இயற்கை அனர்த்தம் பற்றிய கட்டுரை

iyarkai anartham katturai in tamil

இந்த பதிவில் “இயற்கை அனர்த்தம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இயற்கை அனர்த்தங்களிற்கு எதிரான முன்னாயித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் உயிர் மற்றும் பொருட்சேதங்களைத் தவிர்க்கலாம்.

இயற்கை அனர்த்தம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்கை அனர்த்தம் அறிமுகம்
  • இயற்கை அனர்த்தத்திற்கான காரணங்கள்
  • பாதகமான விளைவுகள்
  • பாதுகாப்பு முறைகள்
  • முடிவுரை

முன்னுரை

உலகை உலுக்கும் நிகழ்வுகளில் இயற்கை அனர்த்தங்களிற்கு மிகப்பெரிய இடமுண்டு. இயற்கை அனர்த்தங்கள் கடும் சீற்றத்துடன் உருவாகி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட செய்திகளை நாளாந்தம் எமது அன்றாட வாழ்வில் கேள்விப்படுகின்றோம்.

இயற்கை அனர்த்தங்களானவை தடுக்க இயலாதவையாயினும், முறையான பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கும் போது அவற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். அவ்வாறான பாதுகாப்பு முறைகளைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். இக்கட்டுரையில் இயற்கை அனர்த்தங்கள் பற்றி நோக்கலாம்.

இயற்கை அனர்த்தம் அறிமுகம்

இயற்கை அனர்த்தங்களிற்கு உதாரணமாக காட்டுத் தீ, மண்சரிவு, சுனாமி, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, மின்னல், எரிமலை வெடிப்பு, மற்றும் நிலநடுக்கம் என கூறிக் கொண்டே போகலாம்.

பூமியின் நிலப்பரப்பு இடவமைப்பிற்கு ஏற்றவாறு இயற்கை அனர்த்தங்கள் உருவாகின்றன. கடலை அண்டிய இடங்களில் சுனாமி, கடலரிப்பு போன்றன உருவாகும்.

மலைப்பாங்கான இடங்களில் மண்சரிவு இடம் பெறுகின்றது. அடைமழைக்காலங்களில் மின்னல், வெள்ளப்பெருக்கு போன்றன உருவாகி பல உயிர்களைக் காவு கொள்கின்றன.

இயற்கை அனர்த்தங்களிற்கான காரணங்கள்

இயற்கை அனர்த்தங்களானவை பல்வேறு காரணங்களால் உருவாகின்றன. காட்டுத்தீயானது எரியக்கூடிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடுகளிலும் பயிர் நிலங்களிற்கு அருகிலுள்ள சிறுகாடுகளிலும் பரவலாக ஏற்படுகின்றது.

மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தானாகவே தீப்பற்றுவதோடு, சில வேளைகளில் மின்னல் மற்றும் எரிமலை வெடிப்பினாலும் தீப்பற்றுகின்றன. சேனை பயிற்செய்கை போன்ற விவசாய நடவடிக்கைகளிற்காக தீவைப்பதாலும் காட்டுத்தீ உருவாகின்றது.

சுனாமியானது கடல் படுக்கைகளில் சடுதியாக ஏற்படும் அதிர்வினாலும், கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தினாலும் அதிகமாக ஏற்படுகின்றன.

பூமிக்கடியில் ஏற்படும் அழுத்தத்தினால் மேற்பரப்பில் விரிசல் ஏற்பட்டு அதீத வெப்பமுடைய நீரும் பாறைத்துகள்களும் வெளித்தள்ளப்படுவதால் எரிமலை வெடிப்பு ஏற்படுகின்றது.

இவ்வாறு இயற்கையில் ஏற்படும் பல்வேறு மாறுபாட்டினால் இயற்கை அனர்த்தங்கள் உருவாகின்றன.

பாதகமான விளைவுகள்

இயற்கை அனர்த்தங்களினால் பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. 2006ம் ஆண்டு டிசப்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பல லட்சக்கணக்கான உயிர்கள் அழிந்தது நாம் அறிந்ததே.

கடலில் இருந்து உருவாகும் பேரலைகள் உயிர்சேதத்தை மட்டுமின்றி பில்லியன் கணக்கிலான பொருட்சேதத்தை ஏற்படுத்தவல்லன.

கடந்த ஆண்டு அவுஸ்ரேலியக் காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பல்லாயிரக் கணக்கான வனவிலங்குகளும் பல அரியவகை தாவரங்களும் அழிந்தன. உலகின் மிகப்பெரிய காடான அமேசான் காடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்றவற்றாலும் மக்கள் பல்வேறு இழப்புக்களை சந்திக்கின்றனர்.

பாதுகாப்பு முறைகள்

இயற்கை அனர்த்தங்கள் பெரும்பாலும் எதிர்வுகூற முடியாதவையாக் காணப்படுவதனால் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது கடினமாகக் காணப்படுகின்றது.

சுனாமி மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றை முன்பே அறிய முடிவதனால் அபாய வலயத்திற்குள் வசிக்கும் மக்கள் வேறு இடங்களிற்கு இடம் மாற்றப்படுகின்றனர். ஆனால் பொருட்சேதங்கள் தவிர்க்க முடியாதவை ஆகின்றன.

மழைகாலத்தில் இடி மின்னலுடன் இணைந்து மின்னலும் ஏற்படுகின்றது. உயரமான கட்டங்களில் இடிதாங்கிகளைப் பொருத்துவதோடு மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மின்னல் ஏற்படும் போது வெளியான இடங்கள் மற்றும் வயல் வெளிகளில் நிற்பதனை தவிர்க்க வேண்டும். காடுகளை அண்டிய இடங்களில் தீ மூட்டுவதனைத் தவிர்ப்பதோடு, மண்சரிவு ஏற்படும் அபாயவலயங்களிலிருந்து உடனடியாக விலக வேண்டும்.

முடிவுரை

இயற்கை அனர்த்தங்களிற்கு எதிரான முன்னாயித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் உயிர் மற்றும் பொருட்சேதங்களைத் தவிர்க்கலாம். அவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வுகளை பேணி அனைவரும் பாதுகாப்பான ஒரு உலகை கட்டியெழுப்புவோமாக.

You May Also Like:
இயற்கை பேரிடர் கட்டுரை
இயற்கை பாதுகாப்பு கட்டுரை