இந்த பதிவில் “உலக இளைஞர் திறன் தினம் கட்டுரை” பதிவை காணலாம்.
வாகன பழுது பார்த்தல் தொடங்கி கணினி மென்பொருள் உருவாக்கம் வரை அனைத்து துறைகளிலும் இளைஞர்களினுடைய சேவையினை நாடானது எதிர்பார்த்திருக்கின்றது. உலக இளைஞர் திறன் தினம் கட்டுரை
உலக இளைஞர் திறன் தினம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வரலாறும் முக்கியத்துவமும்
- நோக்கம்
- இளைஞர்களின் இன்றைய நிலை
- இளைஞர்களுக்கான அறிவுரைகள்
- முடிவுரை
முன்னுரை
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய திறனை அறிந்து கொள்ள வேண்டும். அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியமாகின்றது.
திறன் என்பது கற்றலின் ஊடாக பெற்றுக் கொள்வது ஆகும். கற்றல் செயற்பாடு திறன்களை அடையாளப்படுத்தி அவற்றை விருத்தி செய்ய உதவும். அந்த வகையில் இக்கட்டுரையானது உலக இளைஞர் திறன் தினம் தொடர்பாக விளக்குவதாக உள்ளது.
வரலாறும் முக்கியத்துவமும்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 2014 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் ஜீலை மாதம் 15 ஆம் திகதியினை உலக இளைஞர் திறன் தினமாக நினைவுகூற தனது உறுப்பு நாடுகளை வலியுருத்தி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
உலக மக்கள் தொகையில் அதிக பங்கினை கொண்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்கள் திறனூடான ஒரு அபிவிருத்தியை உருவாக்குவதும் இதன் முக்கியத்துவமாக காணப்படுகின்றது.
நோக்கம்
இதன் பிரதானமான நோக்கமாக வேலையின்மை மற்றும் தகுதி குறைந்த வேலை வாய்ப்பு ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறையாக இன்றைய இளைஞர்களுக்காக சிறந்த சமூக பொருளாதார நிலைமைகளை அடைவது காணப்படுகின்றது.
மேலும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சியை பொருத்தமான செலவில் அணுகுவதனையும் இந்த தினமானது பிரதிபலித்து நிற்கின்றது.
இந்த முயற்சியின் மூலம் வேலைவாய்ப்பு, ஒழுக்கமான வேலை மற்றும் தொழில் முனைப்பு ஆகியவற்றை எந்த தடையும் இல்லாமல் இளைஞர்கள் பெறும் வகையில் அவர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் திறன்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொள்கின்றது.
இளைஞர்களின் இன்யை நிலை
வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் தகமையுடனான கல்வியை பலர் பெற்றிருந்தாலும் கூட அதிகரித்த சனத்தொகை, போட்டித்தன்மை காரணமாக வேலைவாய்ப்பானது மிக குறைவாகவே உள்ளது.
இதன் காரணத்தினால் தங்கள் தொழிற்திறனை வளர்ப்பதனூடான வேலைவாப்பினை பெறுதல் சுய வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய தேவை என்பன தற்கால இளைஞர்களுக்கு சவாலான ஒரு சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கான அறிவுரைகள்
இன்றைய கால கட்டத்தில் சாதாரண கல்வியுடன் மட்டும் நின்று விடாது தொழில் நுட்பம் மற்றும் தொழிற்கல்வியானது இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் நாட்டினுடைய பொருளாதாரத்தை வளப்படுத்தவும் தேவையானதாக உள்ளமையினால் இளைஞர்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வாகன பழுது பார்த்தல் தொடங்கி கணினி மென்பொருள் உருவாக்கம் வரை அனைத்து துறைகளிலும் இளைஞர்களினுடைய சேவையினை நாடானது எதிர்பார்த்திருக்கின்றது. எனவே தான் இளைஞர்கள் தொழிற்கல்வி தொடர்பான முக்கியத்துவத்தை உணர்ந்து அவரவர் திறனூடாக அதை வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்.
முடிவுரை
உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்காக இளைஞர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளர்முக நாடுகளில் உள்ளனர். கல்வி, வேலை வாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை இளைஞர்களுக்கு அரசும் ஏற்படுத்தி தர வேண்டும்.
அதேபோல் இளைஞர்களும் தமது திறமைகளை வளர்த்துக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவ இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் உறுதி ஏற்க வேண்டும்.
You May Also Like: |
---|
தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை |
உடல் நலமும் உள நலமும் கட்டுரை |