ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
என்ற பொன்முடியாரின் வாக்குக்கிணங்க நாம் நமது கடமைகளைச் செவ்வனே செய்து செழிப்பான இந்தியாவை உருவாக்குவது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.
நாட்டின் நிலவிவரும் சீரற்ற நிலைபாட்டை மேம்படுத்தி எதிர்கால இந்தியாவை கட்டியெழுப்ப வேண்டும். இந்திய குடியரசு நாடாக மாறி 74 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டது. 2047 ஆம் ஆண்டை நெருங்கும்போது, குடியரசு நாடாக மாறி 100 ஆண்டுகளைக் கடந்திருப்போம்.
2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வேற்றுமையில் ஒற்றுமை
- நவீனமாகும் வேளாண்மை
- தன்னிறைவுப் பொருளாதாரம்
- பற்றாக்குறையற்ற வளங்கள்
- முடிவுரை
முன்னுரை
முதலில் நம் நாட்டை எல்லா நாடுகளையும் விட மேம்படுத்த வேண்டும். அதற்காக நமது திட்டமிடல் என்ன? எல்லா வகையிலும் தண்ணீரைப் பெற முடியுமா? வறுமையை ஒழித்து, ஏற்றத்தாழ்வை போக்க முடியுமா? நமது தேசம் வளர்ச்சி, சமத்துவம், வேலை வாய்ப்பு, அமைதி ஆகியவற்றினை பெற முடியுமா? இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க கூடிய வகையில் 2047 ஆம் ஆண்டில் இந்தியா அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை தான் பாரதம். வேதங்கள் பிறந்த இடம் பாரதம். ஆற்றுவனம், சோற்றுவனம். கொஞ்சமா? இல்லை, ஆன்மீக தத்துவம் தான் பஞ்சமா? மொழிகள் பல, இனங்கள் பல ஆயினும் இந்து, இயேசு, புத்த, முகமதியர் ஆயினும் ஒன்று. “உடன்பிறந்தோர் யாவரும் என்றும்” உணர்வு நிலை வளர்ந்து வரும் நாடு இது. இந்த ஒற்றுமை தான் 2047 இந்தியாவின் அடிப்படை வேராகும்.
நவீனமாகும் வேளாண்மை
கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பாக இருப்பவை ஆகும். இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேராக வேளாண்மை பொருட்கள் இருக்கின்றன. துண்டு நிலங்களை இணைத்து பண்ணை விவசாயம் செய்யும் முறையில் வேளாண்மை உற்பத்தி பெருகிவிடும்.
விவசாய நிலங்களிலேயே விற்பனை கூடங்கள் அமைந்திருக்கும். தரம் வாய்ந்த வேளாண்மை பொருட்கள் அங்கே விற்பனைக்கு இருக்கும்.
தன்னிறைவுப் பொருளாதாரம்
இரும்பு, சீமென் ஆலைகள், சர்க்கரை ஆலைகள், மிகைமின் நிறுவனங்கள், ரயில் பெட்டி தொழில்சாலை, விமான உதிரி பாகங்கள் உற்பத்தி, ஆடைகள் உற்பத்தி, தோல் உற்பத்தி, உணவு, தானியங்கள் பதப்படுத்தல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் வல்லரசு. இந்தியா தன்னிறைவு பெற்று பொருளாதார பலத்தோடு இருக்கும்.
பற்றாக்குறையற்ற வளங்கள்
உப்பு நீரில் ஒளிரும் எல்இடி விலக்குகள் யாவும் இரவைப் பகலாக்கும். மின் சக்தியின் இயங்கும் வாகனங்கள். வாகனப் புகை இருக்காது. ரோன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பப்படும்.
எதிர்கால இந்தியா சிறப்பாக அமைய தேவையானவை
நாட்டின் வெளிப்படுத்தத் தன்மை: ஒழிவு மறைவற்ற அரசாங்கமே ஊழலற்ற அரசாங்கம் ஆகும். எனவே இந்தியா சிறந்து விளங்க நாட்டின் வெளிப்படைத்தன்மை அவசியமாகும்.
நேர்மை: அரசு துறையில் பணியாற்றும் கீழ்நிலை ஊழியர்கள் முதல் அமைச்சர்கள் வரை நேர்மை அவசியமாகும்.
அரசியல் விழிப்புணர்வு: ஊழலும், கையூட்டலும் நாட்டை சீரடிக்கும். இவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்க எடுக்கும் போதே நாடு முன்னேற்றம் அடையும்.
அறிவு சார்ந்த முன்னேற்றம், தீவிரவாத எதிர்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
முடிவுரை
எதிர்கால இந்தியா சிறப்பாக அமையத் தேவையானவற்றை மேற்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இப்போதிலிருந்தே அதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படும் போது 2047 ஆம் ஆண்டு இந்தியா தன்னிறைவு பெற்று வல்லரசாகத் திகழும்.
You May Also Like: