கீழடி அகழாய்வு கட்டுரை

keeladi agalaivu katturai in tamil

கீழடிக் கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் அங்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆய்வானது பல ஆண்டு காலமாக, பல கட்டங்களாகத் தொடர்ந்து வருகின்றது.

கீழடி அகழாய்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தொல்லியல்
  • கீழடி அகழ்வாரகீழடி நாகரீகத்தின் காலம்
  • தமிழகத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்
  • கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை
  • முடிவுரை

முன்னுரை

சிந்து கங்கை நதிக்கரை நாகரீகத்திற்குப் பின்பு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள் தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாக சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்திய வகைக்கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.

வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடிக் கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுவே மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழ்வாய்வாகும்.

தொல்லியல்

தொல்லியல் என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயற்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும்.

கீழடி நாகரீகத்தின் காலம்

கீழடியில் கிடைத்த பொருட்கள் ஆக்சல ரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (Accelerated mass spectrometry) ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு அனுப்பப்பட்டன அதில் கிடைத்த முடிவுகளின்படி அந்தப் பொருட்கள் கி.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு 6ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் 353 செ.மீ ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு 580வது ஆண்டையும், 200 செ.மீ ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால் கீழடியின் காலகட்டம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 3ஆம் நூற்றாண்டு வரையானது எனத் தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்

தமிழகத்தின் தொன்மையான காலமாக நாம் கருதிக் கொண்ட சங்க காலமானது கிறிஸ்து பிறப்பிற்கு பின்னர் 3ஆம் நூற்றாண்டு வரையான காலம்தான் எனக் கருதப்பட்டது.

ஆனால் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக்கள் சங்க காலத்தின் வயதை மேலும் 3 நூற்றாண்டுகளுக்கு அதாவது, கிறிஸ்துபிறப்பிற்கு முந்திய 6ஆம் நூற்றாண்டைச் சேர்தவை என அறிவிக்கப்பட்டது.

அதன் மூலம் சங்க காலத்தின் கால வரையறை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை கீழடி ஆய்வுகள் ஏற்படுத்தியுள்ளன.

கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை

உலகில் தொன்மையான நாகரீகம் என ஐரோப்பிய உலகம் கருதும் கிரேக்க கழகத்துடன் அதாவது ரோம் சமூகத்துடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு கொண்டதற்கான சாத்தியக் கூறுகளை வெளியிட்டுள்ளனர்.

கீழடியில் பலவகையான மாணிக்க கற்கள், எழுத்தாணிகள், இரும்புகள், செப்பு ஆயுதங்கள், அம்புகள், அரியவகையான அணிகலன்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பிராமிய எழுத்துக்களுடைய மண்பாண்ட ஓடுகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் கூரை அமைப்புடைய கட்டடங்கள், பானை வனையும் தொழிற்கூடம், வேளாண்மைச் சமூகம், நெசவுத் தொழிலின் அடையாளம், தங்க ஆபரணங்களை அணியும் பெண்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றன பற்றியும் கண்டறியப்பட்டுள்ளது.

முடிவுரை

கீழடி அகழ்வாய்வில் கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாத பொருட்கள் தமிழர்களுக்குப் பொக்கிஷம் மட்டுமல்ல அவை தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பவையும் கூட என்றால் அதுமிகையல்ல.

You May Also Like:

தமிழர்களின் பண்பாடு கட்டுரை

மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை கட்டுரை