உடற்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை

Udarpayirchi Katturai In Tamil

இந்த பதிவில் ஆரோக்கியத்திற்கு அவசியமான “உடற்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

உடற்பயிற்சி செய்தலின் தேவையை உணர்ந்து உடலையும்⸴ மனதையும் வலிமையாக வைத்திருக்க உதவுவது உடற்பயிற்சியாகும்.

உடற்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உடற்பயிற்சியின் தேவை
  3. சீரான பயிற்சி
  4. உடற்பயிற்சி தரும் பலன்கள்
  5. தமிழரும் உடற்பயிற்சியும்
  6. முடிவுரை

முன்னுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். அத்தகைய நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவுடன் அன்றாட உடற்பயிற்சியும் அவசியம் ஆகின்றது.

உடற்பயிற்சியானது நமக்கு நோயற்ற வாழ்வை மட்டுமன்றி அழகான உடல் அமைப்பையும் மன அமைதியையும் அளிக்கின்றது.

சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சியை மேற்கொண்டு வாழப் பழக வேண்டும். உடற்பயிற்சி⸴ அதன் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உடற்பயிற்சியின் தேவை

நாம் உடற்பயிற்சி செய்தலின் தேவையை அறிதல் அவசியமாகின்றது. உடலையும்⸴ மனதையும் வலிமையாக வைத்திருக்க உதவுவது உடற்பயிற்சியாகும்.

குழந்தைகள் உடற்பயிற்சி செய்வதால் உடல் சீராக வளர உதவி செய்கின்றது. உற்சாகமும்⸴ சுறுசுறுப்பும் உடற்பயிற்சியால் ஏற்படும்.

ரத்த ஓட்டம் சீராக இயங்க⸴ உணவு செரித்தல் போன்ற உடலின் இயக்கங்களையும் செவ்வனே செய்ய உடற்பயிற்சி தேவை.

சீரான பயிற்சி

எந்த பயிற்சியையும் இளமைப்பருவத்தில் கற்பது நல்லது. உடற்பயிற்சியும் அவ்வாறே. தினமும் காலையிலும்⸴ மாலையிலும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

பொதுவாக ஓடுதல்⸴ நடத்தல்⸴ எடை தூக்குதல்⸴ குனிந்து நிமிர்தல் போன்ற உடற்பயிற்சிகள் உள்ளன.

கடின வகை உடற்பயிற்சிகளை முறையான உடற்பயிற்சியாளர்களிடம் கேட்டு அறிந்து செய்வது நன்மை தரும்.

உடற்பயிற்சி தரும் பலன்கள்

உடற்பயிற்சி பலவிதங்களில் நம்மை காக்கின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும்⸴ அழகான உடல் அமைப்பை பெற்றுத்தரவும் உடற்பயிற்சி உதவுகின்றது.

மன அமைதிக்கு உடற்பயிற்சி உதவுகின்றது. உடல் எடையை குறைக்க உதவும். உயர் இரத்த அழுத்தத்திற்கும்⸴ இறப்பு வீதத்திற்கும் நேரடியான தொடர்பு உள்ளது. உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைத்து இறப்பு வீதத்தை குறைக்கின்றது.

இளமையை பெருக்குவதோடு நோய் தாக்கங்களை அண்ட விடாமலும் தடுக்கின்றது. நீரிழிவின் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றது. இதயத்தின் தசைகளை வலுப்படத்துவதற்கும்⸴ நரம்பு மற்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகின்றது.

தினமும் உடற்பயிற்சி செய்வோர் தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டே செல்கின்றனர். எலும்புகளை வலுப்படுத்த உடற்பயிற்சி உதவுகின்றது. உடலில் சேரும் கழிவுப் பொதருட்களை எளிதாக வெளியேற்ற உதவும். மன நிலையை மேம்படுத்தும்.

தமிழரும் உடற்பயிற்சியும்

தமிழர்கள் தங்கள் உடல்களை கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர். தங்களது உடலை பலப்படுத்துவதற்கும் உடல் எடையை குறைப்பதற்கும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர்.

தங்களது வாழ்நாளில் ஒன்றிய உடற்பயிற்சியைத் திருவிழாக்களின் போது உடற்பயிற்சிகளை நடாத்தி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உதாரணமாக கரலாக்கட்டை சுத்துவது⸴ மல்யுத்தப் போட்டி⸴ தண்டால் எடுப்பது முதலானவற்றைக் கூறலாம்.

இன்றும் சில கிராமங்களில் இளவட்டக்கல் தூக்கும் வழக்கம் மற்றும் வழுக்கு மரம் ஏறுவது போன்ற போட்டிகள் நடைபெறுவதைக் காணலாம்.

முடிவுரை

உடற்பயிற்சி மேற்கொள்வதால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. எனவே இன்றே உடற்பயிற்சி செய்யத் தொடங்குவோம். இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்ததாகும். உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோமாக.

You May Also Like:
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை
சுத்தம் சுகம் தரும் கட்டுரை