காடுகளின் பயன்கள் கட்டுரை

Kaadukalin Payangal In Tamil

இந்த பதிவில் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் துணை புரியும் “காடுகளின் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

காடுகள் மனிதனுக்கு மட்டுமன்றி எல்லா உயிரினங்களின் உயிர் வாழ்க்கைக்கும் துணைபுரிகின்றன.

காடுகளின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. காடுகளின் வகைகள்
  3. காடுகளின் பயன்கள்
  4. காடுகளின் தொழிற்பாடு
  5. காடுகளை அழிப்பதால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இவ்வுலகின் சுவாசமாக திகழ்வது காடுகளாகும். மனிதன் முதல் பூமியில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு காடுகள் இன்றியமையாதவையாகும்.

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதிகளைக் காடுகள் என நாம் அழைக்கின்றோம். தமிழில் இதனை வனம் என்றும் கானகம்⸴ அடவி, புரவி என்றும் பல சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

புவி மேற்பரப்பில் 9.4 வீதம் அல்லது மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 30% காடுகளினால் மூடப்பட்டுள்ளது. இத்தகைய காடுகளின் பயன்களை இக்கட்டுரையில் காண்போம்.

காடுகளின் வகைகள்

உலகில் உள்ள காடுகளின் வகையானது பொதுவாக புவியியல் ரீதியாக அயன மழை காடுகள்⸴ சவன்னாக்களும் புல்வெளிகளும்⸴ ஊசியிலைக் காடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

அயனமண்டல காடுகளை வெப்பமண்டல காடுகள் எனவும் பொதுவாகக் குறிப்பிடுவர். இக்காடுகள் இந்தியாவின் மூன்று முக்கிய பகுதிகளில் பரவிக் காணப்படுகின்றது.

அவையாவன இந்தியாவின் மேற்கு தொடர்ச்சிப் பகுதி ஆகும். இரண்டாவது பகுதி வடகிழக்கு மாநிலங்கள்⸴ மூன்றாவது பகுதியில் இந்து அந்தமான்⸴ நிக்கோபார் தீவுகளை குறிப்பிடலாம்.

அயன மண்டல வறண்ட காடுகளை இடைநிலை வகைக் காடுகள் எனவும் குறிப்பிடலாம். இவை இந்தியாவின் கிழக்கு ராஜஸ்தான்⸴ கிழக்கு மகாராஷ்டிரா கிழக்கு தமிழ்நாடு உத்தரப்பிரதேச மேற்குப்பகுதி கர்நாடகா மேற்கு பகுதிகள் காணப்படுகின்றன.

காடுகளின் பயன்கள்

காடுகள் மனிதனுக்கு மட்டுமன்றி எல்லா உயிரினங்களின் உயிர் வாழ்க்கைக்கும் துணைபுரிகின்றன. காடுகள் காட்டு விலங்குகளின் இருப்பிடமாக திகழ்கின்றன. விலங்குகள் வாழ்வதற்கு காடுகள் மிகவும் அவசியமாகும்.

பூமியின் வெப்பத்தைக் காடுகள் குறைக்கின்றன. காடுகளின் குளிர்ச்சித்தன்மையால் மழை பொழிய செய்கின்றன. மண்சரிவு⸴ நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களை காடுகளால் தவிர்க்கப்படுகின்றன.

மரங்கள் சார்ந்த பொருட்கள்⸴ பலவித பிசின்கள்⸴ காகிதங்கள்⸴ செயற்கைப் பட்டு போன்றவையும் மனிதனுக்கு கிடைக்கப்பெறுகின்றன.

காடுகளின் தொழிற்பாடு

காடுகள் இயற்கையாகவே உருவாகின்றன. பறவைகள்⸴ விலங்குகள் தாவரங்களில் உள்ள பழங்களை உண்டு அவற்றின் விதைகளை எச்சமாக போடுவதால் அவை வெடித்து காற்றில் பரவி காடுகள் இயற்கையாகவே தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.

காடுகள் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனை வழங்குகின்றன. காடுகள் நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன.

மலைகள் அடர்ந்த காடுகளின் மழை பெய்கின்ற போது மரங்களின் கிளைகள் மழையின் வேகத்தை குறைத்து நிலத்தில் உள்ள வளமான மண் கரைந்து போகாமல் பாதுகாக்கின்றன.

காடுகளை அழிப்பதால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

காடுகள் இல்லாமல் மனிதனுக்கு ஒன்றும் ஆவதில்லை. மனிதன் காடுகளைப் பயன்படுத்துவதோடு அதனை தொடர்ச்சியாகவும் அழித்து வருகின்றான்.

இவ்வாறு தொடர்ச்சியாக அழிப்பதால் ஏனைய பயனுள்ள மரங்களும் பொருட்களும் கிடைக்காமல் போவது மட்டுமல்ல நாம் வாழும் பூமியின் தட்பவெப்ப நிலையும் அபாயகரமாக மாறிவருகின்றது.

உலகளவில் தற்போது காடுகள் மறைந்த இடங்கள் எல்லாம் பாலைவனமாக இருக்கின்றது. உலகில் பல மலைகளைக் கொண்ட காடுகள் தற்போது வெறுமையாக காட்சி அளிப்பதுடன் பயனற்றும் போயுள்ளன.

அதற்கு காரணம் ஆண்டாண்டு காலங்களாக மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதாகும். இதனால் அவ்விடங்களில் முடிவு பாலைவனம் தான்.

முடிவுரை

இயற்கை நமக்களித்த அற்புதமான படைப்பு தான் காடுகள். இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். காடுகளின் பயன்கள் அடைய நினைக்கும் மனிதன் அதனை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது மிக மிக அரிது.

காடுகளை தொடர்ச்சியாக அழிக்கும் போது மரம் சார்ந்த பொருட்களைச் செய்வதற்கு மரங்கள் கிடைக்காது. இதனை நன்குணர்ந்த சில மேல்நாட்டு மக்கள் வளர்ந்த மரங்களை வெட்டுவது தடை செய்துள்ளனர்.

மரங்களை வெட்டினால் அவ்விடத்தில் அதற்கு இணையான மரங்களை வளர்க்க வேண்டும். மரம் வளர்ப்போம் மனிதனையும்⸴ பூமியையும் பாதுகாப்போம்.

You May Also Like:
இயற்கையின் நன்மைகள் கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை