டாக்டர் ராதாகிருஷ்ணன் பற்றிய கட்டுரை

dr radhakrishnan katturai in tamil

இந்தியக் கல்வியாளர் என்ற பெயரை உச்சரிக்கும் போது அனைவருக்கும் நினைவிற்கு வருவது இவரது பெயராகத்தான் இருக்கும். ஆசிரியர் பணி என்பது கல்வியை மட்டும் போதிப்பது இல்லை.

ஒழுக்கம், பண்பு, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகப் பணியை வழங்கிய ஒப்பற்றவராவார் ராதாகிருஷ்ணன்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பிறப்பு
  • சாதனைகள்
  • கல்வி பற்றிய கருத்துக்கள்
  • சமயங்கள் குறித்த பார்வை
  • முடிவுரை

முன்னுரை

மாணவர்களது வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டுவரும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியராகத் துவங்கி, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் எனும் அளவிற்கு உயர்ந்தவர்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆவார்.

மிகச் சிறந்த வாசிப்புத் திறனும், பேச்சுத் திறனும் உடைய இவர் உலகளவில் பிரபல்யமான தலைவராவார். மிகச் சிறந்த தத்துவப் பேராசிரியராக அறியப்படும் இவரது வாழ்க்கை கல்வியின் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றது.

பிறப்பு

இவர் 1888 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி திருத்தணியில் சர்வபள்ளி எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையார் வீராசாமி மற்றும், இவரது தாயார் சீத்தாம்மாள் ஆவார்.

இவர் தனது இளமைக் காலத்தை திருப்பதியிலும், திருத்தணியிலும் கழித்தார். திருப்பதி லததரன் கல்லூரியில் பள்ளிப் படிப்பையும், சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.

சாதனைகள்

இவர் மிகச் சிறந்த அர்ப்பணிப்புடன் ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வந்தார். 1918இல் மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியர், 1921 இல் சென்னை பரிடென்சி கல்லூரியில் உதவிப் பேராசிரியர், 1931 இல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பெனரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் போன்ற பதவிகளை வகித்தவராவார்.

மேலும் 1946இல் யுனெஸ்கோவிற்கான இந்திய தூதுவராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு பல வகையான பதவிகளை வகித்ததுடன் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார்.

கல்வி பற்றிய கருத்துக்கள்

இவர் மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என்று கூறினார். மேலும் கல்வி ஒன்றுதான் மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது என்று கல்வியை பெருமைப்படுத்தி இருந்தார்.

சமயங்கள் குறித்த பார்வை

இவருக்கு மிகவும் பிடித்த நூல் பகவத் கீதை எனப்படும் உலகப் புகழ்பெற்ற தத்துவ நூலாகும். சாதியம் என்னும் உணர்வு கூடாதது மற்றும், தீண்டாமை என்னும் அடக்குமுறை இந்து சமயத்திற்குத் தேவை இல்லாதது எனக் கருதினார். பிற மதங்களையும், சமயக் கொள்கைகளையும் மதித்த ஒரு ஒப்பற்ற தலைவராவார்.

முடிவுரை

ஆசிரியர் தொழிலை வெறும் தொழிலாகப் பார்க்காத ஒரு பெரிய சேவையாகக் கொண்டு இவர் பணியாற்றினார். இவரைப் போன்ற மனிதர்கள் இந்தியாவுக்குக் கிடைத்தமை வரமேயாகும். இவர் போன்ற தலைவர்கள் நமது நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கூற வேண்டும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது 86 ஆவது வயதில் ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், இவரது புகழ் என்றென்றும் மங்குவதில்லை.

இந்திய நாட்டின் ஐனாதிபதியாக உயர்ந்த போதும் தனது ஆசிரியத் தொழிலை மறக்காத இவர், தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்குப் பதிலாக செப்டெம்பர்-4 இனை ஆசிரியர் தினமாகக் கடைப்பிடித்தால் அது பெருமை வாய்ந்த பாக்கியமாகும் எனக் கூறி ஆசிரியர் தினமாக அறிவித்து ஆசிரியர்களின் நாயகனாக மாறினார்.

You May Also Like:

டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு

சமுதாய முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு கட்டுரை