இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு + கட்டுரை

இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு கட்டுரை

இந்த பதிவில் “இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு + கட்டுரை” பதிவை காணலாம்.

நெஞ்சுரமும், நாட்டுப்பற்றும், சமூக பொறுப்பும் நிறைந்த இளைஞர்கள் அதிகம் இந்தியாவில் வாழ்கின்றனர்.

இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு + கட்டுரை

இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு + கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இளைஞர்களின் பலம்
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • சமூக பொறுப்பு
  • முடிவுரை

முன்னுரை

இன்றளவும் இந்தியா பலமான ஒரு நாடாக கருதப்பட காரணம் அதன் இளைஞர் படை அல்லது உழைக்கும் வர்க்கம் ஆகும் இந்தியாவில் 65 சதவீதமானர்கள் இளைஞர்களாக உள்ளனர்.

பொதுவாக இளைஞர்களை ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிப்பார்கள் இத்தகைய பல சக்தி வாய்ந்த இளைஞர்கள் ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாக மாற்றும் இயல்புடையவர்கள். இவர்களது பங்களிப்பினால் உண்டாகும் சமுதாய நன்மைகள் தொடர்பாக இக்கட்டுரையில் காண்போம்.

இளைஞர்களின் பலம்

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் “என்னிடம் தைரியமான 100 இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன்” என்றார். இந்த வரிகள் மூலம் ஒரு திறமையான இளைஞனின் பலம் எத்கையது என்பதை நாம் உணரலாம்.

இத்தகைய நெஞ்சுரமும், நாட்டுப்பற்றும், சமூக பொறுப்பும் நிறைந்த இளைஞர்கள் அதிகம் இந்தியாவில் வாழ்கின்றனர். இவர்களால் சாதிக்க முடியாத விடயங்கள் எதுவுமே இல்லை எனும் அளவிற்கு பல விடயங்களை இங்கே மாற்றி காட்டியுள்ளனர்.

பல பின்னடைவுகளை சந்தித்த இந்தியா இன்று உலக அரங்கில் பல சாதனைகளை அரங்கேற்ற இளைஞர்களின் கூட்டு முயற்சியே காரணம் எனலாம்.

கல்வி

இளைஞர்கள் சமுதாயத்தை மேலும் ஒரு படி உயர்த்தி செல்வது கல்வியாகும். இந்த கல்வி அறிவுடைய இளைஞர்கள் தமது அறிவையும் ஆற்றலையம் கொண்டு பல துறைகளில் சாதிக்க முடியும்.

தமது அறிவினாலும் ஆற்றலினாலும் பல புதுமையான விடயங்களை கண்டுபிடிக்க முடியும் ஆற்றல் மிக்க தலைவர்களாக உருவாக முடியம்.

அந்நிய சக்திகள் மற்றும் பிரிவினை அரசியல் போன்றவற்றிற்கு இது முற்றுப்புள்ளி வைத்து ஒரு முற்போக்கான ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப கல்வி வழிசமைக்கும் எனலாம்.

தொழில்நுட்பம்

இந்திய இளைஞர்கள் இன்று தொழில்நுட்பத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். உலகமெங்கிலும் உள்ள பல முன்னணி நாடுகளின் தொழில்நுட்ப துறைகளில் இந்திய இளைஞர்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

மோட்டார் வாகன கைத்தொழில், வாகன உற்பத்தி, கைத்தொழில், விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து, தொலைத்தொடர்பாடல் என பல துறைகளிலும் இன்று தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இளைஞர்களால் சாத்தியமாகி வருகின்றது.

விண்வெளியிலும், இராணுவத்துறையிலும் இந்தியா பல சாதனைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சமூக பொறுப்பு

இத்தகைய திறமைகளை கொண்ட இந்திய இளைஞர்கள் தமது தாய்நாட்டின் மீதும், தமது சமூகத்தின் மீதும், தமது சுற்றுசூழுல் மீதும் ஆழமான அக்கறை உடையவர்களாக இருப்பது அவசியம் ஆகின்றது.

இவ்வகையான போக்கு நிச்சயமாக ஒரு முன்னுதாரணமான சமுதாயம் உருவாக ஒரு முற்போக்காக அமையும்.

இன்றைய இளைஞர்களின் சமூக பொறுப்பு தொடர்பாக பல நேர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் நிச்சயமாக இந்த இளைஞர்கள் தான் இந்த நாட்டை மாற்ற போவது உறுதியானது.

முடிவுரை

எடுத்து காட்டாக உலகின் பல சிறந்த நாடுகளை எடுத்து பார்ப்போமானால் அங்குள்ள இளைஞர்கள் மிகவும் சிறந்த முறையில் தமது நாட்டுக்கு பங்காற்றி வருகின்றனர். தமது சமூகத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இதனை பின்பற்றி நாமும் நமது சமுதாயத்துக்கு வழிகாட்டி சமூகபொறுப்புடையவர்களாக வாழ வேண்டும் இதுவே நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

You May Also Like :
உலக இளைஞர் திறன் தினம் கட்டுரை
இளைஞர்கள் பற்றிய கட்டுரை