அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு கட்டுரை

vasippu palakam katturai

அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு கட்டுரை

இந்த பதிவில் “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

உலகத்தில் உள்ள அனைத்து விடயங்களை விடவும் இரசனை மிகுந்தது இந்த புத்தக வாசிப்பாகும்.

அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாசிப்பின் மகத்துவம்
  • தலைவர்களும் வாசிப்பும்
  • வாழ்தலுக்கான வாசிப்பு
  • இன்றைய சமூகம்
  • முடிவுரை

முன்னுரை

“வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்குகின்றது” என்ற வாசகத்தை நாம் பல இடங்களில் காணலாம். இது என்னவெனில் மனிதன் என்கின்ற விலங்கை மகத்தான சிந்தனை செய்ய கூடிய உயிரினமாக மாற்ற கூடிய விலைமதிப்பற்ற பொக்கிசங்களாக இந்த புத்தக வாசிப்பானது காணப்படுகின்றது.

மனிதனை மகத்தானவனாக இந்த வாசிப்பு பழக்கம் மாற்றுகின்றது. அதனால் தான் ஒரு அறிவார்ந்த சமூகமானது உருவாக வாசிப்பு என்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.

வாசிப்பின் மகத்துவம்

ஒரு ஊரில் ஒரு நூலகம் திறக்கப்படும் போதிலே பல சிறைச்சாலைகள் மூடப்படுவதாக ஒரு பொன்மொழி கூறப்படுகின்றது.

எந்த மனிதன் நல்ல புத்தகங்களை வாசிக்கின்றானோ அவன் நல்வழியில் சிந்தித்து முன்னேறி செல்வான் தவறான வழிகளில் அவன் செல்ல மாட்டான் என்பது திண்ணம்.

உலகத்தில் உள்ள அனைத்து விடயங்களை விடவும் இரசனை மிகுந்தது இந்த புத்தக வாசிப்பாகும்.

இதனை ஒரு பழமொழி கூறுகையில் நல்ல புத்தகத்த இரவல் கொடுப்பவன் முட்டாள் அதனை திரும்ப கொடுப்பவன் அதை விட முட்டாள் என்கிறது.

எனவே வாசிப்பும் புத்தகங்களும் ஒரு சமூகத்தின் ஆக சிறந்த செல்வம் எனலாம்.

தலைவர்களும் வாசிப்பும்

உலகத்தின் ஆக சிறந்த தலைவர்கள் சிறந்த வாசிப்பு பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

உதாரணமாக ஆபிரகாம் லிங்கன் கூறுகையில் நான் இன்னமும் வாசிக்காத ஒரு நல்ல புத்தகத்தை எனக்கு கொடுப்பவனே எனது சிறந்த நண்பன் என்கிறார்.

அவரை போலவே மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, அம்பேத்கர், பகத்சிங் என பல பேர்களை நாம் இங்கே குறிப்பிட முடியும். இவர்கள் தமது வாழ்நாளில் பல சாதனைகளை செய்ய இவர்களது ஆழ்ந்த வாசிப்பு இவர்களுக்கு உறுதுணையாக இருந்தது எனலாம்.

வாழ்தலுக்கான வாசிப்பு

எமது மனித வாழ்வின் உயர்ந்த பலனாக உயர்ந்த அனுபவமும் அறிவினையும் நாம் பெற்று கொள்ள கூடியவர்களாக இருக்க வேண்டும்.

புத்தகங்கள் வாயிலாக வரலாறுகள், சரித்திரங்கள், இலக்கியங்கள், அறிவியல், உலக நடைமுறைகள் என பல விடயங்களை எம்மால் கற்றுக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு சிறந்த புத்தகங்களும் எமது வாழ்க்கைகக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை தந்து எமக்கு வழிகாட்ட கூடியவனவாக இருப்பதனால் எமது அர்த்தம் உள்ள வாழ்வுக்கு வாசிப்பு மிகவும் அவசியமானதாகும்.

இன்றைய சமூகம்

பெரு நன்மை தர கூடிய வாசிப்பு பழக்கம் இன்றைய சமூக குழந்தைகளிடம் எவ்வாறு இருக்கின்றது என்று பாரத்தால் நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி நிற்கின்றது.

இன்று வளர்ச்சி கண்டுள்ள இணையம் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியினால் மக்கள் கேளிக்கை விடயங்களில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இந்த மனநிலையானது குழந்தைகளிடத்தில் வாசிப்பு பழக்கத்தினை வெகுவாக குறைத்து விட்டது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

முடிவுரை

இந்த சமூகத்தில் வாசிப்பு பழக்கமானது அதிகமாக காணப்படுமாக இருந்தால் பல குற்ற செயல்கள் தடுக்கப்படும் தவறான வழிகளில் குழந்தைகள் செல்வது தடுக்கப்படும்.

சமூக பொறுப்புள்ள சிறந்த சிந்தனையாளர்கள் இந்த சமூகத்தில் தோன்ற வாசிப்பு பழக்கம் வாய்ப்பாக அமையும்.

பல நன்மைகளை தரக்கூடிய வாசிப்பு பழக்கத்தை நாம் எமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இது நாம் அவர்களுக்கு தர கூடிய ஒரு மிக சிறந்த விடயமாக அமையும்.

You May Also Like :
நூலகத்தின் பயன்கள் கட்டுரை
புத்தகம் பற்றிய கட்டுரை