இந்த பதிவில் “பெண் இல்லாத துறை உண்டோ கட்டுரை” பதிவை காணலாம்.
இன்று பலருக்கும் முன்னுதாரணம் சொல்ல கூடிய சக்தி வாய்ந்த தலைவர்களாக பெண்கள் வளர்ந்து வருகின்றனர்.
பெண் இல்லாத துறை உண்டோ கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பெண் எனும் ஆளுமை
- முற்காலங்களில் அடக்குமுறை
- சகலதுறைகளிலும் பெண்களின் ஆதிக்கம்
- முன்னேற்றதுக்கான வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் தோன்ற காரணமாக இருப்பது பெண் என்ற சக்தி தான் பண்டை காலங்களில் இருந்தே ஒரு சமூகம் வெற்றிகரமாக அமைய காரணமாக ஒரு பெண்ணின் பங்களிப்பானது இருந்து வருகின்றது.
இன்றைய சூழலில் உலகின் அனைத்து துறைகளிலும் பெண்களுடைய பங்களிப்பானது மகத்தான ஒன்றாக இருக்கிறது இவை ஒரு பாரிய சமூக மாற்றத்தினை உருவாக்கி வருவதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
பெண் எனும் ஆளுமை
உடல் அளவில் ஆண் என்பவன் பலமாக சிருஸ்டிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மனதளவில் பெண் என்பவளே தைரியமானவள். எந்தவிதமான பிரச்சனையாக இருந்தாலும் அவற்றை சமாளித்து வாழ்வில் வெற்றி பெற பெண் சளைக்காமல் போராடுகின்றாள்.
ஒரு தாயாக, ஒரு சகோதரியாக, ஒரு வாழ்க்கை துணைவியாக ஒரு குடும்பத்தை சிறந்த ஆளுமையுடன் வழிநாடாத்தி செல்லும் ஆற்றல் பெண்களிடத்தில் உண்டு என்பது பல ஆய்வுகள் ஆராச்சிகள் மற்றும் கண்களாலும் அவதானிக்க முடிகின்றது.
முற்காலங்களில் அடக்குமுறை
முற்காலங்களில் மனிதன் பகுத்தறிவு கொள்கைகளை பின்பற்றாத காலங்களில் பெண்ணடிமைத்தனம் என்ற ஒரு தவறான பார்வையில் இந்த சமூகம் இருந்தது.
ஆண்களை விட பெண்கள் குறைந்தவர்கள் என்ற மனநிலையானது ஆண்களிடம் காணப்பட்டது அது பெண்களிடமும் விதைக்கப்பட்டது.
இதனால் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டது. மற்றும் உரிமைகளும் மறுக்கப்பட்டது. இதனால் அந்த சமூகமானது முன்னேற்றமடையாமல் பின்தங்கியதாகவே இருந்தது.
இதனை உடைக்கும் வகையில் தமிழில் பாரதியார் போன்ற புரட்சியாளர்கள் தோன்றி பெண்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கினர்.
சகலதுறைகளிலும் பெண்களின் ஆதிக்கம்
இன்றைய காலத்தில் பிரதான துறைகளான கல்வி, மருத்துவம், பொறியியல், அரசியல், சட்டம், வியாபாரம் போன்ற துறைகளில் பெண்கள் சிறந்த வல்லுனர்களாக விளங்குகின்றனர்.
“ஏட்டையும் பெண்கள் தொடுவது பாவம் என்ற விந்தை மனிதர் தலைகுனிந்தார்” என்ற பாரதியின் எழுச்சி பாடலை போல இன்று பெண்கள் கல்வியில் சிறந்து மேன்மையடையவர்களாகவும் விளங்குகின்றனர். இதனை நாம் இன்று அனைத்து இடங்களிலும் அவதானிக்க முடிகின்றது.
முன்னேற்றத்துக்கான வழிமுறை
உலகம் பல வழிகளில் முன்னேறி வந்தாலும் கூட நமது சமுதாயம் இன்றும் சில தவறான கொள்கைகளினால் இன்றும் பெண்களை அவர்களது கனவுகளை நனவாக்க விடாமல் தடுத்து கொண்டுதான் இருக்கின்றது.
இந்தநிலை தான் மற்றைய முன்னேறிய சமுதாயங்களை போல அல்லாது எங்களை இன்னும் பின்தங்கியவர்களாக வைத்திருக்கின்றது. இந்த நிலை மாறி நாம் வளர நமது கொள்கைகளை நாம் மாற்றி கொள்ள வேண்டும்.
முடிவுரை
இன்று பலருக்கும் முன்னுதாரணம் சொல்ல கூடிய சக்தி வாய்ந்த தலைவர்களாக பெண்கள் வளர்ந்து வருகின்றனர். ஆணுக்கு பெண் சழைத்தவள் இல்லை என இன்று நீருபித்து வருகின்றனர் இந்த மாற்றம் ஆரோக்கியமானதாகும்.
அதற்கிணங்க பெண்கள் தங்கள் உரிமைகளை சரியாக பயன்படுத்தி தாமும் முன்செல்வதோடு ஒரு சமூகமாக முன்னேற இது சிறந்த தருணமாக இது அமையும்.
You May Also Like: