சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு கட்டுரை

சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு

இந்த பதிவில் “சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.

வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்பட்ட சவால்களும் தடைகளும் தான்மனிதனை முழுமையாக சிந்திக்க வழி வகுத்தது.

சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரம்பம்
  • சவால்களுக்கான தீர்வு
  • அபரிமிதமான வளர்ச்சி
  • அன்றாட வாழ்வில் அறிவியல்
  • முடிவுரை

முன்னுரை

இன்றைய நவீன யுகத்தில் மக்களின் வாழ்க்கையானது முழுக்க முழுக்க அறிவியலோடு பின்னி பிணைந்து காணப்படுகிறது.

கற்பனை செய்து பார்க்க முடியாத காரியங்களை கூட கண்ணிமைக்கும் நொடிகளில் மனிதனால் சாதித்து விட முடிகிறது என்றால் அது அறிவியலின் மூலமே சாத்தியமாகின்றது.

இன்றைய உலகில் கடினங்கள் என்பவை அனைத்தும் இலகுவாக்கப்பட்டுள்ளது என்றால் மிகையல்ல.

புதிய புதிய கண்டுபிடிப்புக்களால் இன்று உலகம் புதிய ஒரு பரிமாணத்தை நோக்கி பயணிக்கின்றது இவை பற்றி நாம் இக்கட்டுரையில் நோக்கலாம்.

ஆரம்பம்

மனிதன் முன்பு தனது உடலை வருத்தி கடினமாக உழைத்து தனக்கான தேவைகளை பூர்த்தி செய்து இங்கே வாழ்ந்தான். அவன் தனது வேலைகளை இலகுபடுத்த பல புதிய கண்டுபிடிப்புகளை செய்ய ஆரம்பித்ததோடு அறிவியல் ஆரம்பம் ஆகின்றது.

பல நவீன அறிவியலானது 17ம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பமானது என அறியப்படுகின்றது.

நெருப்பை கண்டுபிடித்தல் அதனை அடுத்து சக்கரங்களையும் வண்டிகளையும் கண்டுபிடித்தல் என துவங்கி தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்களுக்கு தீர்வுகளை கண்டறிய ஆரம்பித்த மனிதன் அறிவியலை சிறப்பாக கையாண்டு தனது வாழ்வினை மேலும் பன்மடங்காக மேம்படுத்தி கொண்டான்.

சவால்களுக்கான தீர்வு

வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்பட்ட சவால்களும் தடைகளும் தான்மனிதனை முழுமையாக சிந்திக்க வழி வகுத்தது. அந்த சவால்கள் தான் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

உதாரணமாக பயணிப்பதற்கு கால்களை பயன்படுத்திய மனிதன் அதன் கடினத்தால் விலங்குகளை வாகனமாக்கினான் பின்பு சக்கரங்கள் வண்டிகள் என துவங்கி

தரைவழி, ஆகாய வழி, நீர்வழி என போக்குவரத்து சாதனங்கள் உலகின் எப்பகுதிக்கும் மிக விரைவாக பயணிக்க கூடிய போக்குவரத்து வளர்சி பெற உதவியது எனலாம். இது இன்றைய உலகில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது.

அபரிமிதமான வளர்ச்சி

இன்று அறிவியல் பல துறைகளில் தனது அசுர வளர்ச்சியினை காட்டியுள்ளது. வானைமுட்டும் கட்டடங்கள் பெரும் மில்லியன் நகரங்களை உருவாக்கியுள்ளது.

எந்த கடினமான சூழலிலும் வாழக்கூடிய அளவிற்கு அதனை மாற்றி அமைக்கும் மனிதனின் அறிவியல் வியப்பானது.

விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம், வணிகம், கல்வி, விளையாட்டு, கலை, பொழுதுபோக்கு, தகவல்தொடர்பாடல் என்பன அதி உச்ச வளர்ச்சியினை இன்று பெற்றுள்ளன. இவற்றினால் மனித வாழ்க்கை இன்னொரு படி முன்னேறி இருக்கின்றது.

அன்றாட வாழ்வில் அறிவியல்

இன்று அனைத்து மனிதர்களும் தொழில்நுட்பங்களுக்குள் தவிர்க்கபட முடியாதவர்கள். அனைவரது கைகளிலும் தொலைபேசிகள் வந்து விட்டன. தொடர்பாடல் என்பது மிகவும் இலகுவாகி விட்டது.

சமூக வலைத்தளங்கள் உலகமெங்கும் உள்ள மனிதர்களை மிகவும் நெருக்கமடைய செய்து விட்டது. மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டிய வேலைகளை இயந்திரங்கள் மிக இலகுவாக செய்கின்றன.

கல்வியிலும் தொழில் நிலையங்களிலும் கணினி தன் பங்கை மிகவும் சிறப்பாக செய்கிறது. எனவே அன்றாடம் நாம் அறிவியலால் பயன்பெற்று கொண்டுதான் இருக்கிறோம்.

முடிவுரை

இன்று அனைத்து துறைகளிலும் அறிவியல் தனது ஆழ தடத்தை பதித்து விட்டது அறிவியல் இன்றி இன்று எந்த ஒரு வேலைகளையும் ஆற்ற முடியாது எனும் அளவிற்கு இன்றைய மக்களின் வாழ்க்கை முறையானது மாறிவிட்டது.

இந்த வசதிகளும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி ஆக்கபூர்வமான விடயங்களை செய்வது நன்மையே அன்றி இந்த தொழில்நுட்பங்கள் வீண் அழுத்தங்களுக்கும் பிரச்னைகளுக்கும் காரணமாய் அமைவதை நாம் அனுமதிக்க கூடாது.

You May Also Like :
அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள் கட்டுரை
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை