இந்த பதிவில் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்யும் “சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, சேவைகள் துறை உள்ளது. இத்துறையின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி
- இந்தியாவில் சுற்றுலா
- சேவைத் துறையின் பயன்கள்
- சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
- முடிவுரை
முன்னுரை
வங்கி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி, காப்பீடு, போக்குவரத்து, விடுதிகள், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகள், சேவைத்துறை என்றழைக்கப்படுகின்றன.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, சேவைகள் துறை உள்ளது. இத்துறையின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதை, மேலும் உயர்த்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சில நாடுகள், உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளன. இந்திய சேவைத்துறையின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இந்தியாவின் சேவைத்துறை வளர்ச்சி
உலகில் சேவைத்துறையில் மிகவும் விரைவான வளர்ச்சி கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது. 2012 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறை பிரிவில் முதல் 15 நாடுகளின் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பெற்றிருந்தது.
இந்த காலகட்டத்தில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு 65.9 சதவீதமாகும். வேலை வாய்ப்பு 44 சதவீதமாகும். இந்தியாவில் இதே ஆண்டில் சேவைத்துறையின் பங்களிப்பு 56.9 சதவிதமாகவும், வேலை வாய்ப்பு 26.1 சதவிதமாக இருந்தன.
இந்தியாவில் சுற்றுலாத் துறை
இந்தியாவின் சுற்றுலாத் துறை மிக முக்கியமான மற்றும் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு துறை ஆகும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.2% சதவிகித பங்களிப்பு செய்து வருகிறது.
இந்தியா சுற்றுலாத் துறை 36.7 லட்சம் வேலை வாய்ப்ப்புகளை வழங்குகிறது. அதிக வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்கு வருவதில் இந்தியா சர்வதேச பட்டியலில் 36-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பெரும்பாலானோர் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் நோக்கி வருகின்றனர்.
தில்லி, மும்பை, சென்னை, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய ஐந்து இடங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடங்களாக இருந்து வருகின்றன.
சேவைத் துறையின் பயன்கள்
சேவைத்துறை, நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி(GDP) வளர்ச்சி விகிதத்தில், 60 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. அதிகளவிலான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தர உதவுகின்றது.
உலகளவில் சேவைத்துறை இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் சுற்றுலா நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும். அந்நிய முதலீட்டை அதிகரிக்கச் செய்யும்.
இந்தியாவில் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
இந்தியாவைப் பொருத்தவரையில் சேவை நிறுவனங்களின் பங்கு மற்றும் வளர்ச்சி மூலமாகவே இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பேரிடர் மற்றும் தடை காலங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இடர்காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் போது அனைத்துவிதமான சேவை சார்ந்த தொழில்களையும் நேரடியாக பாதிக்கிறது.
சேவை சார் தொழில் கடன் கிடைப்பது சிரமம். வரி விதிமுறைகளில் குளறுபடிகள் உள்ளது. சேவைத் துறை சார்ந்த நிறுவனங்களில் ஆடம்பர வரி, இறக்குமதி வரி, சேவை வரி என மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு வரி கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
முடிவுரை
இந்திய சேவைத்துறையானது இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினை பாரிய பிரச்சினையாகவுள்ளது.
எனினும் சேவைத்துறையானது இதனை ஓரளவேணும் குறைக்கின்றது என்பதே நிதர்சன உண்மையாகும். நாட்டின் பொருளாதாரம் உயரும் போது ஏழைகளின் எண்ணிக்கை குறைவடையும்.
எனவே சேவைத் துறை தன்னலம் கருதாது செயற்படும் போது வறுமையற்ற இந்தியாவை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
You May Also Like : |
---|
வாக்காளர் பற்றிய கட்டுரை |
தீண்டாமை ஒழிப்பு கட்டுரை |