ஊடகம் பற்றிய கட்டுரை

ஊடகம் கட்டுரை

இந்த பதிவில் “ஊடகம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

மனித சமூகத்தின் எல்லா சமூக மாற்றங்களுக்குப் பின்னாலும் ஊடகங்களின் பெரும் பங்களிப்பு இருக்கிறது.

ஊடகம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஊடகம் என்பது
  3. ஊடக தர்மம்
  4. ஊடகத்தின் நன்மைகள்
  5. ஊடகத்தின் தீமைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்று உலக அளவில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகவும் முதன்மையானதாகவும் உள்ளது என்றால் அது மிகையல்ல. இன்று உலகளாவிய ஊடகங்கள் தான் ஆதிக்க சக்தி எது என தீர்மானிக்கிறது என்றால் அது மிகையல்ல.

மனித சமூகத்தின் எல்லா சமூக மாற்றங்களுக்குப் பின்னாலும் ஊடகங்களின் பெரும் பங்களிப்பு இருக்கிறது.

இன்று ஊடகமானது மனிதனுக்கு பலவழிகளிலும் பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது.

ஊடகங்கள் மனிதனுக்குப் பல நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கின்றன. அதேவேளை எதிர்மறையான தாக்கத்தை செலுத்துவதிலும் தவறவில்லை. ஊடகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஊடகம் என்பது

மனிதர்களிடையில் தகவல்களை, கருத்துக்களை கடத்துவது ஊடகம் எனப்படும். ஊடகங்கள் மிகவும் விரிவானவை, இது எழுதுவதிலிருந்து இன்றைய தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் வரை காணப்படுகின்றன.

கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வது ஊடகத்தினுடைய முதன்மையான பணியாகும். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, தொலைபேசி போன்றன ஊடகத்திற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஊடக தர்மம்

ஊடக தர்மமானது அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பண்பாகும். உண்மைகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்து அது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும்.

பக்கச்சார்பின்றி தகவல்களை வெளிப்படுத்தவும், எப்போதும் மக்களுக்கு உண்மை தகவல்களை வழங்குவதாகவும் நடுநிலையாகவும் காணப்படவேண்டும்.

ஊடகத்தின் நன்மைகள்

உலகில் எந்த ஒரு மூலையில் நடைபெற்ற நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள ஊடகங்கள் பயன்படுகின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தான் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன.

வெகுஜன ஊடகங்கள் உலகமயமாக்கல் செயல்முறையை அதிகரித்துள்ளன. குறிப்பாக பிற நாடுகளை கலாச்சார ரீதியில் நெருக்கமாக கொண்டு வருவதற்கு உதவுகின்றது.

சேவைகள் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக ஊடகங்கள் உள்ளன. மனிதனுக்கு ஓர் சிறந்த பொழுதுபோக்காகவும் ஊடகங்கள் திகழ்கின்றன.

ஊடகத்தின் தீமைகள்

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் பல ஊடகங்கள் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஊடகங்கள் நேரடியாக தொழில்நுட்பத்தை சார்ந்து இருப்பதனால் தொழில்நுட்பங்கள் பாதிப்படைந்தால் ஊடகமும் பாதிப்படையும். தொலைபேசி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மக்களை அவற்றின்மீது அடிமையாகிவிடுகின்றன.

ஊடகங்களால் நேருக்கு நேர் மனித தொடர்பு குறைந்து வருகின்றது. இது சமூகத்தில் இளைய உறுப்பினர்களிடையேதான் அதிகம் காணப்படுகின்றது.

சில சமயங்களில் ஊடகங்களினால் கடத்தப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையாக உள்ளமையால் அது சமூகத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றன.

முடிவுரை

ஊடகங்கள் ஆக்கசக்திக்குப் பயன்பட வேண்டும். இன்றைய நவீன உலகில் ஊடகமும் மக்கள் வாழ்வியலும் இரண்டறக் கலந்தது உள்ளது. ஊடகங்கள் தர்மத்தின் வழிபாடாகவே எப்போதும் செயற்பட வேண்டும்.

கைக்குள் உலகை அடக்கும் ஊடகங்கள் எப்போதும் சமூகப் பொறுப்புடன் செயற்படுவதுடன் நாட்டிற்கு திறன்பட சேவை செய்ய வேண்டும்.

You May Also Like :
இளம் வயது திருமணம் கட்டுரை
அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள்