கணக்கும் இனிக்கும் கட்டுரை

kanakkum inikkum katturai in tamil

பிறந்த நொடி முதல் நம் வாழ்க்கை கணக்குத் தொடங்கி விடுகிறது. வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணிதம் பிணைந்துள்ளது. இதனைப் புரிந்து கொண்டால் கணிதம் மிகவும் இலகுவானதே.

கணக்கும் இனிக்கும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கணிதம்
  • கணிதத்தின் தேவை
  • வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் கிரேக்கர் காலம் வரையான கணித வரலாறுப் பரம்பல்
  • கணிதத்தை இலகுவாக்க வழிமுறைகள்
  • முடிவுரை

கணிதம்

இன்று நம் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்ட கணிதத்தை சிலர் கற்பதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் கணிதம் சிக்கலானது என மனதில் ஆழமாக பதிந்து விட்டது. ஆனால் கணிதத்தை விரும்பி கற்கும் போது கணக்கும் இனிக்கும்.

கணிதத்தின் தேவை

பௌதீகச் சூழலைப் பற்றி அறிந்து கொள்வதற்குத் தேவையான கருவியாகத் தொழிற்பட்ட கணிதம் பொருட்களைக் கணக்கிடுதல், அளவிட்டு ஒப்பிடல், கொடுக்கல் வாங்கல் ஆகிய மனிதனின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருத்தமான முறையொன்றாக அமைந்து விட்டது.

கணிதம் உயிரியல், மருத்துவவியல், பௌதீகவியல் போன்றவற்றிற்கு மட்டுமன்றி தர்க்கவியல், சமூகவியல் என அனைத்துத் துறைகளுக்கும் முக்கியமானதாக இருக்குமளவிற்கு கணிதம் முக்கியம் பெற்றுவிட்டது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் கிரேக்கர் காலம் வரையான கணித வரலாறுப் பரம்பல்

கணிதமானது எப்போது ஆரம்பமானது என்பதை மிகச் சரியாகக் கூறமுடியாவிடினும், மிகவும் பழமையான வேடுவர் காலத்திலேயே “எண்ணுதல்” என்னும் உள ரீதியான செயற்பாடு மனிதனுள் தோன்றியது எனக் கருதப்படுகின்றது.

தாம் கொல்லும் மிருகங்களின் எண்ணிக்கை பற்றிய உணர்வு, நாட்கள் பற்றிய உணர்வு போன்றவை சிந்தனை ரீதியாக மனிதனில் ஏற்பட்டிருக்கும்.

படிப்படியாக முன்னேற்றமடைந்து பலவித எண்களை எண்ணுவதற்காகக் குறியீட்டுப் பயன்பாட்டிலும் மனிதன் பிற்காலத்தில் பழகிக் கொண்டதன் பேறாக பல்வேறு எண் குறியீட்டு முறைகள் தோன்றியுள்ளன.

விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்ட பபிலோனியர் காலத்தில் தினக்காட்டி (நாட்காட்டி) எண்ணுவது தொடர்பாக எளிய விளக்கம் பெற்றிருந்தனர்.

வட்டம், நாற்பக்கம், செவ்வகம் பேன்ற கேத்திரகணித அறிவும், செவ்வக வடிவிலான வயலின் பரப்பளவைக் கணிப்பதற்கு நீளத்தை அகலத்தால் பெருக்க வேண்டும் என்ற அறிவும் பபிபபிலோனிய காலத்தில் இருந்துள்ளது.

கி.பி 2500 ஆண்டளவில் வாழ்ந்த சுமேரிய வியாபாரிகள் நிறையும், அளத்தலும் முறையைத் தமது வியாபார நடவடிக்கைகளில் பயன்படுத்தினர்.

கிரேக்கர் காலத்தில் வாழ்ந்த பைதகரஸ் கணிதத்தில் எண்கணிதம், கேத்திரகணிதம், வானசாஸ்திரம், சங்கீதம் போன்ற நான்கு பகுதிகளுக்கும் உரியவராகத் திகழ்ந்தார். முக்கோண எண்கள், சதுர எண்கள், கூம்பக எண்கள் பற்றி முதலில் கூறியவராவார்.

கணிதத்தை இலகுவாக்க வழிமுறைகள்

கணிதத்தை இலகுவாக்கப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு வயதிலேயே சிறுசிறு கணக்கு விளையாட்டுக்களையும், மனக்கணக்குகளையும் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். கணித சமன்பாடுகளை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முடிவுரை

உலகம் முழுவதும் கணிதத்தால் ஆக்கப்பட்டுள்ளது எனலாம். வாழ்க்கை முழுவதும் கணிதம் இருக்கின்றது. சாப்பிடும் உணவு, உடுக்கும் உடை, பேசும் சொற்கள் அனைத்திலும் கணிதம் உள்ளது.

ஆனால் இந்தத் கணிதம் என்றவுடன் பெரும்பாலான மாணவர்கள் பயங்கொள்கின்றனர். கணிதம் என்றவுடன் பயம் வருவதற்கான காரணம் யாதெனில், எண்கள் புரியாமல் போதலுடன், எண்கள் மட்டும் கணக்கு என நினைப்பதே இதற்குக் காரணமாகும்.

கணிதத்தை விரும்பிப் படிக்கும் போதும், எளிய முறைகளைக் கையாண்டு, கணிதப் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டால் கணக்கும் இனிக்கும்.

You May Also Like:

இணைய வழி கல்வி கட்டுரை

மூன்றாவது கண் கல்வி கட்டுரை