இந்த பதிவில் நீர்ப்பற்றாக்குறையை தீர்க்கும் அணையான “முல்லை பெரியாறு அணை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேராளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணையாகும்.
முல்லை பெரியாறு அணை பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வரலாறு
- நோக்கம்
- பிரச்சினைகள்
- பயன்பாடுகள்
- முடிவுரை
முன்னுரை
முல்லை பெரியாறு அணையானது 1895 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேராளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணையாகும்.
இந்த அணை கேரள தமிழ்நாட்டு எல்லையில் கேரளாவிற்கு சொந்தமான பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையினை தமிழக பொதுப்பணி துறையே பராமரித்து வருகின்றது. இக்கட்டுரையானது இவ்வணை தொடர்பான விளக்கமளிப்பதாக காணப்படுகின்றது.
வரலாறு
முல்லை மற்றும் பெரியாறு ஆகியவற்றை இணைத்து கட்டிய இந்த அணையினை ஆங்கிலேய அரசு கட்டியிருந்தாலும் இதற்காக முதன் முதலில் திட்டமிட்டவர் இராமநாதபுர மன்னர் சேதுபதி ஆவார்.
அதன் பின்னர் மதுரையின் ஆட்சியாளர்களாக இருந்த ஜார்ஸ் பேரிஸ், கர்னல் பேபர், ஆகியோரின் ஆட்சி காலத்தில் இவ்வணை தொடர்பாக பல இழுபறிகள் காணப்பட்டமையினால் இறுதியாக 1882 ஆங்கில அரசினால் முழுமையான திட்டம் உருவாக்கப்பட்டு ஜான் பென்னி என்பவரிடம் இவ்வணை கட்டுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
நோக்கம்
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கும் இவ்வாற்றினை கிழக்கு நோக்கி திருப்பி மழை மறைவு பகுதியான மதுரை மாவட்டத்திற்கு பயன்படக் கூடிய வகையில் செய்வதே இவ்வணை கட்டப்படுவதற்கான முக்கிய நோக்கமாகும்.
வைகையாற்றின் நீர்வளம் போதாமல் உள்ளமையினால் அணையினால் உருவாக்கப்பட்ட தேக்கடி நீர்த்தேக்கத்திலிருந்து கிழக்கு நோக்கி சுரங்கம் வழியாக வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகின்றது.
பிரச்சினைகள்
இந்த அணையினுடைய பாதுகாப்பு தொடர்பில் கேரள மற்றும் தமிழக மாநில அரசுகளுக்கு இடையே ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை முறுகல் நிலை காணப்படுகின்றது.
அணை பாதுகாப்பாக இல்லை எனக்கூறி 1979 இல் கேரள அரசு அணையினுடைய நீர் கொள்ளளவை 152 அடியில் இல் இருந்து 136 ஆக குறைத்துவிட்டது.
இருப்பினும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் விளைவாக பல சட்ட ரீதியான போரட்டத்திற்கு பின்னர் நீர் தேக்கும் அளவு 142 அடியாக உயர்த்தப்பட்டது.
பயன்பாடுகள்
அணையின் மூலம் கிடைக்கும் நீரினால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 208,144 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றது.
1970 முதல் 140 மெகா வாட் திளன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
மேலும் இவ்வணையை சூழவுள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், அல்லிநகரம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய நகராட்சி மற்றும் பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இவ்வணை காணப்படுகின்றது.
முடிவுரை
தமிழ்நாடானது விவசாயத்துறையில் கோலோச்சி இருக்கின்றமைக்கு இவ்வாறான அணைகளின் கையிருப்பே காரணமாகும். அதுமட்டுமன்றி குடிநீர் தட்டுப்பாடு தமிழ்நாடு எதிர் நோக்குகின்ற தற்கால பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இவற்றை தடுக்கும் வகையில் ஏராளமான தடுப்பணைகள் ஏரிகள், குளங்கள் என எமது முன்னோர் அமைத்து சென்ற நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து அவற்றை நாமும் பாதுகாத்து வாழ வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
நீர்வளம் காத்து செழிப்பான தேசத்தை உருவாக்குவது எமது கடமை என உணர்ந்து செயற்பட வேண்டும்.
You May Also Like : |
---|
நீர் மேலாண்மை கட்டுரை |
மழை நீர் உயிர் நீர் கட்டுரை |