ஔவையார் எழுதிய நூல்கள்

ஔவையார் இயற்றிய நூல்கள்

அனைவரும் அறிந்த பெண் புலவர்களுள் மிக முக்கியமானவர் ஔவையார் ஆவார். ஔவை அல்லது அவ்வை என்ற சொல் “அவ்வா” என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடையே நிலவி வருகின்றது.

ஔவை என்ற சொல்லின் பொருள் மூதாட்டிப்பெண் என்பதாகும். பிற்காலத்தில் ஔவை என்ற சொல் ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கிற்று.

ஔவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் நான்கு புலவர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகின்றது.

ஔவையார் பற்றி சிறு குறிப்பு

முதலாவது ஔவையார் எனப்படுபவர் சங்ககாலத்தில் வாழ்ந்தவர். இவர் தொண்டை நாட்டு அரசனான அதியமான் என்பவரின் நெருங்கிய நண்பர் ஆவார்.

ஒரு சமயம் அதியமானிடத்தில் நீண்ட நாட்கள் வாழக் கூடிய சக்தி பெற்ற நெல்லிக்கனி ஒன்று கிடைத்த போது அந்த நெல்லிக் கனியை தமிழ்ப்பற்று மிக்க ஔவையார் இந்த மண்ணில் நீண்ட காலம் வாழ வேண்டுமென வழங்கியதாக வரலாற்றுக் கதைகளில் கூறப்படுகின்றது.

இந்த காலத்தில் வாழ்ந்த ஔவையார் சங்ககால இலக்கியங்களுள் 59 இலக்கியங்கள் எழுதியுள்ளதாக அறியப்படுகின்றது.

இரண்டாவது ஔவையார் பக்தி கால ஔவையார். இவரே விநாயகர் அகவலைப் பாடியுள்ளார். விநாயகர் அகவலை துதிப்போர்கள் இந்நூலை முதன்மை நூலாகக் கொண்டு படிப்பார்கள்.

மூன்றாவது ஔவையார் குழந்தைகளுடன் குழந்தைகளுக்காக வாழ்ந்தவர். குழந்தைகளுக்கு வேண்டிய நீதிக் கருத்துக்களை பாட்டு வடிவில் அருளியவர். இவர் எழுதிய நீதி நூல்களாவன ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்றனவாகும்.

நான்காவது ஔவையார் தனிப்பாடல்களை மிகுதியாபாடியவர் ஆவார். தனிப்பாடல்கள் மிகச்சிறந்த கருத்துக்கள் உடையவை. இந்த ஔவையார் அனைவரும் அறிந்த “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்ற கதையுடன் தொடர்புடையவர் ஆவார்.

ஔவையாரின் ஞாபகார்த்தமாக இந்தியாவின் மெரீனா கடற்கரையில் ஔவையார் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஔவையார் எழுதிய நூல்கள்

  • ஆத்தி சூடி
  • கொன்றை வேந்தன்
  • மூதுரை
  • ஞானக்குறள்
  • நாலு கோடிப் பாடல்கள்
  • நல்வழி நாற்பது
  • விநாயகர் அகவல்
  • அசதிக்கோவை
  • பந்தனந்தாதி

இவற்றில் அசதிக்கோவை மற்றும் பந்தனந்தாதி காலத்தால் அழிந்து நமது கைக்கு எட்டாமல் போய்விட்டது.

You May Also Like :

திருமூலர் இயற்றிய நூல்கள்

விசுவாமித்திரர் வரலாறு