குளத்தங்கரை அரச மரம் சிறுகதையானது பெண்ணைப்பற்றி பேசப்படும் ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இச்சிறுகதையானது தமிழில் சிறப்புற்று விளங்கிய வ.வே.சு ஜயரினால் எழுதப்பட்டதாகும்.
இது முதன் முதலாக 1917ம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதையாகும். இந்த சிறுகதையானது பல சமூக போக்குகளை ஆராய்கின்றது.
குளத்தங்கரை அரசமரம் சிறுகதை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கதைச்சுருக்கம்
- பெண்களுக்கான நீதி
- சமூக நோக்கு
- படைப்பாளனின் இலக்கிய தரத்தை எடுத்தியம்பும் சிறுகதை
- முடிவுரை
முன்னுரை
சிறுகதைகளின் வளர்ச்சிக்கு தொண்டாற்றி பல சிறுகதைகளை தனிநடையாக வகுத்தவர்களுள் ஒருவரே வ.வே.சு ஐயர் ஆவார். இவருடைய சிறுகதைகள் வாழ்க்கை சிக்கலை பிரதிபலிப்பதாகவும் மனித மனமானது மாறவேண்டிய அவசியத்தையும் எடுத்துகூறுபவையாக காணப்படுகின்றன.
அந்த வகையில் இச்சிறுகதையானது மென்மையான உள்ளம் கொண்ட பெண்ணிற்கு விளையாட்டிற்குகூட துன்பம் செய்ய வேண்டாம் என்று பெண்களின் மென்மையான குணம் மற்றும் துன்பம் பற்றி எடுத்தியம்புகின்றது.
கதைச்சுருக்கம்
இக்கதையானது குளத்தங்கரையில் வீற்றிருக்கும் அரசமரம் ஒன்று கண்டும் கேட்டும் கூறுவதுபோல் கதையானது நகர்கின்றது. அதாவது இக்கதையில் தலைவியின் அன்பு, அழகு போன்றவற்றை அரசமரமானது மிகவும் அழகாக எடுத்துகூறுகிறது.
மேலும் இக்கதைத் தலைவியானவள் தனது 12 வயதிலே நாகராஜ் என்பவருடன் திருமணம் நடந்தேறியதோடு மட்டுமல்லாமல் திருமணம உறவு இடம்பெறும் முன்னே அவள் தந்தைக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக ருக்மணியை ஒதுக்கி வைத்ததோடு நாகராஜனுக்கு வேறு திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
மேலும் இது பற்றி கூறுகையில் தான் ருக்மணியை கைவிடமாட்டேன் என்பதனையே தனது நனண்பனிடம் கூறுகிறான். இதனை அறியாத ருக்மணியானவள் தன்னை தன் கணவன் கை விட்டுவிட்டான் என்று எண்ணி குளத்தில் மூழ்கி உயிரை விட்டதோடு நாகராஜன் இதை எண்ணி மனம் வருந்தி சந்நியாசம் வாங்கி கொள்வதாக இக்கதை அமைந்துள்ளது.
பெண்களுக்கான நீதி
இக்கதையானது பெண்களுக்கான நீதியை எடுத்துரைக்கின்றது. அதாவது மென்மை உள்ளம் படைத்த பெண்களை சிறு விளையாட்டிகு கூட மனதினை கவலைக்குட்படும் விதத்தில் எதுவும் செய்யக்கூடாது என்பதானது பெண்களுக்கான நீதியினையே வெளிப்படுத்துகின்றது.
மேலும் துன்பமடைந்து கொள்ளும் பெண்ணானவள் தான் பெற்ற துன்பத்திலிருந்து மாற்றம் காண வேண்டும் என்பதனையும் சுட்டிநிக்கின்றது.
சமூக நோக்கு
குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையானது ஓர் சமூக நோக்கோடு எழுபப்பட்டுள்ளமை சிறப்புமிக்கதாகும்.
அதாவது பெண் பற்றியும் அவள் சமூகத்திற்கு மத்தியில் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, மூடநம்பிக்கை, தீண்டாமை, வறுமைக் கொடுமை, சாதி ரீதியல் பாகுபடுத்தப்படல் போன்றவற்றை விளக்குவதாகவே அமைந்துள்ளதோடு இக்கொடுமைகளிலிருந்து எவ்வாறு விடுபட்டு வாழ்வது எனவும் இவ்வாறான மூடநம்பிக்கைகளை அடியோடு இல்லாமல் செய்வதனூடாக சமூகமானது சிறப்பாக அமையும் என்பதைனையும் எடுத்துரைக்கின்றது.
படைப்பாளனின் இலக்கிய தரத்தை எடுத்தியம்பும் சிறுகதை
இச்சிறுகதையானது உரைநடையை வளர்த்து இன்று நவீன இலக்கியமாக வளம் வருவதானது படைப்பாளனின் இலக்கிய தரத்தின் தன்மையை சுட்டுகின்றது. அதாவது இரசணையுடன் கூடிய கதையை எமக்களிப்பதோடு காலத்தினை காட்டும் கண்ணாடி போன்றும் இச்சிறுகதையானது அமைந்துள்ளது.
முடிவுரை
இச்சிறுகதையானது பெண்களின் மனம் பற்றியதாகும். மேலும் இப்பெண்களின் மனதினை நோகடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மூடநம்பிக்கைகள் மற்றும் பெண்களுக்கெதிரான கொடுமைகளை நிறுத்த வேண்டும் என்பதினூடாக பெண்களின் மேன்மையை எடுத்துகூறவதாக காணப்படுகிறது.
You May Also Like:
தமிழர்களின் வீர கலைகள் கட்டுரை