வட கிழக்கு அமெரிக்க நாடான எகிப்தில் காணப்படும் இந்த கால்வாய் சிறப்பு மிக்க வரலாற்றைக் கொண்டு அமைந்து உள்ளது. உலகின் 80%க்கும் அதிகமான போக்குவரத்தைக் கொண்டமைந்த கால்வாயே இக்கால்வாயாகும்.
நீர் வழிப்போக்குவரத்தில் முக்கியம் பெறும் கால்வாய்களில் சூயஸ் கால்வாய் மிகவும் பிரதானமானது.
சூயஸ் கால்வாய் எந்த நாட்டில் உள்ளது | எகிப்து |
சூயஸ் கால்வாய் இணைக்கும் இரு கடல்கள் | செங்கடல், மத்திய தரைக்கடல் |
சூயஸ் கால்வாய் பாவணை செய்ய ஆரம்பித்த ஆண்டு | November 17, 1869 |
சூயஸ் கால்வாய் அமைந்துள்ள இடம்
ஆபிரிக்க நாடான எகிப்தில் சினாய் குன்றுகளின் நடுவில் இக்கால்வாய் அமைந்து உள்ளது. அதாவது செங்கடலில் இருக்க கூடிய இந்த கால்வாயானது மத்திய தரைக்கடலையும் இந்தியக் கடலையும் அதாவது மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கின்றது.
சூயஸ் கால்வாய் அமைக்கப்பட்டமைக்கான காரணம்
இந்த சூயஸ் கால்வாய் இல்லாத காலத்தில் போர்த்துக்கேயரால் கண்டறியப்பட்ட தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையின் வழியே ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வணிகம் மேற்கொண்டனர்.
இவ்வழிப்பாதை முழு ஆபிரிக்காவையும் சுற்றிப் போக வேண்டியிருந்தது. அதனால் பொருட்செலவும், நேரசெலவும் ஏற்பட்டது. இதன் காரணமாக சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது.
சூயஸ் கால்வாய் கட்டப்பட்ட வரலாறு
மிகப்பழைமையானது சூயஸ் கால்வாய் பண்டைய எகிப்தின் பாரோக்கள் ஆட்சிக்காலத்திலேயே பல நீர்த்தேக்கங்கள் இணைக்கப்பட்டு இரு கடல்களை இணைக்கும் கால்வாய் வெட்டப்பட்டது.
அதன் பின்பு பிற்கால முகமதிய தளபதி ஆம்ரு எகிப்தை வென்ற பின்னர் இதிலிருந்த மணலை அகற்றி பல மராமத்து பணிகளை மேற்கொண்டார். அதன் பின் இந்த கால்வாய் கவனிப்பாரற்று கிடந்தது.
அதன் பின் 1799 இல் புரட்சி தலைவரான நெப்போலியன் எகிப்திய படையெடுப்பின் போது சூயஸ் கால்வாய் திட்டத்திணை சிந்தித்தார். ஆனால் கடல் மட்ட உயர்வின் காரணமாக கால்வாய் கட்டி முடிக்க அதிகம் செலவாகும் என அத்திட்டம் கைவிடப்பட்டது.
அதன் பின் 1854-1856 காலப்பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேர்டினன்ட் டி லெஸ்ஸெப்ஸ் என்பவர் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக கால்வாய் ஒன்றை அமைப்பதற்காக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எகிப்து மற்றும் சூடான் ஆட்சியாளரான முகமது சையத் பாஷாவிடமிருந்து அனுமதி பெற்றார்.
இவர் 1830களில் பிரெஞ்சு அரச அதிகாரியாக இருந்தபோது சையத் பாஷாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நட்பு இதற்கு உதவியாக இருந்தது.
இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக சுயஸ் நிலப்பகுதியை வெட்டிக் கால்வாய் அமைப்பதற்கான சர்வதேச ஆணையகம் கூட்டப்பட்டது.
இது ஏழு நாடுகளைச் சேர்ந்த 13 நிபுணர்களைக் கொண்டிருந்தது. இந்த நிபுணர் குழு கால்வாய் அமைத்தல் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்ட அறிக்கையை 1856 டிசம்பரில் தயாரித்தது.
இதன் பின்னர் சுயஸ் கால்வாய் நிறுவனம் 1858 டிசம்பர் 15இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் அமைக்கும் பணி 1859 ஏப்ரல் 25இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் வெட்டும் பணி சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது.
ஒப்பந்தத்தின் படி, இந்நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு சுயஸ் கால்வாயை நிர்வகிக்கும் பொறுப்புடையது.
சூயஸ் கால்வாய் மூடப்பட்ட சந்தர்ப்பங்கள்
இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையே நடைபெற்ற ஆறு நாள் போரால் எகிப்திய அதிகாரிகளால் சூயஸ் கால்வாய் 1967-ம் ஆண்டு மூடப்பட்டது.
2004 ஆம் ஆண்டு எண்ணெய் கப்பல் நிலை தடுமாற்றம் அடைந்தமையால் இக்கால்வாய் மூடப்பட்டது.
2017 ஆம் ஆண்டு ஒரு ஜப்பானிய கப்பல் நிலை தடுமாறியமையால் போக்குவரத்து சில மணி நேரம் முடக்கி இருந்தது.
அண்மையில் 2021 ஆம் ஆண்டு எவர்கிறீன் என்னும் தாய்வான் நாட்டுக் கப்பல் 6 நாட்களாக சூயஸ் கால்வாயில் முடங்கி இருந்தது. இம் முடக்கத்தினால் பல பில்லியன் டொலர் வணிகம் பாதிக்கப்பட்டது.
சூயஸ் கால்வாய்க்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது பிரிட்டன் சூயஸ் கால்வாயை தனது கட்டுப்பாட்டினுள் வைத்து இருந்தது. உலகப்போரின் பின் எகிப்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின் 1950 ஆம் ஆண்டு பிரிட்டன் படைகள் அனைத்தும் திரும்பப் பெற்ற பிறகு அதிகாரம் எகிப்து அதிபர் கமால் அப்துல் நசரிடம் மீண்டும் வந்தது.
இக் கால்வாயின் அரசியல் நெருக்கடி 1956 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது எகிப்திய நாட்டின் அதிபராக இருந்த கமால் அப்துல் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.
இதனால் பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் எகிப்தின் மீது படையெடுப்பை மேற்கொண்டனர். ஐ.நா சபையின் தலையீட்டின் பின்னரே மூன்று நாட்டு படைகளும் விலகிச் சென்றன.
சூயஸ் கால்வாயின் விரிவாக்க செயற்பாடு
2015 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாயின் விரிவாக்க பணியை மேற்கொண்டது எகிப்து. முக்கிய கடல் வழியை ஒட்டி 35 கி.மீ. நீளத்தில் இன்னுமொரு பாதையை கட்டி அமைத்தது எகிப்து. இதனால் இரு வழிப் போக்குவரத்திற்கு சாதகமான நிலை ஏற்பட்டது. பெரிய சரக்கு கப்பல் போகவும் இது ஏதுவாய் அமைந்தது.
சூயஸ் கால்வாயை பராமரிக்கும் நிறுவனம்
சுயஸ் கெனால் அத்தாரிட்டி எனும் எகிப்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் இதனை தற்போது பராமரித்து வருகின்றது.
சூயஸ் கால்வாயின் முக்கியத்துவங்கள்
- சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடம் பெறுகின்றது.
- தினமும் 50%மான கப்பல்கள் அதிக எடையுடன் இக் கால்வாயை கடந்து செல்கின்றன.
- பனாமாக் கால்வாயின் ஊடாக செல்லும் கப்பலை விட பெரிய கப்பல்கள் இக்கால்வாய் வழியே செல்லலாம்.
- உலகின் அதிகமான எண்ணெய் கப்பல்கள் இக்கால்வாயின் வழியே கடந்து செல்கின்றன.
- பல கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இவ்வழியே கடந்து செல்கின்றது.
- இக் கால்வாயின் மூலம் எகிப்திற்கு பல அமெரிக்கன் பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கின்றது.
- தெற்கு அத்திலாந்திக் மற்றும் தெற்கு இந்தியக்கடலால் போவதை விட இக்கால்வாயின் மூலம் பயணம் மேற்கொண்டால் 7000 கி.மீ. பயணம் குறைவடையும்.
- இக் கால்வாயின் வழியே அதிகமான அரேபிய எண்ணெய் ஐரோப்பாவைச் சென்றடையும் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளை வந்தடையும்.
இவ்வாறான முக்கியத்துவம் காணப்படுவதால் ஒரு சில மணி நேரம் இந்த கால்வாய் மூடப்பட்டாலும் பெரிய பாதிப்புக்களை பல நாடுகள் சந்திக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எகிப்தின் செயற்கை கால்வாயான இக்கால்வாயின் சிறப்பினை நாமும் அறிவோம்.
You May Also Like : |
---|
பவானிசாகர் அணை வரலாறு |
மேட்டூர் அணை வரலாறு |