உடல் நலமும் உள நலமும் கட்டுரை

உடல் நலமும் மன நலமும் கட்டுரை

இந்த பதிவில் “உடல் நலமும் உள நலமும் கட்டுரை” பதிவை காணலாம்.

மன, உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க வழிமுறைகளைப் பேணுவது அவசியம் ஆகின்றது.

உடல் நலமும் உள நலமும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உணவும், உடற் பருமனும்
  3. மனித ஆயுளை அதிகரிக்கும் உளநலம்
  4. ஆரோக்கிய வாழ்வின் அவசியத் தேவைகள்
  5. உடல் மற்றும் உள நலத்தில் தியானத்தின் பங்களிப்பு
  6. முடிவுரை

முன்னுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பர் நோயின்றி வாழும் போதுதான் உடல் மற்றும் உள நலன்கள் பேணப்பட்டு வாழ்வு சிறப்பாகும். உடல் நலம் பேணப்படும் போது உடல் நலமும் பேணப்படும்.

மனிதனுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ பெரிதும் உதவுவது உடல் உள நலமேயாகும்.

எனவே ஆரோக்கியமாக இருப்பது உடலில் நோயில்லாமல் இருந்தால் மட்டும் போதாது. நலம் என்பது உடல், உள்ளம் இரண்டிலும் முழுமை பெற்று இருக்க வேண்டும். இக்கட்டுரையில் உடல் நலமும் உள நலமும் பற்றி காணலாம்.

உணவும், உடற் பருமனும்

வாழ்வதற்காகவே உண்பவர்கள் இருக்கிறார்கள், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். உடற் பருமன் அதிகரிப்பதற்கு எம்மில் காணப்படும் பழக்கவழக்கங்களும் காரணமாகின்றன.

அந்த வகையில் உடற்பருமனுக்கு முதல் காரணம் நாம் உண்ணும் உணவுகளே. தாகம் எடுப்பதனை பசி என்று எண்ணி தண்ணீருக்குப் பதிலாக உணவு எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் உடல் எடை கூடி விடும்.

அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதாலும், துரித உணவுகளை உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கின்றது. மேலும் உணவுகள் உண்டபின் ஒரு இடத்தில் அமர்வதால் அல்லது உண்டபின் தூங்குவதால் உடற்பருமன் அதிகரிக்கின்றது.

மனித ஆயுளை அதிகரிக்கும் உளநலம்

மனித ஆயுள் காலத்தை தீர்மானிப்பதில் உடல் நலத்தைப் போல உளநலமும் முக்கியமாகின்றது. மன அமைதியாகவும், மன மகிழ்ச்சியாகவும் வாழும் போது நமது ஆயுட்காலம் அதிகரிக்கும்.

துன்பங்களின் போதும், கஷ்டங்களின் போதும் அது உடல் நலத்தைப் பாதித்து ஆயுட்காலத்தைப் பாதிக்கின்றது. உள ஆரோக்கியத்துடன் வாழும் போது வாழ்வில் ஏற்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியும்.

இதனால் வாழ்வில் தவறான முடிவுகளை எடுக்கும் மனநிலை ஏற்படாது, பிரச்சனைகளில் இருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

ஆரோக்கிய வாழ்வின் அவசியத் தேவைகள்

ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் உடல் நலத்தோடு, உடல் நலத்தையும் பேணவேண்டும். உடல், மனம், உணர்வு ரீதியாக தன்னை முழுமையாக உணர்பவரே ஆரோக்கிய மனிதர்.

நமது வாழ்க்கை முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் உடல் நலம் மற்றும் உடல் நலத்தை பேண வேண்டும். ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு அடையாளமே சரியான உடலமைப்பு ஆகும்.

சரியான உடலமைப்பு எந்த ஒரு உடல் நல கோளாறுகளையும் தருவதில்லை. எனவே உடல் ஆரோக்கியத்தை சரியான வகையில் பெறுதல் அவசியமாகின்றது.

உடல் மற்றும் உள நலத்தில் தியானத்தின் பங்களிப்பு

தியானத்தால் உடல், மனம், மூளை ஆரோக்கியம் பெற்று சுயக் கட்டுப்பாடும் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என ஆய்வு கூறுகிறது. தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது.

இதனால் தெளிவான முடிவுகள் எடுக்கவும் வழிவகைச் செய்கிறது. தியானத்தின் மூலம் உடலிலுள்ள பல நோய்கள் சரி செய்யப்படுகின்றது.

குறிப்பாக அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதன் மூலம் ஆரோக்கிய வாழ்விற்கு பங்களிப்புச் செய்கின்றது.

முடிவுரை

இன்று மனிதனின் மாறுபட்ட வாழ்க்கை முறையால் உண்டான கொடூர நோய்களால் உடல் நலம் பாதிப்படைகின்றது. அத்தகைய நோய்களில் மனஅழுத்தம் முன்னிலையில் உள்ளது.

மன, உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க வழிமுறைகளைப் பேணுவது அவசியம் ஆகின்றது. சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, பழக்கவழக்கம், தியானம் போன்ற வழிமுறைகளைக் கையாண்டால் உடல் நலத்துடன், உடல் நலமும் பேணப்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வசப்படும்.

You May Also Like :
உடல் ஆரோக்கியம் கட்டுரை
உடல் நலம் காப்போம் கட்டுரை