ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை

Jawaharlal Nehru Katturai In Tamil

இந்த பதிவில் நவீன இந்தியாவின் சிற்பி “ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தனது வாழ்நாளை இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த இவர் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவராவார்.

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. கல்வி மற்றும் திருமண வாழ்க்கை
  4. நேருவும் குழந்தைகளும்
  5. ஆற்றிய பணிகள்
  6. முடிவுரை

முன்னுரை

நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுள் ஒருவராவார்.

இந்திய நாட்டின் முதல் பிரதமர் என்ற பெருமையும் இவரையே சாரும். குழந்தைகள் அனைவரும் இவரை செல்லமாக “நேரு மாமா” என்று அழைப்பார்கள்.

அந்த அளவிற்கு குழந்தைகள் மீது நேருவும் நேருவின் மீது குழந்தைகளும் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். ஜவஹர்லால் நேரு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு

ஜவஹர்லால் நேரு அவர்கள் நவம்பர் 14 ஆம் திகதி 1889ஆம் ஆண்டு உத்தரா மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் மோதிலால் நேரு அவர்களுக்கும் சொரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.

இவரது குடும்பம் ஒரு செல்வந்த குடும்பம் ஆகும். செல்வந்தரின் மகனான நேரு, காந்தியின் கொள்கைகள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால், மேற்கத்திய ஆடைகள் அணிவதைத் தவிர்த்து, கதர் உடைகளையே உடுத்தினார்.

இவருக்கு விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்று இரண்டு சகோதரிகள் உள்ளார்கள்.

கல்வி மற்றும் திருமண வாழ்க்கை

தனது பட்டப்படிப்பினை இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தொடங்கினார். ட்ரினிட்டி கல்லூரியில் 1910இல் இயற்கை அறிவியல் பயின்றார்.

கேம்பிரிட்ஜ் மற்றும் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்தவர் தனது பட்டப்படிப்பை 1962-ல் வெற்றிகரமாக முடித்து தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.

ஜவகர்லால் நேரு அவர்கள் 1916 ஆம் ஆண்டு கமலா கவுல் என்ற பிராமின் இனத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கையில் பலனாக இந்திராபிரியதர்ஷினி என்ற ஒரு மகள் பிறந்தாள்.

கமலா நேரு அவர்கள் 20 ஆண்டுகால தனது திருமண வாழ்க்கையின் பின்னர் 1936 இல் புற்று நோய் வாய்ப்பட்டு இருந்தார். துணைவியாரின் இறப்பிற்கு பின்பு நேரு கடைசி காலம்வரை தனியாகவே வாழ்ந்தார்

நேருவும் குழந்தைகளும்

நேரு அவர்கள் குழந்தைகளின் மீது கொண்டிருந்த அன்பினாலும் அக்கறையினாலும், அவர்களின் வளர்ச்சிக்குப் அரும்பாடுபட்டார்.

கடும் பணிச்சூழலுக்கு இடையேயும் நேரு, குழந்தைகளிடம் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

குழந்தைகளின் கல்விக்காக ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டியதுடன், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கக் குழந்தைகளுக்கு இலவசமாக பால் மற்றும் உணவு வழங்குதல் போன்ற முயற்சிகளையும் மேற்கொண்டார்.

ஆற்றிய பணிகள்

காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, அவரது வழிகாட்டுதலில் சுதந்திரப் போராட்டங்களை முன்னெடுத்தார்.

1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் மற்றும் 1945ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

நேரு அவர்கள் ஆகஸ்ட் 15 1947 முதல் மே 27 1964 ஆண்டு வரை இந்திய நாட்டின் முதல் பிரதமராக பணியாற்றினார் 1951 இல் இந்திய திட்டக் குழுவை உருவாக்கி சுதந்திர இந்தியாவில் முதல் ஐந்தாண்டு திட்டத்தை வரைந்தார்.

முடிவுரை

தனது பணிக்காலத்தின் போது இந்தியாவை நல்வழியில் நடத்திச் சென்றவராவார். இவரது திட்டங்கள் யாவும் அக்காலத்தில் மட்டுமன்றி இன்றுவரை சமூக நலத்திட்டங்களுக்கு முன்னுதாரணமாகவும் உள்ளது.

இவரது இறப்பு 1964 ஆம் ஆண்டு நடைபெற்றது. எனினும் இன்றுவரை எல்லோர் மனங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார் என்றால் அதுமிகையாகாது.

You May Also Like :
அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை
கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை