அன்றாட வாழ்வில் இயற்பியலின் பங்கு கட்டுரை

andrada valvil iyarpiyalin pangu katturai in tamil

இயற்பியல் என்பது அறிவியலின் ஒரு பகுதியாக காணப்படுவதனால், நாம் வாழும் உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்வதற்கு இந்த இயற்பியலும் வழி வகுகப்பதாகவே காணப்படுகின்றது. எமது அன்றாட வாழ்வில் இயற்பியலின் பங்கு மகத்தானதாகவே காணப்படுகின்றது.

அன்றாட வாழ்வில் இயற்பியலின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்பியல் என்றால் என்ன
  • இயற்பியலின் பிரிவுகள்
  • இயற்பியலின் பங்கு
  • நவீன காலங்களில் இயற்பியலின் வளர்ச்சி
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் இந்த உலகமானது ஒவ்வொரு நாளும் பல புதிய புதிய மாற்றங்களுக்கு உட்பட்டு ஏதோ ஒரு வகையில் மாற்றம் அடைந்து கொண்டே செல்வதனை காணலாம்.

அதாவது பல்வேறு புதிய விடயங்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சியடைந்து செல்கின்றது. இயற்பியல் என்பதும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து எம்முடைய அன்றாட வாழ்வில் பங்காற்றுவதாக மாறி உள்ளது.

அதன் அடிப்படையில் இயற்பியல் என்றால் என்ன, அன்றாட வாழ்வில் அதன் பங்கு யாது என்பவற்றை பின்வருமாறு இக்கட்டுரையில் நோக்கலாம்.

இயற்பியல் என்றால் என்ன

இயற்பியல் என்பது மிகவும் அடிப்படையான ஒரு அறிவியல் துறைகளில் ஒன்றாகும். அதாவது நாம் வாழக்கூடிய இந்த பிரபஞ்சம் எவ்வாறு தொழிப்படுகின்றது என்பதை அறிந்து கொள்வதே இந்த இயற்பியலின் முக்கிய குறிக்கோளாகும்.

இயற்பியல் என்பது பொருட்களின் இயற்கை அறிவியலாக காணப்படுவதோடு, பொருட்களின் ஆய்வு, அதன் அடிப்படை கூறுகள், ஆற்றல் சக்தி, இயக்கம் மற்றும் நடத்தை போன்றவற்றை பகுப்பாய்வு செய்யும் ஒரு இயல் என குறிப்பிடலாம்.

அத்தோடு இயற்கையின் விதிகளை வெளிக்கொண்டு வர துணை புரியும் அடிப்படை இயலாகவும் இயற்பியல் காணப்படுவதோடு அதன் மொழி கணிதவியலாகவும் காணப்படுகின்றது.

இயற்பியலின் பிரிவுகள்

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களின் பகுப்பாய்வாகவும் இயற்பியல் காணப்படுவதனால், இயற்பியலோடு இணைந்து பல்வேறு துறைகள் செயற்படுவதனைக் காணலாம்.

அத்தோடு இயற்பியலின் உட்பிரிவுகளாகவும் பல்வேறு துறைகள் விளங்குகின்றன. அந்த வகையில் வானவியல், புவியியல், வெப்ப இயக்கவியல், மின்காந்தவியல், நிலையில், இயக்கவியல், இயந்திரவியல், அணு இயற்பியல், மின்னோட்டவியல், காந்தவியல், ஒளியியல், ஒலியியல் மின்காந்தவியல் நிலைமின்னியல் கதிரியல் மருத்துவ இயற்பியல், அணுக்கரு இயற்பியல், மற்றும் இழை ஒளியியல் போன்றவாறு பல்வேறு பிரிவுகள் இயற்பியலில் உள்ளடங்கியுள்ளது.

இயற்பியலின் பங்கு

இயற்பியல் என்பது ஒரு பெரிய அமைப்பாக காணப்படுகின்றது. அதாவது கண்ணுக்கு புலப்படாத ஒரு சிறிய அணு தொடக்கம் விண்வெளியில் உள்ள விண்மீன்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

இயற்பியலின் மூலம் இயற்கை பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ள முடிதல், எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு தேவையான அடிப்படை அறிவை பெறுதல், தொழில்நுட்ப உட்கட்டமைப்புக்கு உதவுதல், அறிவியல் முன்னேற்றங்களை ஏற்படுத்தல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பயிற்சி வழங்குதல் போன்றவாரான பங்குகளை ஆற்றுவதாக இயற்பியல் காணப்படுகின்றது.

மனித குலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பங்காற்றும் முக்கியத்துறையாக இந்த இயற்பியல் விளங்குகின்றது.

நவீன காலங்களில் இயற்பியலின் வளர்ச்சி

நவீன இயற்பியல் வளர்ச்சி என்பது இருபதாம் நூற்றாண்டின் முட்பகுதியில் இருந்து ஆரம்பமாவது ஆகும். இதற்கமைய அதற்கு முன்னர் காணப்பட்ட மரபு ரீதியான இயற்பியலின் பல்வேறு தன்மைகளை மாற்றி அமைக்கும் வகையிலேயே இந்த நவீன இயற்பியல் வளர்ச்சி கண்டுள்ளது.

பிரபஞ்சம் என்பது உள்ளார்ந்து இணைக்கப்பட்டதோர் இயக்கபூர்வமான முழுமை என்கின்ற உருவமாக எடுத்துக்காட்டப்படுகின்றது.

இயற்பியலானது புதிய தொழில்நுட்பங்களை நவீன காலங்களில் செயல்படுத்துவதோடு, மின்காந்தவியல், திட நிலை இயற்பியல் மற்றும் அணு இயற்பியல் போன்ற புதிய புரிதல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொலைக்காட்சி, கணினி, அணு ஆயுதங்கள் போன்ற மனிதனை வியக்க வைக்கும் புதிய தயாரிப்புகளின் வளர்ச்சிகளுக்கும் நேரடியான தாக்கம் செலுத்தியதாக இந்த இயற்பியல் காணப்படுகின்றது.

முடிவுரை

இயற்கையான உலகத்தில் பொருள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட இயற்பியல் என்பது தர்க்க ரீதியாகவும், நியாயத்தோடும் சேர்ந்து கண்காணிப்பதற்கான ஒரு துல்லியமான பயன்பாட்டின் மூலம் எதார்த்தத்தை அளவிடுவதற்கான முயற்சி என்று குறிப்பிட முடியும்.

நாம் வாழும் உலகில் அன்றாடம் இந்த இயற்பியலின் பங்கு இணைந்ததாகவே காணப்படுகின்றது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் இயற்பியலின் வளர்ச்சியும் எம்மை சூழ்ந்து கொண்டே உள்ளது.

You May Also Like:

அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை

அறிவுக்கு விருந்தாகும் அறிவியல் கட்டுரை