கணக்கன்பட்டி சித்தர் வரலாறு

கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள்

சித்தர்கள் எனப்படுவோர் தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். அவர்கள் மனம், மொழி, மெய் என்பதை கடந்து மக்களை வாழ்விக்க இறைவனால் அனுப்பப்பட்ட மகான்களாக காணப்படுகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாநிலத்தின் பழனியில் வாழ்ந்த கணக்கன்பட்டி சித்தர் என்கிற பழனிச்சாமி சித்தர் தம்மை நாடி வந்த அனைத்து மக்களது முன்ஜென்மத்து பாவங்களையும், தோஷங்களையும் நீக்கி அருள் புரிந்துள்ளார்.

இயற்பெயர்பழனிச்சாமி
பிறந்த இடம்பழநி, திண்டுக்கல்
மறுபெயர்கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள்

தோற்றமும் அவரது செயல்களும்

சராசரி உயரம், பரட்டைத் தலை அதை சுற்றி முண்டாசு கட்டியிருப்பார். தாடி மழிக்கப்படாத முகம், பச்சை நிற முழுக்கைச் சட்டையும், வேட்டியும் அணிந்து காணப்படுகிறார். பெரும்பாலும், வேஷ்டியை மடித்துக் கட்டி இருப்பார். இவர் அணிந்திருக்கும் ஆடைகள் அழுக்காகவே காணப்படும்.

இவரது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை எப்போதும் தொங்கிக்கொண்டு இருக்கும். மிகவும் கனமான மூட்டையாக காணப்படும் அம்மூட்டைக்குள் என்ன உள்ளது என்பது இதுவரைக்கும் எவருக்கும் தெரியாத விடயமாக காணப்படுகிறது.

சிலவேளைகளில், புளியமரத்தின் அடியில் அவர் ஓய்வு எடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் அவரது கண்களில் படும்படி மூட்டையை தொங்க விட்டிருப்பார். சில நேரங்களில் எவரேனும், அந்த மூட்டையின் அருகே நெருங்கி செல்வதை கண்டால், உரக்க சப்தமிட்டு அவர்களை விரட்டி விடுவார்.

தான் செல்லும் இடமெல்லாம் அந்த அழுக்கு மூட்டையை விடாமல் தூக்கிக்கொண்டு செல்வதனால் அந்த ஊர்வாசிகள் “மூட்டை சுவாமிகள்” என இவரை அழைக்கின்றனர்.

ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் அவரது மூட்டையை தூக்கிக் கொண்டு எங்காவது திரிவார். பழனி மலைக்கு எதிரில் உள்ள இடும்பன் மலையில் சில காலம் தங்கியிருப்பார்.

பல வேளைகளில் சுவாமிகள் எங்கே இருக்கின்றார் என்பதை எவராலும் கண்டுபிடிக்க இயலாத காரியமாக உள்ளது.

உச்சி வேளையில் கொளுத்துகின்ற வெயிலில் மலைக்கு மேலே ஒரு பாறையில் அமர்ந்து தியானம் செய்வார். கொட்டுகின்ற மழையில் முழுக்க நனைந்த படி அதே பாறையில் படுத்திருப்பார் இயற்கை நிகழ்வுகள் இவரை ஏதும் செய்வதில்லை.

இவர் கணக்கன் பட்டியில், அவரது சகோதரனின் குடிசையில் வசித்து வந்தார். தனக்கென எவ்வித சொத்துக்களையும் அவர் இதுவரை காலமும் சேர்ந்ததில்லை.

எப்போதாவது, சாப்பிடுவார். யாரும் பணம், உணவு ஏதும் கொடுக்க வந்தால் விரட்டி விடுவார். அவருக்கு பசிக்கின்ற போது மாத்திரம் அவருக்கு பிடித்தவர்களிடம் பணம் கேட்டுப் பெற்று உணவு வாங்கி உண்பார். “பழனி கல்லூரி”க்கு முன் உள்ள புளியமரங்களின் அடியில் படுத்திருப்பார்.

எப்போதும் சித்தர்கள் பாஷையிலேயே அதிகளவில் உரையாடுவார். சில வேளைகளில் மாத்திரம் சாதாரண மக்கள் விளங்கிக் கொள்ளும் பாசையில் பேசுவார்.

கணக்கன்பட்டி சித்தர் சில நேரங்களில் அவரை காண வந்திருப்பவர்களை விரட்டியும் விடுவார். சில நேரங்களில் காண வந்த பக்தர்களை அங்கிருக்கும் கற்களை இங்கு எடுத்துவை, மண்ணை அள்ளி குவி, சாக்கடை தண்ணீரை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றி ஊற்று என பக்தர்களுக்கு கூறுவார். இவற்றின் மூலம் அவர்களது கர்ம வினைகளை இவர் நீக்குவதாகவும் கூறப்படுகிறது.

பூஜை

ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி, புனர்பூசம் போன்ற விசேட நாட்களில் அபிஷேகம், ஆராதனை என பல அடியார் பெருமக்கள் கணக்கன்பட்டி சித்தருக்கு பூஜை செய்து வருகின்றனர்.

அற்புத செயல்கள்

ஒருநாள் வெளிநாட்டிலிருந்து ஒரு குடும்பம் பேச முடியாத தன் குழந்தைக்கு பேச்சு வர வேண்டி பழனி முருகனை காண காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கார் கணக்கன்பட்டி வழியே வரும் வேளை அங்கு நின்ற கணக்கன்பட்டி சித்தர் காரை வழிமறித்தார்.

இவர்கள் பயத்துடன் இறங்கினர். இவர்கள் சுத்த சைவ சமயம் ஆவார்கள். அவர்களை நோக்கி “எதிரே உள்ள கடையில் பிரியாணி வாங்கி வா” என்றார். அருகில் இருந்தவர்கள் சுவாமி சொல்வதை செய்து விடுங்கள் சாமி சக்தி வாய்ந்தவர் என்று கூற, மூக்கை பிடித்துக்கொண்டு சென்று வாங்கிவந்தனர்.

“அந்த சாப்பாட்டை அந்த சிறுவனுக்கு கொடு” என்றார். தடுமாறி போனவர்கள் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தனர். அவர்கள் வாங்கி வந்த பிரியாணி சாம்பார் சாதம் ஆக மாறி இருந்தது. இதை கண்டு ஆச்சரியத்துடன் கையெடுத்து வணங்கி விட்டு பழனி நோக்கி சென்றனர்.

அப்போது அவர்களுக்கு எதிரில் ஒரு வண்டி வந்தது. அதை கண்ட அந்த சிறுவன் அம்மா என்று கத்தினான். அந்த சிறுவனிடம் இதை சற்றும் எதிர்பார்க்காதவர்கள், கணக்கன்பட்டி சித்தரின் மகிமையை கண்டு வியந்தனர்.

கும்பகோணத்தில் வசித்து வரும் “பழனி கலைக்கல்லூரி”யின் பேராசிரியருக்கு 18 சித்தர்களையும், அவரது கண்களுக்கு நேரில் தரிசிக்கும் பெரும்பேற்றை கணக்கன்பட்டி சித்தர் அவருக்கு வழங்கினார்.

You May Also Like :
பாரதியின் விடுதலை உணர்வு கட்டுரை
திருவண்ணாமலை கோவில் வரலாறு