திருமூலர் இயற்றிய நூல்கள்

திருமூலர் எழுதிய நூல்கள்

சைவசித்தாந்தம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் திருமூலரும் ஒருவர் ஆவார்.

“நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனாரினால் பாடப்பட்ட அடியார் திருமூலர், திருமூல தேவர், திருமூல நாயனார் என்றும் வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகின்றார்.

திருமூலர் இயற்றிய நூல்கள்

  • திருமூலர் காவியம் 8000
  • சிற்பநூல் 1000
  • சோதிடம் 300
  • மாந்திரீகம் 600
  • வைத்தியச் சுருக்கம் 200
  • சூக்கும ஞானம் 100
  • சல்லியம் 1000
  • பெருங்காவியம் 1500
  • யோக ஞானம் 16
  • காவியம் 1000
  • தீட்சை விதி 100
  • ஆறாதாரம் 64
  • கருங்கிடை 600
  • கோர்வை விதி 16
  • பச்சை நூல் 24
  • விதி நூல் 24
  • தீட்சை விதி 18
  • திருமந்திரம் 3000

திருமூலரின் வரலாறு

கைலையில் சிவபெருமானைத் தரிசித்து ஒழுக்க நெறியில் வாழக்கூடிய சிவயோகிகள் பலர் வாழ்கின்றனர். அந்த சிவயோகிகள் ஒருவர் நந்திதேவருடைய மாணவன் அவரிடத்தில் சிவாகமங்களைக் கற்றுத் தேர்ந்த மிகப்பெரும் ஞானி.

ஒருமுறை சிவபெருமானின் அனுமதியுடன் சிவனின் அனைத்து திருத்தலங்களையும் தரிசிப்பதற்காக நேபாளத்தின் பசுபதி ஆலயத்திலிருந்து பயணத்தை தொடங்கினார்.

காவிரி ஆற்றைக் கடக்கும் வேளையில் இவர் ஒரு பசுக்கூட்டம் தாங்க முடியாத துயரத்தால் கதறிக்கொண்டு இருப்பதை கவனித்தார். அவ்வாறு பசுக்கூட்டம் கதறியமைக்கு காரணம் அவற்றை மேய்க்கும் மூலன் எனும் இடையன் பாம்பு கடித்து இறந்திருந்தமை ஆகும்.

கூடு விட்டு கூடு பாயும் திறமை பெற்றவர்கள் சிவயோகிகள் ஆவார்கள். இவ்வாறு அந்த பசுக்கூட்டத்தின் மீது இரக்கமுற்ற யோகி தனது உடலை விட்டு வெளியேறி மூலனின் உடலுக்குள் சென்று உயிர் பெற்று எழுந்தார். மூலனைக் கண்டதும் பசுக்கள் ஒவ்வொன்றும் தமது நாக்கினால் நக்கி தமது அன்பினை வெளிப்படுத்தின.

இவ்வாறே பசுக்கூட்டத்தை மூலனின் வீட்டில் கட்டிவிட்டு திரும்புகையில் மூலனின் மனைவி அவனைத் தடுத்தாள். மூலன் நடந்தவை எல்லாவற்றையும் அவளிடம் சொல்ல ஆனால் அவள் எதனையும் நம்பாமல் ஊரைக் கூட்டினாள்.

மூலனின் உடம்புக்குள் இருந்த யோகி நடந்த உண்மையை ஊர் மக்களுக்கு விளக்கிய பின்னர் மூலனின் மனைவியை ஊர்மக்கள் சமாதானம் செய்தனர்.

காவிரி ஆறு திரும்பிய மூலனின் உடலுக்குள் இருந்த யோகி தனது நிஜ உடலை காணாது தேடினார். பின்னர் இந்த உடம்பில் இருந்தே இறைவன் சேவை செய்ய அனுப்பியுள்ளார் என்ற உண்மையை புரிந்து கொண்டார்.

திருமந்திர சிறப்பு

சிவபெருமான் அருளிய சிவாகமங்கள் அனைத்தையும் எல்லோருக்கும் புரியும் படியும் தமிழில் இலகுவான மொழிநடையில் ஓராண்டுக்கு ஒருமுறை தவமிருந்து ஓராண்டு செய்த தவத்தின் வலிமையையும் சிவாகமங்களின் தார்ப்பரியத்தையும் சேர்த்து ஒரு பாடலாக எழுதினார்.

இவ்வாறு இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பே திருமந்திரம் ஆகும். மூலன் என்ற உடலில் இருந்து அற்புதமான ஆகமங்களை நமக்கு அருளிய காரணத்தினால் திருமூலதேவர் என்ற பெயராலும் அழைக்கப்பட்டார். இவருடைய திருநாள் ஐப்பசி அஸ்வினி ஆகும்.

You May Also Like :

ஆதி சங்கரர் வரலாறு

தாயுமானவர் வரலாறு