விதிகளை மதிப்போம் விபத்தை தடுப்போம் கட்டுரை

விதிகளை மதிப்போம் விபத்தை தடுப்போம்

இந்த பதிவில் “விதிகளை மதிப்போம் விபத்தை தடுப்போம் கட்டுரை” பதிவை காணலாம்.

சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் போது விபத்துக்களை பெரிதும் தவிர்க்க முடியும்.

விதிகளை மதிப்போம் விபத்தை தடுப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சாலைப் பாதுகாப்பு உயிர்ப் பாதுகாப்பு
  3. விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
  4. விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகள்
  5. விபத்துக்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

“இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் மதிப்போம்” என்றார் பாரதியார். மனிதனானவன் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு நீர், நிலம், வான் வழிகளைப் பயன்படுத்துகின்றான்.

இதில் வான்வழி விரைவானதாக இருந்தாலும் அதிக செலவாகும். இதேபோல் கடல்வழியில் நேரமும் பொருளும் விரயமாகும். இது பொருட்கள் அதிகளவில் கண்டம் விட்டு கண்டம் எடுத்துச்செல்ல மட்டுமே சிறந்ததாக இருக்கின்றது.

நிலவழி போக்குவரத்தில் இரும்பு பாதைகளும், சாலைகளும் உள்ளன. எண்ணற்ற மக்களை ஒவ்வொரு நாளும் இணைக்கும் பாலமாக இருப்பவை தரைவழி வீதிகளே ஆகும்.

தினந்தோறும் அதிகளவில் விபத்துக்கள் நடைபெறுவதும் இங்குதான். அவ்வகையில் விதிகளை மதித்து விபத்துக்களை தடுப்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலைப் பாதுகாப்பு உயிர்ப் பாதுகாப்பு

இன்று நவீன வளர்ச்சியின் காரணமாக சாலைகளில் பல வகை வாகனங்களைக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வண்டி, மகிழுந்து, பேருந்து, சரக்குந்து, சிற்றுந்து எனப் பல வகைகளை கூறமுடியும்.

இவை ஒரு வழி, இரு வழி, மூவழி, நான்கு வழி, ஆறு வழி என பலவழிச் சாலைகளைச் சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. இதனால் பல விபத்துக்களை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது.

எனவே சாலை விதிகளை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்கும் போது தான் வீதியில் பாதுகாப்பு நிலவும். வீதிப் பாதுகாப்பு ஏற்படும்போது தான் உயிர்காப்பு ஏற்படும்.

விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்

வயது முதிர்வு, சோர்வு, உடல்நலக்குறைபாடு, வாகனம் ஓட்டுதலில் போதிய பயிற்சியின்மை மற்றும் மனநிலைக் குறைபாடுகள் போன்ற காரணங்களினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அதி வேகமாக வாகனங்களை செலுத்தும் போது அதிகளவில் விபத்துக்கள் நிகழ்கின்றனமையைக் காணமுடிகின்றது.

குடிப்போதையில் வாகனம் ஓட்டுவதால் வாகன ஓட்டுநர்கள் ஓட்டும் திறமையை இழந்து விபத்துக்கள் நிகழ்கின்றன.

விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகள்

வீதிப் போக்குவரத்து விபத்துகளால் காயமடைகின்றவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை விடவும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாகும்.

அத்தோடு சொத்தழிவுகளும் பெரிதும் இடம்பெறுகின்றன. விபத்துக்கள் ஏற்படும்போது உடல் அவயவங்கள் பாதிக்கப்படுவதுடன் உடல் அவையவங்களை இழக்கும் நிலையும் ஏற்படுகின்றது.

விபத்துக்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்

சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் போது விபத்துக்களை பெரிதும் தவிர்க்க முடியும்.

தகுதியானவர்களுக்கு மட்டும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும்.

வீதி விபத்துக்களை மதிக்காமல் நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகளையும், அபராதங்களையும் அரசு விதிக்க வேண்டும்.

போக்குவரத்து சட்டங்களையும்இ விதிகளையும் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

முடிவுரை

போக்குவரத்து சட்டங்களையும், ஒழுங்கு விதிகளையும் மதித்துச் செயற்படுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் விபத்துக்களை குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

விபத்து நிகழும் போது விபத்தை ஏற்படுத்துபவர் மட்டுமன்றி விபத்தால் பாதிக்கப்பட்டவர் உட்பட அவர்களைச் சார்ந்த உறவுகளும் அருகில் இருப்பவர்களும் பாதிப்புக்களைச் சந்திக்கின்றனர் என்பதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

எனவே விதிகளை மதித்து விபத்தை தடுப்போம். உயிர்களைக் காப்போம்.

You May Also Like:
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இளமையில் கல்வி கட்டுரை