மீனாட்சி சுந்தரனார் வரலாறு

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

20ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் இவரும் ஒருவர் ஆவார். இவர் தமிழில் மட்டுமல்ல சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பிரெஞ்சு, செருமன் போன்ற மொழிகளில் புலமை பெற்றவராய் திகழ்கின்றார்.

பெயர்தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
பிறப்பு1901 ஜனவரி 8
பிறந்த இடம்சிந்தாதிரிப்பேட்டை,
சென்னை.
தந்தைபொன்னுசாமி கிராமணியார்
புனைப்பெயர்தெ.பொ.மீ
விருதுகள்கலைமாமணி, பத்மபூசன்
இறப்புஆகஸ்ட் 27, 1980
(அகவை 79)

பெயர் சூட்டக் காரணம்

இவரின் தந்தைக்கு தமிழ் மீது இருந்த பற்றின் காரணமாகவே அவர் தமிழ் புலவர் மீனாட்சி சுந்தரனாரின் பெயரையே இவருக்கும் சூட்டினார்.

கல்வி

சென்னையில் ஆரம்பக் கல்வியை கற்றார். உயர் தரக் கல்வியை முடித்த இவர் பச்சையப்பா கல்லூரியில் கலையியல் வாலை(B.A) படிப்பை நிறைவு செய்தார்.

1922 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் B.L படிப்பையும் முடித்தார்.

1923 ஆம் ஆண்டு சென்னை உயர் மன்றத்தில் வழக்கறிஞராகத் தன்னை பதிவு செய்து கொண்டார்.

1923 ஆம் ஆண்டு M.A (கலையியல் மேதை) பட்டமும் பெற்றார்.

பொதுப்பணி

பொதுப்பணியில் நாட்டம் கொண்ட மீனாட்சி சுந்தரம் 1924 ஆம் ஆண்டு சென்னை மாநகர உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு பணி செய்தார்.

1925 ஆம்‌ ஆண்டு Aluminium Industrial Workers Union Leader ஆக தெரிவு செய்யப்பட்டு பணியாற்றினார்.

தமிழார்வம்

தமிழில் ஆர்வம் கொண்ட இவர் தமிழில் கீழ்த் திசை மொழிகளுக்கான வாலைப் பட்டம்(B.O.L) மேலைச் பட்டம்(M.O.L) என்பவற்றை அடுத்து அடுத்து பெற்றார்.

கல்வியார்வம்

கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் வரலாறு, பொருளியல் ஆகிய துறைகளில் கலையியல் மேதை (M.A) பட்டம் பெற்றார்.

சிறை வாழ்வு

நாட்டின் விடுதலையில் ஆர்வம் கொண்ட இவர் 1941 ஆம் ஆண்டு மீனாட்சி சுந்தரம் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து மீண்டு வந்தபின்னர் இந்திய பேராயக் கட்சியில் ஈடுபாடு கொண்டு உழைத்தார்.

பேராசிரியர் பணி

1924 ஆம்‌ ஆண்டு இவரின் தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இவரை நியமித்தார்.

1945 ஆம்‌ ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்திந்திய வரலாற்று மாநாட்டின் போது புதிதாக அமைக்கப்பட்ட திராவிட பிரிவின் தலைவராக்கப்பட்டார்.

1958 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இலக்கிய துறையின் தலைமைப் பேராசிரியராகவும் கடமையாற்றினார்.

மூன்று ஆண்டுகளின் பின்னர் அமெரிக்கா சென்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

துணைவேந்தர் பணி

இவருடைய தமிழ்ப் புலமையின் காரணமாக 1966 – 1971 ஆம் ஆண்டு வரை இவர் மதுரை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்டு கடமையாற்றினார்.

பிற பணி பொறுப்புக்கள்

துணைவேந்தர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் 1973 – 1974ஆம் ஆண்டுகளில் திருப்தி, திருவேங்கடம் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆய்வாளாராக பணியாற்றினார்.

பன் மொழிப் புலமை

இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பிரஞ்சு, செருமேனியம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

படைப்புக்கள்

  • வள்ளுவரும் மகளிரும்
  • அன்பு முடி
  • கால்டுவெல் ஒப்பிலக்கணம்
  • தமிழா நினைத்துப்பார்
  • நீங்களும் சுவையுங்கள்
  • வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
  • பிறந்தது எப்படியோ
  • கானல்வரி
  • சமணத்தமிழ் இலக்கிய வரலாறு
  • கல்விச் சிந்தனைகள்
  • தமிழ் மணம்
  • தமிழும் பிற பண்பாடும்
  • வாழும் கலை
  • தமிழ் மொழி வரலாறு
  • மொழியியல் விளையாட்டுகள்
  • பத்துப்பாட்டு ஆய்வு

ஆங்கில நூல்கள்

  • A History of Tamil Language
  • A History of Tamil Literature
  • Philosophy of Tiruvalluvar
  • Advaita in Tamil
  • Tamil – A Bird’s Eye View

சிறப்பு பெயர்கள் மற்றும் கௌரவிப்புகள்

திருவாவடுதுறை ஆதீனத்தால் “பல்கலைச் செல்வர்” என்ற பட்டப்பெயரைப் பெற்றார்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தால் “பன்மொழிப் புலவர்” என்ற பட்டம் பெற்றார்.

சிவபுரி சன்மார்க்க சபையால் “பெருந்தமிழ் மணி” என்ற பட்டம் பெற்றார்.

தமிழ் அரசால் கலைமாணி பட்டம் பெற்றார்.

தமிழக ஒன்றிய அரசால் பத்மபூசன் விருது வழங்கப்பட்டது.

நடமாடும் பல்கலைக்கழகம்” என திரு.வி.க வால் பட்டம் பெற்றார்.

இலக்கிய வித்தகர்” எனவும் அழைக்கப்பட்டார்.

மீனாட்சி சுந்தரனார் அறிமுகம் செய்த புதிய சொற்கள்

  • ஆளுமை (Personality)
  • எதிர் நிலை தலைவன் (Villain)
  • உயர்தானிச் செம்மை (Classical)
  • நனவோடை (Stream of consciousness)
  • இருப்பு நிலை கொள்கை (Existentialism)
  • செய்யுனிலை அறம் (Poetic justice)
  • நாடக கீழறைப் பொருள் (Dramatic irony)

மறைவு

பல ஆற்றல் கொண்ட இவர் 27.08.1980 ஆம் ஆண்டு தமது 79ம் அகவையில் பூதவுடலை நீத்து புகழுடம்பு எய்தினார்.

தமிழ் மீது பற்றுக் கொண்ட பலர் தமிழை உயர் நிலைக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு தமிழை அரியாசனம் ஏற்றிய மாமனிதர்களுள் மீனாட்சி சுந்தரனாரும் ஒருவர் ஆவார்.

You May Also Like :
தமிழ் இலக்கிய வரலாறு
உ.வே.சாமிநாதய்யர் வரலாறு