தாய் நாட்டின் வளர்ச்சிக்காக தம்மையே அர்ப்பணித்தனர். தாய்நாடு அதன் சிறப்பம்சம் உள்ளிட்ட பலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

இந்தியாவின் சிறப்புகள்

என் தாய் நாடான இந்தியா பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பல்வேறு மொழி இன மக்களை ஒருங்கே கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகும். எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை இதை இந்தியாவில் தான் முதன் முதலில் கண்டுபிடித்து முறைப்படுத்தினார்கள். இன்று உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகின்றது. சதுரங்க விளையாட்டை இந்தியாவே முதன் முதலில் கண்டுபிடித்தது.

தாய் நாட்டின் பெருமைகள்

இந்தியா நீண்ட வரலாற்றையும் தொன்மையையும் கொண்ட நாடாகும். இங்கு ஆச்சரியங்களும் அதிசயங்களும் பஞ்சமில்லை. ஏனெனில் இங்குள்ள கோவில்கள், பழைய கட்டிட கலை மரபுகள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்தும் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகரிக வாழ்வைத் கொண்டது இந்தியா. உலகின் மிகப்பெரிய ரயில்வே எம் நாட்டு ரயில்வே ஆகும்.

தேசப்பற்று

தாய்நாட்டின் மீது கொண்ட அதீத பக்தியை தேசப்பற்று ஆகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு தேசப்பற்று அவசியமாகும்.

நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தேசப்பற்று தான் இந்தியாவை அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற வைத்தது. தேசப்பற்று நம் நாட்டை அந்நியர்களிடம் இருந்தும் விரோதிகளிடம் இருந்தும் பாதுகாக்க வல்லது.

தேசத்தின் ஒற்றுமைக்கும் சமுதாய ஒருங்கிணைப்பிற்கும் தேசப்பற்று முதன்மையானதாகும். மாணவர்களாகிய நாம் தாய் நாட்டின் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டவர்களாக வளர வேண்டும்.

தாய் நாட்டிற்காக உயிர் நீத்த தியாகிகள்

தாய் நாட்டிற்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை தந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்திற்கு எதுவும் ஈடில்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திய மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ், பகத்சிங், வல்லபாய் பட்டேல், ஜவகர்லால் நேரு, பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற பலரையும் சுதந்திரப் போராட்ட தியாகிகளாக நினைவு கூறலாம்.

இவர்கள் தாய் நாட்டிற்காக ஆற்றிய தியாகங்கள் எண்ணிலடங்காதவையாகும். இவர்களது தியாகங்களே இன்று எம்மை சுதந்திர இந்தியாவில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.

முடிவுரை

தாயை நேசிப்பது போல் தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும். தாய் நமக்கு உயிர் கொடுக்கின்றாள். தாய்நாடு நமக்கு வாழ்வளிக்கின்றது. நமது அடையாளமே தாய்நாடு தான்.

இனத்தால், மதத்தால், மொழியால், சாதியால் வேறுபட்டாலும் நாம் அனைவருமே இந்தியத் தாயின் பிள்ளைகள் என்பதை மறத்தல் கூடாது. தாய் நாட்டை நேசிப்போம். இந்திய தேசத்தை உலகளவில் பெருமைப்படுத்துவோம்.

You May Also Like :
ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை