சரஸ்வதி பூஜை பற்றிய கட்டுரை

Saraswati Puja Katturai Tamil

இந்த பதிவில் கல்வி செல்வத்தை கொடுக்கும் “சரஸ்வதி பூஜை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வணக்கிடும் திருநாளே ”சரஸ்வதி பூஜை” ஆகும்.

சரஸ்வதி பூஜை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நவராத்திரி உருவான வரலாறு
  3. சரஸ்வதி பூஜை
  4. ஞானத்தை வழங்கும் சரஸ்வதி தேவி
  5. கலைமகளின் வீணை
  6. முடிவுரை

முன்னுரை

நவராத்திரி விழா, இந்துக்களால் கொண்டாடப்படும் விழா ஆகும். இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் இந்துக்களால் ஒன்பது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

நவராத்திரி விழா புரட்டாசி மாதம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிப்படுவர்.

அவ்வாறு சரஸ்வதி தேவியை கொண்டு விழா நிறைவுப் பெறுவதால் அந்த இறுதி நாள் ”சரஸ்வதி பூஜா” என அழைக்கப்படுகின்றது. மேலும் கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வணக்கிடும் திருநாளே ”சரஸ்வதி பூஜை” ஆகும்.

பூஜா என்ற சொல்லில் ‘பூ’ என்பது பூர்த்தியையும், ‘ஜா’ என்பது உண்டாக்குவது என்றும் பொருள்படும். சரஸ்வதி பூஐை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நவராத்திரி உருவான வரலாறு

றம்பன் என்பவனுக்கும், எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன் தான் மகிசாசுரன் எனும் அரக்கன்.

இவன் மேரு மலையில் 16000 ஆண்டுகள் பிரம்மதேவனை நினைத்து கடும் தவம் புரிந்து தனக்கு யாராலும் அழிவில்லை, ஒரு கன்னி பெண்ணால் தான் அழிவு உண்டாகும் எனும் வரம் பெற்றான். இதனால் அவன் தேவர்களைத் துன்புறுத்த துவங்கினான்.

தேவர்களை காக்க சக்தி பெண்ணுருவம் பூண்டு பூமியில் பிறந்து மகிசாசூரனுடன் போர் புரிந்தாள். அப்போரில் மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.

இவ்வாறு மகிசாசுரனை வதம் செய்வதற்காக போர் புரிந்த ஒன்பது நாட்களும் நவராத்திரி என்று கொண்டாடப்படுகின்றது என புராணங்களில் கூறப்படுகிறது.

சரஸ்வதி பூஜை

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வேண்டிப் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை ஆகும். இச் சரஸ்வதிப் பூஜையானது நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர நாளில் தொடங்க வேண்டும் என்பது நியதியாகும்.

நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.

சரஸ்வதி தேவி நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படுகின்றாள்.

ஞானத்தை வழங்கும் சரஸ்வதி தேவி

தமிழகத்தில் கூத்தனூர் போன்று ஆந்திர மாநிலத்தில், பாசரா என்ற திருத்தலத்தில் தனிக் கோயிலில் அருள்கிறாள் சரஸ்வதி.

ஞானத்தை வழங்கும் தேவி ஆவார்.சரஸ்வதி தேவி பிரம்மனின் துணைவியாவாள். சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள்.

எனவே கல்வி எனும் பெரும் செல்வத்தை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புத்தி கூர்மை யாவற்றையும் அருளுவாள்.

கலைமகளின் வீணை

கலைவாணி ஏந்தியிருக்கும் வீணைக்கு கச்சபி என்று பெயர். இது சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது.

வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாக ஐதீகம்.

தேவியின் கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் கல்வியின் மேன்மையையும் கலைகளில் திறமையையும் அருள்பவள் என்பதை உணர்த்துகின்றன.

முடிவுரை

சரஸ்வதி பூஐையைத் தொடங்குவதற்கு முன்பு அன்னையை ஆவாஹனம் செய்யவேண்டும்.

சரஸ்வதி பூஐையைக் கொண்டாடி அன்னையின் அருள் பல பொறுவதோடு கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை வணங்கி யோகத்தைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்வோம்.

You May Also Like:
சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை
கல்வியின் சிறப்பு கட்டுரை