தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை

tamil nadu varalaru katturai in tamil

இந்த பதிவில் “தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை” பதிவை காணலாம்.

தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் உருவாகுவதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டமும் பல உயிரிழப்புக்களும் தியாகங்களும் உள்ளன.

தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட வரலாறு
  • தமிழ்நாடு எதிர்கொண்ட சவால்
  • போராட்ட தலைவர்கள்
  • முடிவுரை

முன்னுரை

இந்திய விடுதலைக்குப் பிறகு சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கியமான பிரச்சினை மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்ததுதான்.

நாடு சுதந்திரம் பெற்றபோது பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த அதே நிர்வாக வசதிகளுடன் மாகாண அரசுகளும் அதன் ஒருங்கிணைப்பான மத்திய அரசும் அமைக்கப்பட்டன. அது சுதந்திரத்திற்கு முந்தைய நிர்வாக அமைப்பாக காணப்பட்டது.

ஆயினும் நாட்டில் பெரும்பாலான பகுதிகள் மொழி அடிப்படையில் தனித்து இருந்ததால் மொழி அடிப்படையில் தனி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவற்றில் ஒன்றான தமிழ்நாடு உருவான வரலாறு பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட வரலாறு

மாநிலங்கள் அனைத்திலும் மொழி அடிப்படையிலான மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதால் 1948 ஜுன் மாதம் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றிய சாதக பாதகங்களை ஆராயக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

“மொழிவாரி மாநிலம் அவசியமில்லை” நிர்வாக வசதிக்கேற்பத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்று அந்தக் குழு பரிந்துரைத்தது. இதையே அக்கால தேசத்தலைவர்களும் வலியுருத்தினர்.

இது மக்களை கொந்தளிக்க வைத்தது. அதனால் இதை எதிர்த்து ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் தனி மாநிலம் வேண்டும் எனக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டன.

தமிழ்நாடு எதிர்கொண்ட சவால்

ஏனைய மாநிலங்கள் அனைத்திற்கும் அந்தந்த மாநிலத்தவர் விரும்பிய பெயரே சூட்டப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ‘மதராஸ்’ என்ற பெயரே மாற்றமன்றி தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அதனால் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டங்களும் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்தன.

சங்கரலிங்கனார் என்பவர் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். இதனால் போராட்டம் உச்சமடைந்தமையால் இறுதியாக 1969 தை 14ம் திகதி தமிழ்நாடு என அதிகார பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

போராட்ட தலைவர்கள்

சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1938 இல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற மாநாட்டில், மறைமலையடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை எழுப்பினர்.

பிறகு சிலம்புச் செல்வர் ம.பொ.சி ‘தமிழ் மாநிலம்’ வேண்டும் என்று மாநாடுகள் நடாத்தி வலியுருத்தி வந்தார். மேலும் அறிஞர் அண்ணா, கர்ம வீரர் காமராஜர், ஜீவானந்தம் போன்றோரும் போராட்டத்தை முன்னின்று வழி நடத்திச் சென்றனர்.

அனைத்திற்கும் மேலாக தீவிர காந்திய வாதியான தியாகி சங்கரலிங்கனார் இதற்காக உண்ணாவிரதம் இருந்து தம் இன்னுயிரை துறந்தமை மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முடிவுரை

‘மதராஸ் மாநிலம்’ என இருந்த நம் மாநிலத்திற்கு ‘தமிழ் நாடு’ என பொருத்தமான மொழி சார்ந்த பெயரை சூட்டியவர் அறிஞர் அண்ணா ஆவார். இப்பெயர் மாற்றும் விழாவானது 1968 ஆம் ஆண்டு மார்கழி 1 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் உருவாகுவதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டமும் சில உயிரிழப்புக்களும் தியாகங்களும் செய்யப்பட்டு உள்ளன என்பது எமக்கு வரலாறு சொல்லும் உண்மையாகும்.

You May Also Like:
தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை
தமிழ் இலக்கிய வரலாறு