சர்வதேச உலக நீதி தினம்

ulaga neethi dhinam

சர்வதேச உலக நீதி தினம்ஜூலை 17
World Day for International JusticeJuly 17

மன்னராட்சியில் தொடங்கி 21 ஆம் நூற்றாணடுவரை நீதி கேட்கும் போராட்டம் இன்றும் மீண்டதாகவில்லை.

பல நூற்றாண்டுக்கு முன்னரே தன் கணவருக்கு நீதி கேட்ட கண்ணகி முதல் பசுமாட்டிற்கு நீதி வழங்கிய மனுநீதி சோழ மன்னன் உட்பட மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் தற்போது வரை நீதிமன்றங்கள் தான் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகின்றன.

மண்ணில் பிறந்த எல்லோரும் சமமானவர்கள். ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், தாழ்த்தப்பட்டவர் என்ற பேதம் இல்லாமல் வாழ வேண்டும் என்பது எல்லா நாட்டு மக்களின் விருப்பமும் சட்டமும் ஆகும்.

இதை நிலை நாட்டத்தான் ஒவ்வொரு நாட்டிலும் நீதி வகுக்கப்படுகின்றது. தனிமனிதனுக்கும் அவனது உரிமைகள் மறுக்கப்படும் போது அந்ந நாட்டின் சட்டம் அவனுக்கு நீதி வழங்குகின்றது. இதற்காகத்தான் நீதிமன்றங்கள் செயற்படுகின்றன.

ஒருவேளை நீதி மறுக்கப்படும்போதோ, தாமதிக்கப்படும்போதோ மக்களின் வாழ்க்கை முறை அச்சத்திற்குள்ளாகின்றது. நீதி எந்தத் தடையும் இல்லாமல் வலம் வருவதில்லை.

அநீதிகள் வியாபிப்பதும், அதை நீதி ஒருநாள் வெல்வதும் மாறி மாறி நடந்துவரும் செயல்தான் இங்கு நாம் காணும் வாழ்க்கை.

சர்வதேச உலக நீதி தினம்

சர்வதேச உலக நீதி தினம் வரலாறு

1998 ஆம் ஆண்டு ஜூலை 17-ம் திகதியன்று ரோம் நகரில் நடைபெற்ற உலக நாடுகள் மாநாட்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (International criminal Court) உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் விளைவாக 2002 ஆம் ஆண்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பு நாடுகள் 2010ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மதிப்பாய்வு கூட்டத்தை நடத்தின.

அதனடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளான ஜூலை 17ஆம் திகதியை சர்வதேச உலக நீதி தினமாக அனுஷ்டிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் சர்வதேச உலக நீதி தினம் 2010 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச உலக நீதி தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

சர்வதேச நீதிமன்றத்துக்கான தேவையை உணர்த்தவும், சர்வதேச நீதி தொடர்பாக உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும் நீதியை நிலைநாட்டவும், நீதிமன்றங்களின் மீது நம்பிக்கைகொள்ளவும், நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருக்கவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளிப்பதையும் உறுதிப்படுத்துவதாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச உலக நீதி தினம் முக்கியத்துவம்

மனித உயிர்களை வதைக்கும் பெரும் குற்றங்கள் உலகம் முழுக்க ஒரே அளவுகோல் கொண்டே அளக்கப்படுகின்றன. ஆனால் ஆரம்பத்தில் இவற்றை விசாரிக்க, தண்டனை வழங்க உலகம் முழுக்க ஒரே சட்டமும், அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரமும் அமைப்பும் இல்லாமல் இருந்தது.

தற்போது அந்த குறை தீர்க்கப்பட்டுள்ளது. நாடுகளைத் தாண்டியும்இ சர்வதேச அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதை இந்நாள் உணர்த்துகின்றது.

உலகில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களின் போது அநீதி தலைதூக்குவது தவிர்க்க முடியாததாகவுள்ளது. ஆனால் அந்த அநீதியைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்களா என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நாடுகளைத் தாண்டியும் சர்வதேச அளவில் நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் துணை புரிகின்றது. நாடுகளில் நடைபெறும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கவும், நீதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்.

You May Also Like :
உலக சமூக நீதி தினம்
உலக கவிதைகள் தினம்