உலக புத்தக தினம்

சர்வதேச புத்தக தினம்

உலக புத்தக தினம் கொண்டாடப்படும் நாள் எது

உலக புத்தக தினம்ஏப்ரல் 23
World Book DayApril 23

மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எதுவென்று வினவப்பட்ட போது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப் பதிலளித்தார் அல்பட்டைம்சீன்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றார் நெல்சன் மண்டேலா.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது சற்றும் தயக்கமில்லாமல் புத்தகங்கள் வேண்டும் என்றார் லெனின்.

இவ்வாறு உலகின் தலைசிறந்தவர்கள் பலராலும் புத்தகங்கள் நேசிக்கப்பட்டுள்ளன. இவர்கள் புத்தகத்தின் மகத்துவத்தினை நன்குணர்ந்துள்ளவர்களாவர்.

உலக புத்தக தினம் என்பது புத்தகங்களின் அற்புதமான சக்தியையும் வாசிப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும் நாளாகும்.

உலக புத்தக தினம்

புத்தக தினம் உருவான வரலாறு

உலக புத்தக தினம் ஏப்ரல் 23, 1995 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) உருவாக்கப்பட்டது.

எனினும் ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் புத்தக தினத்தை வெவ்வேறு நாளில் கொண்டாடுகின்றன.

இருப்பினும், சர்வதேச புத்தக தினம் 1995 இல் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்றே நடத்தப்படுகிறது.

உலக புத்தக தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

உலக புத்தக தினம் வாசிப்பு, நாவல்கள் மற்றும் கதைகள் எழுதுதல், மொழி பெயர்த்தல், வெளியிடுதல் மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் கௌரவிக்கும் விதமாக உலக புத்தக தினம் கொண்டாடப்படுகின்றது. மேலும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நாளாகவும் உள்ளது.

உலக புத்தக தினத்தின் முக்கியத்துவம்

சமகால சவால்களை எதிர்கொள்வதற்கும், அரசியல் மற்றும் பொருளாதார உண்மைகளைப் புரிந்துகொள்வதற்கும், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கும் புத்தகங்கள் ஒரு சக்தியாக உள்ளன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புத்தகங்கள் நம்மைப் பயிற்றுவித்து, உத்வேகம் அளித்து வருகின்றன. எனவே உலக புத்தக தினம் என்பது மனிதகுலத்தின் கல்வி அறிவினை விருத்தி செய்து கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் முக்கிய நாளாகும்.

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் நேசிக்கும் பழக்கம் வரும் என்பார்கள். சிந்தனையின் தூண்டுகோல் புத்தகம். ஒரு நல்ல புத்தகத்தை திறந்து கொண்டால் நரகத்தின் வாசல் மூடப்படும். எனவே வாசிப்பை நாளும் நேசிப்போம் நல்ல நூல்கள் அனைத்தையுமே சுவாசிப்போம்.

You May Also Like :
உலக முத்த தினம்
உலக மன்னிப்பு தினம்