தேசிய கொடி பற்றிய கட்டுரை

Thesiya Kodi Katturai In Tamil

இந்த பதிவில் நாட்டின் அடையாளமான “தேசிய கொடி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தேசியக் கொடியை நாட்டு மக்கள் உயிர்மூச்சாக கருதி தேசியக்கொடிக்கு மக்கள் எப்போதும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தேசிய கொடி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தேசியக் கொடி உருவான வரலாறு
  3. தேசிய கொடியின் விதிமுறைகள்
  4. தேசிய கொடியின் வடிவம்
  5. தேசியக் கொடியின் சிறப்புக்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியக் கொடி இருக்கின்றது. அவ்கையில் இந்திய தேசியக் கொடியாக மூவர்ணக்கொடி காணப்படுகின்றது.

சுதந்திர இந்தியாவின் அடையாளமாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உயிர் மூச்சாகவும் தேசியக்கொடி கருதப்படுகின்றது.

இத் தேசியக் கொடியானது நாட்டின் மதிப்பு மிக்க சின்னமாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகின்றது. இத்தகைய தேசிய கொடி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தேசியக் கொடி உருவான வரலாறு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டில் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டமான சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்தது.

இக்காலப்பகுதியில் வெள்ளையர்கள் வேறு, இந்தியர்கள் வேறு என்று கோடிட்டு காட்டுவதற்கு ஒரு கொடி இந்தியர்களுக்கு தேவைப்பட்டது.

அச்சமயம் சுவாமி விவேகானந்தரின் சீடரான நிவேதிதா ஒரு கொடியை உருவாக்க முன்வந்தார். 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி அன்று வங்கப் பிரிவினையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மூவர்ணக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மூவர்ணக் கொடியில் காவி, பச்சை நிறங்களோடு மத்தியில் வெள்ளைக்கு பதிலாக மஞ்சள் நிறமுள்ள கல்கத்தா கொடி அறிமுகம் செய்யப்பட்டதால் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.

அதன் பின்னர் 1916 ஆம் ஆண்டு பிங்கலி வெங்கையா எல்லோருக்கும் பொதுவான ஒரு கொடியை உருவாக்கினார். அதில் காவி, வெள்ளை, பச்சை ஆகிய வண்ணங்களைக் கொண்டதாகவும் நடுவில் ராட்டை சக்கரம் உள்ள கொடியாகவும் தயாரிக்கப்பட்டது.

இதற்குப் போட்டியாக சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தனது தேசியப் படைக்கு ராட்டைச் சக்கரத்திற்கு பதிலாக பாயும்புலி சின்னத்துடன் கொடியை உருவாக்கினார் இதற்கு பெரும் எதிர்ப்பு உருவானது.

இதன் பின்னர் 1950 ஜனவரி 26ஆம் திகதி பிங்காலி வெங்கையா காந்தியின் ஆலோசனைப்படி கொடியை உருவாக்கினார். இக்கொடியே நம் இந்திய தேசியக் கொடியாக உள்ளது.

தேசிய கொடியின் விதிமுறைகள்

தேசியக்கொடி செவ்வக வடிவில் நீளம்-அகலம் 3:2 எனும் விகிதத்தில் மேற்புறம் காவி வண்ணம் நடுவில் வெண்மை கீழே பச்சை வெண்மையின் நடுவில் நீலநிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோகச் சக்கரம் இருக்க வேண்டும்.

தேசியக்கொடி கதர் மற்றும் பட்டுத் துணிகளால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த பொருளையும் மூடிவைக்கும் அலங்காரப் பொருளாகத் தேசியக்கொடி இருக்கக்கூடாது. அலங்காரப் பொருளாகத் தேசியக் கொடியை பயன்படுத்த கூடாது.

தேசிய கொடியின் வடிவம்

இந்தியத் தேசியக் கொடியானது நீள்வாக்கில் மூன்று வண்ணங்களை உடையது. மேல்பக்கம் காவி வண்ணமும் இடையில் வெள்ளை வண்ணமும் அடியில் பச்சை வண்ணமும் சம அளவில் இருக்கவேண்டும்.

நீளம் மூன்று பங்கு அகலம் இரண்டு பங்கு என்ற விகித அளவில் கொடியின் அளவு அமையும். கொடியின் நடுவில் சக்கரம் கடல் நீல வண்ணத்தில் இருக்கும்.

அசோக மன்னரின் தலைநகரான சாரநாத்தில் அமைந்திருக்கும் சிங்கத்தின் மணிச் சட்டத்தில் இவ் தர்மச் சக்கரம் அமைந்திருக்கின்றது.

தேசியக் கொடியின் சிறப்புக்கள்

இந்தியத் தேசியக் கொடியிலுள்ள அசோகச் சக்கரமானது தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது.

நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்குக் காரணம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய நமது சுதந்திர் போராட்ட வீரர்களின் தியாகமேயாகும். இவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரத்தின் அடையாளமே தேசியக் கொடியாகும்.

முடிவுரை

நம் தேசத்தின் தேசியக்கொடிக்கு மக்கள் எப்போதும் மரியாதை செலுத்தி வருகின்றனர். தேசியக் கொடியை நாட்டு மக்கள் உயிர்மூச்சாக கருதுகின்றனர்.

திருப்பூர் குமரன் கொடியை காக்க தனது உயிரையே தியாகம் செய்தார். நாமும் இந்திய விடுதலை வீரர்களையும் தேசியக் கொடியையும் என்றென்றும் போற்றிடுவோம்.

You May Also Like :
தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை
தாய் நாடு பற்றிய கட்டுரை