வரலாற்றில் முக்கியத்துவமிக்கவரும், சுதந்தி இந்தியாவின் பிரதமராகவும் காணப்படுபவரே பண்டிதர் நேரு ஆவார். இவர் உலக அரசியலிலே சிறப்பிடம் பெற்று திகழும் ஒரு நபராக காணப்படுகின்றார். அந்தவகையில் நேருவின் திட்டங்களானவை சிறப்பிடம் பெற்றே திகழ்கின்றது.
நேருவின் கொள்கைகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நேருவின் பெருமைகள்
- வெளியுறவுக் கொள்கை
- பொருளாதாரக் கொள்கை
- நேருவின் ஆட்சிச் சிறப்பு
- முடிவுரை
முன்னுரை
இந்திய சுதந்திரத்தில் முக்கிய பங்கினை வகித்து சரித்திரம் போற்றும் தலைவராக திகழ்பவர் நேரு ஆவார்.
இவரது கொள்கைகள் மற்றும் பணிகளானவை இன்று வரை பேசப்பட்டு வருகின்றமையானது இவரது சிறப்பினையே பறைசாற்றுகின்றது. மேலும் தேசத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டவராகவும் திகழ்பவர் நேரு அவர்களே.
ஜவஹர்லால் நேருவின் பெருமைகள்
நவீன இந்தியாவின் சிற்பியாக கருதப்படுபவர் நேரு ஆவார். இவர் வகுத்த திட்டங்களானவை இன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
மேலும் ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு வித்திட்டவர் என்ற பெருமை இவரையே சாரும், அதேபோன்று கல்வியில் மாணவர்களுக்கான பல நலத் திட்டங்களை கொண்டு வந்தமை, சமூகத்திற்கான கொள்கைகளை வகுத்தல், சிறந்ததொரு தேசத்தினை கட்டியெழுப்பியமை போன்றவை ஜவஹர்லால் நேருவின் பெருமைகளையே எடுத்தியம்புகின்றது.
நேருவின் வெளியுறவுக் கொள்கை
வெளியுறவுக் கொள்கையானது அமைதியை அடிப்படையாகக் கொண்டே இடம் பெற்றன. அதாவது நேருவுடைய வெளியுறவுக் கொள்கையின் மூலமாகவே இந்திய நாடானது சிறந்த முறையில் காப்பாற்றப்பட்டது.
அந்த வகையில் வளரும் நாடுகளோடு ஒற்றுமையான முறையிலேயே வெளியுறவுக் கொள்கையானது இடம் பெற்றது. அணிசேரா இயக்கத்தை உருவாக்கி நாடுகளிடையே பொருளாதாரத்தை மேம்படுத்தியமையானது அமைதியான முறையிலேயே இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது வெளியுறவுக் கொள்கைகள் மூலம் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட்டமையானது சிறப்பிற்குரியதாகும். மக்கள் மத்தியில் தமது நாட்டின் மீதான பற்றை விதைத்தவராகவும் இவரே காணப்படுகின்றார்.
பொருளாதார கொள்கை
நேருவின் பொருளாதார கொள்கைகளானவை வறுமையை ஒழிப்பதை நோக்காக கொண்டே அமைந்துள்ளதோடு இந்தியாவின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தியது. அதாவது ஐந்தாண்டு திட்டத்தினை கொண்டு வந்து அதனூடாக தொழில் மயமாக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சமூகத்தில் வறுமையில் வாடுபவர்களுக்கான பல பொருளாதார நலத் திட்டங்களை கொண்டு வறுமையை ஒழிப்பதற்கு அரும்பாடுபட்டவராவார். மேலும் கல்வி, சுகாதாரம் என பல துறைகளை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டே செயற்பட்டார்.
இவரது பொருளாதார கொள்கைகளில் விவசாயிகளது நலனும் பேணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நேருவின் ஆட்சிச் சிறப்பு
ஒற்றுமையான தேசத்தை கட்டியெழுப்புவதில் நேருவின் ஆட்சியானது சிறந்து விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். சாதி முறைகளை களைந்து மக்கள் மனதில் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியவர் மாமனிதர் நேரு ஆவார்.
தனது ஆட்சியின் போது மதச் சார்பற்ற கொள்கையை கடைபிடித்தவராகவும் இந்தியாவில் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த பாரிய பங்களிப்பினை மேற்கொண்ட தலைவராகவும் இவரே திகழ்கின்றார். அந்த அடிப்படையில் வரலாற்றில் ஓர் தொலை நோக்கு சிந்தனையுடன் எதிர்கால திட்டங்களை வகுத்த ஆட்சியாளராகவும் காணப்பட்டார்.
முடிவுரை
இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்த மாமனிதரே ஜவஹர்லால் நேரு ஆவார். இவருடைய கொள்கைகள் ஒற்றுமையான தேசத்தை கட்டியெழுப்புவதனை நோக்காக கொண்டே காணப்பட்டமை சிறப்பிற்குரியதாகும். மேலும் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்படக்கூடியதொரு தலைவரே நேரு அவர்கள் ஆவார்.
You May Also Like: