பொழுதுபோக்கு சாதனங்களில் பிரதான இடத்தை வகிப்பது தொலைக்காட்சியே ஆகும். அதாவது தொலைக்காட்சி இல்லாத இடமே இல்லை என்றளவிற்கு இதனது பாவனையானது அதிகரித்துக் கொண்டே காணப்படுகின்றது. தொலைக்காட்சியானது இன்று மக்களோடு ஒன்றிய ஒரு சாதனமாகவே திகழ்கின்றது.
தொலைக்காட்சியின் நன்மை தீமைகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பொழுதுபோக்கு சாதனமாக தொழிற்படும் தொலைக்காட்சி
- தொலைக்காட்சியின் நன்மைகள்
- தொலைக்காட்சியின் தீமைகள்
- தொலைக்காட்சியின் வளர்ச்சிப்போக்கு
- முடிவுரை
முன்னுரை
இன்று தொலைக்காட்சியானது தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக பல மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றது.
மேலும் பல தொலைவில் உள்ள விடயங்களை வீட்டில் இருந்து கொண்டே பார்ப்பதற்கான சிறந்ததொரு சாதனமாகவும் தொலைக்காட்சியே திகழ்கின்றது. இன்று தொலைக்காட்சியானது அனைவராலும் விரும்பக்கூடியதொரு சாதனமாகவே காணப்படுகின்றது.
பொழுதுபோக்கு சாதனமாக தொழிற்படும் தொலைக்காட்சி
பொழுதுபோக்கிற்கான சிறந்த சாதனமாக தொலைக்காட்சியே திகழ்கின்றது. அதாவது குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரினதும் பொழுதுபோக்காக காணப்படுவது தொலைக்காட்சி பார்த்தலாகும்.
ஏனெனில் செய்திகள், ஆடல், பாடல், சிறுவர் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியானது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று பலர் தொலைக்காட்சியால் ஈர்க்கப்பட்டு காணப்படுகின்றனர்.
தொலைக்காட்சியின் நன்மைகள்
தொலைக்காட்சியானது பல்வேறு நன்மைகளை கொண்டமைந்தவையாக திகழ்கின்றன. அந்த வகையில் தொலைக்காட்சியின் நன்மைகளை நோக்குவோமேயானால், தொலைவில் உள்ள நிகழ்வுகளை வீட்டில் இருந்த வண்ணமே இலகுவாக அறிந்து கொள்ள தொலைக்காட்சியானது உதவுகின்றது.
மேலும் கல்வியறிவு, விவாதப் போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், சமையல் குறிப்புக்கள், அழகு சாதன விடயங்கள் என பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கக் கூடியதாக காணப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் அரசியல் மாற்றங்கள், தற்கால நிகழ்வுகள் என்பன பற்றியும் உடனுக்குடன் தகவல்களை பெற்றுக் கொள்ள முடிகின்றது.
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொலைக்காட்சியின் பணியானது அளப்பரியதாகும். அதாவது பல நிகழ்ச்சிகளை வழங்கி சமூகத்தின் ஒற்றுமையை பேண தொலைக்காட்சியானது துணை புரிகின்றது.
தொலைக்காட்சியின் தீமைகள்
தொலைக்காட்சியின் மூலமாக எவ்வாறு நன்மை உள்ளதோ அதே போன்று பல தீமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
அதாவது இன்று குழந்தைகளானவர்கள் தனது கல்வி செயற்பாடுகளை விட்டு விட்டு முழு நேரமாக தொலைக்காட்சியில் சிறுவர் திரைப்படங்களை பார்ப்பவர்களாகவே காணப்படுகின்றனர்.
இதன் காரணமாக தனது கற்றல் நடவடிக்கையில் கவனம் செலுத்தாது தொலைக்காட்சியிலேயே நேரத்தை செலவிடுகின்றனர்.
மேலும் பல மனிதர்கள் தங்களது நேரங்களை தொலைக்காட்சிக்கே வழங்குவதால் அன்றாட தேவைகளை நிறைவேற்றாது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அது போன்று திரைப்படங்களில் போதைப்பாவனை, வன்முறை காட்சிகள் இடம் பெறுவதன் காரணமாக இதனை பார்ப்பவர்கள் தவறான நடத்தைக்கு தள்ளப்படுகின்றனர்.
செலவுகளை அதிகரித்தல், எதிர்மறையான எண்ணத்திற்கு வழிவகுத்தல் என பல தீமைகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் தொலைக்காட்சி பாவனையானது காணப்படுகின்றது.
தொலைக்காட்சியின் வளர்ச்சிப்போக்கு
அனைவராலும் விரும்பப்படக் கூடிய தொலைக்காட்சியானது இன்று பல புதிய தொழில் நுட்பத்தை கொண்டே வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
தொலைக்காட்சியானது ஆரம்பத்தில் கருப்பு, வெள்ளை நிறங்களிலே படங்களை ஒளிபரப்புச் செய்தது. ஆனால் இன்று தொலைக்காட்சியானது பல்வேறு வடிவங்களில் பல வண்ணங்களை கொண்டதாக காணப்படுகின்றது.
தொலைக்காட்சியின் வளர்ச்சியானது எதிர்வரும் காலங்களில் இன்னும் பல புதிய மாற்றங்களை கொண்டே காணப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
முடிவுரை
தொலைக்காட்சியினூடாக எவ்வாறு நன்மைகள் காணப்படுகின்றதோ அதே போன்று தீமைகளும் காணப்படுகின்றன. எனவேதான் தீமையான விடயங்களை தவிர்த்து நன்மையானவற்றை மட்டும் தன்னகத்தே எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.
மேலும் தொலைக்காட்சியை முழுநேரப்பாவணையாக பார்வையிடாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துவதே அனைவருக்கும் சிறந்த வழியாகும்.
You May Also Like: