நம்மாழ்வார் எழுதிய நூல்கள்

நம்மாழ்வார் இயற்றிய நூல்கள்

வகுளாபரணன், பராங்குசன், காரிமாறன், பிரான், திருவாய்மொழிபெருமாள், குருகைப்பிரான், குருகூர் நம்பி போன்ற பல வேறு பெயர்களால் அழைக்கப்பட்டவர் நம்மாழ்வார் ஆவார்.

பெருமாளின் அவதாரமாக மக்களால் மதிக்கப்படுபவர் இந்த நம்மாழ்வார் சுவாமிகள் ஆவார். திருநகரி என்ற ஊர் நம்மாழ்வார் சுவாமிகளின் திருத்தலமாக விளங்குகின்றது.

சைவ நாயன்மார்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் எந்தளவிற்கு சைவப்பற்று மிகுந்தவராகக் காணப்பட்டாரோ அதே போன்று வைணவ சமயத்தில் நம்மாழ்வார் காணப்படுகின்றார்.

இவருடைய தந்தை பெயர் காரி, தாயார் பெயர் உடையநங்கை. நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் தவித்த இருவரும் பெருமாளை தூய மனதுடன் ஆத்மார்த்தமான உள்ளன்போடு வணங்கியதன் பயனாக இவர்களுக்கு நம்மாழ்வார் குழந்தையாக கிடைக்கப்பெற்றார்.

ஆனால் நம்மாழ்வார் சாதாரண குழந்தைகளைப் போல காணப்படவில்லை. குழந்தையான நம்மாழ்வார் சிரிப்பு , அழுகை, பேச்சு, பசி போன்ற எந்தவொரு உணர்வுமின்றி ஆனால் ஆரோக்கியமாக வளர்ந்து வந்தது.

இவர் ஒரு தெய்வக்குழந்தை என்பதை உணர்ந்த பெற்றோர் ஓர் ஆலயத்தில் புளியமரப் பொந்தில் வைத்து விட்டு சென்று விட்டனர். 16 வருடங்களாக புளிய மரத்திலேயே தியான நிலையில் இருந்தவர் தனது 16 ஆவது வயதில் பாசுரங்களைப் பாடியருளினார்.

இவர் எழுதிய பிரபந்தங்கள் 1296 பாசுரங்களாக மலர்ந்துள்ளன. திருவிருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும், திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும் எமக்கு அளித்துள்ளார்.

வேதங்களான இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் ஆகியவற்றைக் கற்று தெரிந்து கொள்ளும் அறிவும், இவருட பாசுரங்களைக் கற்றுத் தெரிந்து கொள்ளும் அறிவும் சம அளவாகும்.

நாராயணராலேயே இவர் நம் ஆழ்வார் என்று சொன்ன காரணத்தினால்தான் இன்று வரை ஆழ்வார்கள் என்று சொன்ன உடனேயே எல்லோருக்கும் ஞாபகத்தில் வருபவர் நம்மாழ்வார் ஆவார்.

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட நம்மாழ்வாருக்கு “சடகோபர்” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

சடம் என்ற வாயு தன்னிடம் நெருங்காதபடி கோபித்துக் கொண்ட காரணத்தினால் சடகோபர் என்ற பெயரும் அதனை மாற்றியதால் மாறன் என்ற பெயரும் இவருக்குரிய சிறப்புப் பெயர்களாகும்.

இவருடைய பாசுரங்களைப்பாடி நாமும் அருளாசியைப் பெறுவோமாக..!!

நம்மாழ்வார் எழுதிய நூல்கள்

  • திருவாய்மொழி
  • பெரிய திருவந்தாதி
  • திருவாசிரியம்
  • திருவிருத்தம்

You May Also Like:

ஔவையார் எழுதிய நூல்கள்

திருமூலர் இயற்றிய நூல்கள்