இந்த பதிவில் ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சி மந்திரமாக விளங்கும் “அம்பேத்கர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
இவர் மிகச்சிறந்த கல்வியாளர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர், மக்கள் பிரதிநிதி என பன்முக தன்மை கொண்ட மாமேதை ஆவார்.
அம்பேத்கர் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப வாழ்க்கை
- கல்வி
- தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பங்களிப்பு
- இந்திய அரசியலமைப்பு
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவின் அரசியலமைப்பை எழுதிய பெருமைக்குரியவர் அம்பேத்கர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மன்னராட்சியை அழித்து மக்கள் ஆட்சியை கொண்டுவர வேண்டும் எனப் பலரும் விரும்பினர்.
இதற்கு முறையான அரசியல் சாசனம் அரசியல் அமைப்பாகும். இந்திய மண்ணில் அரசியல் சாசனத்தை எழுத நினைத்தவர்களுக்கு முதலில் நினைவில் வந்த பெயர் அம்பேத்கர்.
இவர் சட்டம் மட்டுமன்றி பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் உலக வரலாறு என அனைத்தையும் அறிந்த மேதை ஆவார். இக்கட்டுரையில் டாக்டர் அம்பேத்கர் பற்றி காண்போம்.
ஆரம்ப வாழ்க்கை
அம்பேத்கர் அவர்கள் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம் திகதி இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள “மாவ்” மாவட்டத்தில் ராம்கி மாலோஜி சக்பால், பீமாபாய் தம்பதியினருக்கு 14-வது குழந்தையாகப் பிறந்தார்.
இவரது குடும்பம் ஓர் மராத்திய வர்க்கத்தை தழுவியதாகவும் ‘மகர’ எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்ததுமகாகக் காணப்பட்டது.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பீமாராவ் ராம்ஜி ஆகும். தந்தை பணி ஓய்வு பெற்றதும் குடும்பத்துடன் மத்திய இந்தியாவிலிருந்து கொங்கணத்திலிதபோலி என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர்.
கல்வி
அம்பேத்கர் தனது ஐந்தாவது வயதில் ஆரம்பக் கல்வியை தொடங்கினார். ஹோவார்ட் ஆங்கிலப் பாடநூலைக் கற்றார். மேலும் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பு பற்றிய நூல்களையும் படித்தார்.
இதனால் மொழிபெயர்ப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். 1907 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
குஜராத் மாநில மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் தாழ்த்தப்பட்ட சிறந்த மாணவர்களுக்கு படிக்க உதவுவதை அறிந்து அந்த உதவியை பெற்று அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்குச் சென்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பங்களிப்பு
1907 ஆம் ஆண்டு ‘பகிஷ்கிரித் பாரத்’ என்ற இதழைத் தொடங்கி அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக எழுதி வந்தார். அதே ஆண்டில் தீண்டாமைக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.
தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் கடுமையாக வலியுறுத்தினார்.
1936இல் “யார் இந்த சூத்திரர்கள்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை குறித்து கடுமையாக எழுதியிருந்தார்.
இந்திய அரசியலமைப்பு
1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியா சுதந்திரம் பெற்றுக்கொண்டது. அதன்பின்னர் அரசியலமைப்பு ஒன்று இந்தியாவில் முக்கிய தேவைப்பாடாக இருந்தது.
அரசியலமைப்பை எழுதும் பொறுப்பு அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அதில் சட்ட அமைச்சராகவும், அரசியல் அமைப்பின் வரைவுக்குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
1949 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி அரசியலமைப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதன் பின்னர் 1950 ஜனவரி 26 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இவரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முடிவுரை
1940இல் அம்பேத்கர் அவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் உடல் நலம் மோசமாகி 1956 டிசம்பர் 6ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் தூக்கத்தில் இவரது உயிர் பிரிந்தது.
மரணத்தின் பின்னர் இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது 1990ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
You May Also Like : |
---|
இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாறு |
தீண்டாமை ஒழிப்பு கட்டுரை |